அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய அரசு மாநில அரசுகளின் உதவியுடன் பொது இடங்களில் கருத்துக் கேட்டதில் தமிழ்நாட்டில் மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய 3 இடங்களில் மட்டும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது.

அதுவும் கூட மிகவும் இரகசியமாக தேர்வு செய்தவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தினர் மட்டும் கருத்து கேட்பு மையங்களுக்கு சென்று போராடி உள்ளே சென்று கருத்துத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அறிக்கை யாரும் வெளியிடாமலே வெளிவந்தது. இந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொன்டதாகவும் கூறவில்லை.

நிராகரிக்கப்படுகிறது என்று அறிவிக்கவும் இல்லை. ஆனால் அறிக்கை அனைவர் கையிலும் கிடைத்துவிட்டது. எப்படி வெளிவந்தது என்ற உண்மை இன்று வரை வெளிவரவில்லை. “இது அதிகாரப்பூர்வமான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை இல்லை. இதன் மீது விவாதம் தேவையில்லை” என்று கூறவும் இல்லை. இந்த வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, “புதிய வரைவுக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்” என்ற சிறு ஆவணத்தை மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் வெளியிட்டது.

இதுவும் கூட டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அறிக்கையின் அடிப்படையில் ஆனதா? அதன் சுருக்கமா? வேறு புதிய ஆவணமா? யார் தயாரித்தது என்று எந்த விபரமும் அந்த ஆவணத்தில் இல்லை. டி.எஸ்.ஆர் அறிக்கையின் மீது நாம் கொடுத்த திருத்தங்கள் எதுவும் ஏற்கப்படவும் இல்லை. ஆனால் டி.,எஸ்.ஆர் அறிக்கையின் அத்தனை அம்சங்களும் இதில் சுருக்கமாக இடம்பெற்று இருந்தது.

இதன் பின்னர் தான் தற்போதைய கஸ்தூரி ரங்கன் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் உட்பட யாரும் கல்விப் புலத்தில் நிபுணத்துவம் பெற்றது போல் தெரியவில்லை. கல்விப் புலத்தில் அவர்களது நிபுணத்துவத்தை சோதிக்க பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. கூகுளில் சென்று இவர்கள் பெயர் பதவிகளை பதிந்து கல்விப் புலத்தில் இவர்களது பங்களிப்பு என்று சொடுக்கினாலே போதும் உண்மை வெளிவந்துவிடும்.

தற்போது கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் மீது ஒரு நியாயமான பிரதிபலிப்பை வழங்க போதுமான கால அவகாசம் வேண்டும் என்ற நியாயமான குரல் வலுவாக எழுந்துள்ளது. அனைத்து இந்திய மொழிகளிலும் அறிக்கையை வெளியிட்டாலே கருத்து கூறல் சாத்தியம். மாநில மொழிகளில் வெளிவந்த பிறகு போதுமான கால அவகாசம் கொடு என்ற உரிமைக் குரலும் மிகவும் அர்த்தம் பொதிந்தது.

மற்றொருபுறம் கல்வி செயல்பாட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த தகவல் தொடர்பு சாதனங்கள் கருத்தரங்கம் தீர்மானம் என்று மக்களிடம் இந்த பிரச்சினையை எடுத்து சென்று வருகின்றனர். இந்த நேரத்தில் கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை அறிவியல்பூர்வமானது அல்ல என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டிய தேவை உள்ளது.

இந்திய நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக தயாரிக்கப்படும் எந்த ஒரு கொள்கை குறிப்பும் இரண்டு முக்கியமான அடிப்படை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒன்று, இந்திய அரசியல் சாசன விழுமியங்களை நிறைவேற்றும், திசை வழியில் அது பயணிக்க வேண்டும். இரண்டாவதாக இந்திய நாட்டின் மக்கள் சந்திக்கும் 21ஆம் நூற்றாண்டு சவால்களை சந்திக்கத்தக்கதாக அது அமைய வேண்டும்.

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு மற்றும் சமவளர்ச்சிக்கு வித்திடும் கூறுகள் இருக்க வேண்டும். இந்த வரைவுக் கொள்கை 500 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. சமகால அனைத்துக் கல்விப் பிரச்சனைகள் பற்றியும் ஆமோதிக்கிறது. ஆனால் மேற்படி இலக்கை நோக்கிய திசை வழியாக இந்த வரைவுக் கொள்கை இல்லை என்பது படிக்கும் போது தெளிவாகிறது.

அதேபோல் ஒரு கொள்கை ஆவணம் இவ்வளவு பக்கங்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதைப் பார்க்கவும், படிக்கவும், சலீப்பூட்டுகிறது. மலைப்பாக இருக்கிறது. “அடேங்கப்பா, இவ்வளவு சிரமப்பட்டு தயாரித்து இருக்கிறார்களா? இத்தனை பக்கங்களில் இந்திய கல்வி வளர்ச்சிக்காக சிரத்தை எடுத்து இருக்கிறார்களா?” என்று பிரமிக்க வைக்கிறது. அதே சமயம் , பக்கங்களைப் பார்த்தே படிக்காமல் வைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

இது ஒரு சூட்சமமாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்த ஆவணத்தின் மொழி ஆளுமை, பக்கங்கள், சமகால பிரச்சனைகளை சாரையா சாரையாக அடுக்கி காட்டுதல் எல்லாமும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ஆனால் இது கானல் நீர் என்பதை கண்டிப்பாக மக்களிடம் சொல்லியாக வேண்டும்.

தற்போது இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவர் நிரஞ்சன் ஆராதயா. இவர் ஒரு முன்மாதிரி இந்தியக் கல்விக் கொள்கையை வகுத்தளித்து உள்ளார். இணையதளத்தில் அதனை அனைவரும் காணலாம். இது மிக மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்டதே.

அதேபோல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட 42 அமைப்புக்கள் “கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு” என்ற பெயரில் ஒரு கூட்டு இயக்கத்தை உருவாக்கியது. டி.எஸ்.ஆர் அறிக்கையில் அடிப்படை மாறுதல்களைக் கோரி இந்த இயக்கம் போராடியது.

குறுகிய காலத்தில் தமிழ் நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பெரும் கிளர்ச்சியை இவ்வியக்கம் உருவாக்கியது. மக்களுக்கான ஒரு கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக “மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம்” ஒன்றை தயாரித்து வெளியிட்டது. மத்திய அரசைப் போலவே ஒரு கல்விக் கொள்கை குழுவை அமைத்தது. இதன் தலைவர் பேராசிரியர் வசந்திதேவி.

செயலாளர் ஆயிஷா இரா. நடரசன். மாற்று திறனாளிகள் பிரச்சினைகளை பரிந்துரை செய்ய அவர்களில் கல்வியில் சிறந்தோரை அதில் உறுப்பினர் ஆக்கியது. பழங்குடி மக்கள் கோரிக்கைகளை வரையறுக்க அந்த சமூக செயல்பாடளர்களை நியமித்தது. இக்கூட்டமைப்பு இந்த மாற்றுக் கல்விக்கான மக்கள் சாசனத்தை வெளியிடப்பட்டது. இது வெறும் 64 பக்கங்களைக் கொண்டதே.

வாய்ப்பு கிடைப்போர் இதனைப் படித்து பாருங்கள், இந்திய அரசியல் சாசனக் கனவை நிறைவேற்றும் அனைத்து அம்சங்களும் அதில் இருக்கிறது. சமகால சவால்களை சந்திக்கும் உத்திகளும் வகுக்கப்பட்டுள்ளது. இவற்றோடு புதிய வரைவுக் கொள்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே இதன் மோசடிகள் அம்பலமாகும்.

ஒரு புதிய கல்விக் கொள்கையை முன்வைக்கப் போது முந்தைய கல்விக் கொள்கை குழுக்களின் சாரம். அதன் அமலாக்கம். அதன் பலவீனங்கள் என்ன? விளைவுகள் என்ன? இன்றைய கல்வி நிலைக்கு என்ன காரணம்? அதனை எப்படி களைவது என்பதற்கு இந்த பகுப்பாய்வு பயன்படும்.அறிக்கையின் முதற்பகுதி இதன் சுருக்கமாக இருக்க வேண்டும். இதன் வழியாகத்தான் புதிய கல்விக் கொள்கை ஒன்றை முன்வைக்க முடியும்.

வரைவுக் கொள்கை குழுவினர் எத்தனை அரசுப் பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டார்கள்? கற்றல் கற்பித்தலை உற்று நோக்கினார்களா? இவர்களது கள அனுபவம் என்ன? உள்கட்டமைப்பு என்ன? கற்றல் உபகரணங்கள் என்ன? என்று பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் அரசுக் கல்லூரிக்கும் அரசு பல்கலைக்கழகங்களுக்கும் பார்வையிட வேண்டும். அவர்களிடம் சமகால சிக்கல்களை அலசி ஆராய வேண்டும். இவையெல்லாம் மருந்துக்குக் கூட நடைபெற்றதாக தெரியவில்லை.

கஸ்தூரிரங்கன் குழு 217 நிபுணர்களை சந்தித்ததாக பட்டியலிட்டுள்ளது. இவர்கள் நிபுணர்களா இல்லையா? என்பது தனியாக விவாதிகப்பட வேண்டியது. இவர்களில் கஸ்தூரி ரங்கன் வசிக்கும் பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 30 விழுக்காடு நிபுணர்களை சந்தித்ததாக கணக்கிட முடிகிறது. அதே போல் மும்பையைச் சேர்ந்த நிபுணர்கள் 20 விழுக்காட்டினர். இது எப்படி நியாயமானதாக அறிவியல் பூர்வமாக இருக்க முடியும்? கல்வியில் நிபுணர்கள் துறைவாரி நிபுணர்கள் நாடு முழுவதும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற மதிப்பீடு செய்ய ஏதேனும் கணக்கீடு குழுவிடம் இருந்ததா? பட்டியல் இருக்கிறதா?

இது போன்ற ஆய்வுகளுக்கும் மாதிரிக் கூறெடுப்புகளுக்கும் செல்லும் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி பல்வேறு நடைமுறைகள் விதிகள் இருக்கின்றன. கோட்பாடுகள் இருக்கின்றன. இந்த விதிகள் பின்பற்றப்பட்டால் தான் மதிப்பீடுகள் நல்ல பயனைத் தரும். நம்பகத்தன்மை உள்ளவையாக அமையும். தவறுகள் குறையும். இத்தகைய கருத்துச் சேகரிப்பு, மதிப்பீடுகள் அறிவியல் பூர்வமாக இருக்கும். ஆனால் கஸ்தூரி ரங்கன் குழுவினரால் இந்த விதிமுறை முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் கடந்த முறை இந்த அரசு பதவிக்கு வந்தவுடன் உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு கல்வி தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரித்தது. அதன் செயல்திட்டத்தில் உள்ள எல்லா அம்சங்களும் இந்த வரைவுக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளது. நிதி அயோக் அமைப்பின் செயல் திட்டம் அதன் சொந்த தயாரிப்பு மட்டுமல்ல.

உள்நாட்டு பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் அக்கறையுள்ள உலகவங்கி உலக வர்த்தக அமைப்பு மற்றும் அதன் சேவை வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் ஆகியவற்றின் செயல் திட்டங்களும் அதில் சேர்ந்தே இருக்கிறது. எனவே தான் சுமார் 500 பக்க அறிக்கையின் உள்ளடக்கம் இவ்வாறாக இருக்கிறது.

1) மூன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.2) ஒன்பதாம் வகுப்பு முதல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவத் தேர்வு.3) எந்தவித கல்லூரியிலும் சேர்ந்து பயில நுழைவுத்தேர்வு.4) படித்து முடித்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரும் தேர்வுகள். 5) பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் நெறிமுறை நீக்கல். 6) அனைத்து கல்லூரிகளும் தமக்கு தாமே பட்டம் கொடுத்துக் கொள்ளும் அங்கீகாரம்.7) வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிவப்பு கம்பளம். 8) சமஸ்கிருதம் இந்தி ஆகியவற்றுக்கு தேசத்தின் எல்லைக் கோடுகள் வரை நீட்சி அடைய அதிகாரம் அளித்தல். சமுக நீதியை சாய்த்து விடுதல் 9) குழந்தைகள் மனதில் பழங்கதைகள் பழம் பெருமையைக் கூறி புராண காலத்தின் குப்பைகளை தினித்தல்.

கற்றல் சொயல்பாடுகளுக்கு கணக்கின்றி உதவி செய்கிறோம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த தன்னார்வலர்களைக் கொண்டு நிரப்புதல் சமூக நீதிக்கு சமாதி கட்டுதல் என்ற பல அராஜகமான செயல் திட்டத்தை தன்னகத்தே வரைவுக் கல்விக் கொள்கை என்ற பெயரில் வைத்துக் கொண்டு செயல்பட பொது மக்களின் ஒப்புதல் பெற கபட வேடம் பூண்ட அறிக்கை நம் முன் உள்ளது. புதிய வரைவு கல்விக் கொள்கை முன் வைக்கும் பரிந்துரைகள் முழுவதும் அமலாக்கம் பெற்றால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சான்று ஆதாரம் உள்ளது.

2001 ஆம் ஆண்டு குஜராத்தில் பதவியேற்ற தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் பள்ளிக் கல்வி பாடங்களுக்கு துணை பாடங்களை பரிந்துரை செய்தார். அவை கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டது.

இதன் விளைவாக இன்றைய குஜராத் அரசுப் பள்ளிகளில் நிலைமை மிகப் பரிதாபமாக இருக்கிறது. கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் 63 அரசுப் பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு 79 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 10 விழுக்காட்டிற்கும் கீழே. பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். எனவே, பள்ளிக்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்களோ இல்லையோ?

ஆர்.எஸ்.எஸ் சாகாக்களுக்கு அவசியம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பள்ளிகளில் குழந்தைகள் மனதில் இந்துத்துவா விஷத்தை தூவ இரண்டு விதமான இந்துத்த்வக் குழுக்கள் இவர்களுடன் இணைந்து வேலை செய்கிறது. ஒன்று இந்துத்துவத்தை வேகமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்டது. மற்றொன்று சாத்வீகமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்டது. இவர்கள் தாராளமாக பள்ளிகளில் செயல்பட வழிவகை செய்யப்படுகிறது.

உயர்கல்வி நிலையங்களில் பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வு (NET)முனைவர் பட்டம் படித்தவர்கள் நல்ல ஆராய்ச்சி பட்டம் படித்தவர்கள் ஓரங்கட்டப்பட்டு, குஜராத் மாநில அளவில் நடத்தப்படும் மாநில தகுதி தேர்வு (SET) முடித்தவர்களே பணியமர்த்தபப்டுகிறார்கள். தினாநாத் பத்ரா புத்தகங்களை வாசிக்க வேண்டியது கட்டாயம். அவைகளுக்கு மோடி கூட அணிந்துரை எழுதியுள்ளார். அந்தப் புத்தகங்களை படித்து முடித்த பிறகு அகண்ட பாரதம் என்றா கேள்விக்கு பர்மா நேபாளம் உள்பட என்று பதில் எழுத வேண்டும். இப்படி பல கேள்விகளுக்கு அதற்கேற்றவாறு இந்து ராஷ்டிரம் பதில்கள்.

பேராசிரியர் பாண்டியா என்பவர் குஜராத் பல்கலைக்கழகப் பேராசிரியர் மாநிலம் அறிந்த பொறியியல் அறிஞர். ஆனால் அவருக்கு கடந்த 7 ஆண்டுகளாக பேராசிரியர் பதவி உயர்வு கேட்டுப் போராடி வருகிறார். இவரது போராட்டத்தைத் தொடர்ந்து குஜராத் மாநில அரசே ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர் மாநில கல்வி அமைச்சர். அந்தக் குழுவே பரிந்துரை செய்தும் பேராசிரியர் பாண்டியாவிற்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. ஒரே காரணம் அவர் பாஜக விரோதி, RSSவிரோதி என்ற பட்டம் மட்டுமே.

இத்தனைக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. குஜராத் பல்கலைக்கழக சிண்டிகேட் நிராகரித்துவிட்டது. சிண்டிகேட்டில் உள்ள பெருவாரியான கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாநில இந்திய கல்வியாளர்கள் தலைசிறந்தவர்களில் ஒருவர் பெங்களூரில் வசிக்கும் ஆராதயா என்பவர் ஒரு முன்மாதிரி இந்தியக் கல்விக் கொள்கையை வகுத்தளித்து உள்ளார். இணையதளத்தில் அதனை அனைவரும் காணலாம்.

அது வெறும் பக்கங்களைக் கொன்டதே. அதேபோல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட 42 கல்வி நலனில் அக்கறையுள்ள அமைப்புகள் ஒன்று சேர்ந்து “மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம்” என்று ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் தலைவர் பேராசிரியர் வசந்திதேவி. செயலாளர் ஆயிஷா இரா. நடரசன். இது வெறும் 64 பக்கங்களைக் கொண்டதே. இதனைப் படித்து பாருங்கள், இந்தியக் கனவை நிறைவேற்றும் அனைத்து அம்சங்களும் அதில் இருக்கிறது. அவற்றைப் படித்தால் இத்தனை பக்க கல்விக் கொள்கையின் மோசடிகள் அம்பலமாகும்.

ஒரு புதிய கல்விக் கொள்கையை முன்வைக்கப் போகும் வரைவுக் கல்விக் குழுவினர் அதன் அறிக்கையின் முதல் பாகமாக முந்தைய கல்விக் கொள்கை குழு அறிக்கைகள் அதன் பரிந்துரைகள், அமலாக்கம், அதன் பலவீனங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்படுத்திய விளைவுகள். இன்றைய கல்வி நிலைக்கு என்ன காரணம் என்று கண்டறிந்து தொகுத்துச் சுருக்கமாக கூற வேண்டும். அதன் வழியாகத்தான் புதிய கல்விக் கொள்கை ஒன்றின் தேவையை முன்வைக்க முடியும். அப்படியான எந்த நடைமுறையும் கஸ்தூரி ரங்கன் குழு பின்பற்றப்படவில்லை. இது, இந்த வரைவுக் கொள்கை அறிவியல்பூர்வமாக தயாரிக்கப்படவில்லை என்பதற்கான முதல் சான்று.

அடுத்து ஒரு நல்ல கல்விக்கான தேவை ஏழை எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளைப் பார்வையிடுதல். கற்றல் கற்பித்தலை உற்று நோக்குதல். மாணவர்கள் ஆசிரியர்களிடம் கலந்துரையாடல். இதனைச் செய்ததற்கான எந்த அறிகுறியும் ஆவணத்தில் இல்லை. அதேபோல் அரசுக் கல்லூரிக்கு சென்று பார்த்தமைக்கும் சான்றுகள் இல்லை. அதேசமயம் ஏற்கனவே புகழ் பெற்று விளங்கும் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இக்குழு சென்று பார்த்திருக்கிறது. இதற்கான தேவை என்ன? இவ்விசயத்திலும் ஓர் கொள்கை குறிப்பை தயாரிக்க போதுமான அளவு அறிவியல் கண்ணோட்டத்திலான முயற்சிகள் எடுக்கவில்லை என்பது நிரூபணமாகிறது.

அடுத்து, கஸ்தூரிரங்கன் குழு 217 நிபுணர்களை சந்தித்ததாக பட்டியலிட்டுள்ளது. இவர்கள் நிபுணர்களா இல்லையா? என்பது தனியாக விவாதிகப்பட வேண்டியது. இவர்களில் கஸ்தூரி ரங்கன் வசிக்கும் பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 30 விழுக்காடு நிபுணர்களை சந்தித்ததாக அறிக்கை கூறுகிறது. வீட்டில் இருந்து கொண்டே கூப்பிடு தூரத்தில் இருக்கும் தூரத்தில் இருப்பவர்களை சந்தித்து கணக்கு எழுதுவது எத்தகைய நேர்மையான செயல். அதே போல் இக்குழு மும்பையில் சந்தித்த நிபுணர்கள் மட்டுமே 20 விழுக்காடு.

இதற்கான நியதி என்ன என்றும் இந்த குழு தெளிவு படுத்தவில்லை. இது போன்ற ஆய்வுகளை நடத்தும் போது, எப்படிப்பட்ட நடை முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்கு காத்திரமான நடைமுறைகள் மற்றும் விதிகள் உள்ளன. இந்த விதிகள் பின்பற்றப்பட்டால் இதன் மூலம் சேகரிக்கப்படும் புள்ளி விவரங்கள் கருத்துக்கள் அதன் மூலம் செய்யப்படும் மதிப்பீடுகள் ஆகியவை நம்பகமான முடிவுகளை தரும். தவறுகள் குறையும். இத்தகைய கருத்துச் சேகரிப்பு, மதிப்பீடுகள் அறிவியல் பூர்வமாக இருக்கும். ஆனால் கஸ்தூரி ரங்கன் குழுவினரால் இந்த விதிமுறை முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில், கடந்த முறை இந்த அரசு பதவிக்கு வந்தவுடன் நிதி ஆயோக் அமைப்பு கல்வி தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரித்தது. அந்த செயல்திட்டத்தில் உள்ள எல்லா அம்சங்களும் இந்த வரைவுக் கல்விக் கொள்கையில் உள்ளது. சிலவற்றை நேரடியாக நடைமுறை படுத்தவும் தொடங்கி விட்டது. தமிழ் நாடு அரசு, அரசுப் பள்ளிகளை மூட சமீபத்தில் எடுத்து வரும் முயற்சிகள் இந்த அறிக்கையின் செயல் திட்டங்களில் ஒன்று.

நிதி அயோக் அமைப்பின் செயல்திட்டத்தில், உலக வங்கி , உலக வர்த்தக அமைப்பு மற்றும் அதன் சேவை வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (WTO-GATS) ஆகியவற்றின் இலக்குகளை நிறைவேற்றும் கூறுகளும் அதில் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிதி அயோக் அமைப்பின் செயல் திட்டம் நிறைவேறினால் இந்திய மற்றும் பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் நலன்கள் நிறைவேறும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் 500 பக்க வரைவு அறிக்கை அழகு மொழியில் மிகுந்த அக்கறையோடும் மிகுந்த சிரத்தையோடும் பெரும் மாற்றங்களை மக்கள் நலன் கருதி கொண்டு வருவது போல் தோற்றம் அளித்தாலும் அது கீழ் கண்ட ஆபத்துகளை கொண்டுள்ளது.

தரத்தின் பெயரில் மூன்றாம் வகுப்புகள் முதல் தொடங்கும் பொதுத் தேர்வுகள். ஒன்பதாம் வகுப்புக்கு பிறகு ஆறு மாதத்திற்கு ஓர் பொதுத் தேர்வு. ஒவ்வொரு தேர்விலும் தேர்வு பெறவேண்டிய மன அழுத்தம். பன்னிரெண்டாம் வகுப்புக்கு பின்னர் எந்த வகை கல்லூரியில் சேரவும் நுழைவுத் தேர்வு. தொழில் கல்லூரிகளில் படித்தவர்கள் தொழிலைத் தொடங்க தனியாக ஒரு தேர்வு. மனப்பாட தேர்வு முறையின் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்து விட்டு தேர்வுகளை பரிகாரமாக அடுக்குதல். பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தனியார் கல்வியின் மீது உள்ள அனைத்து நெறிமுறைகளையும் நீக்குதல்.கட்டணக் கொள்ளையை நியதியாக்குதல்.

பழம்பெருமையை கட்டமைத்து பழம் பெரும் குப்பைகள் பலவற்றை படிக்க நிர்பந்தம் செய்தல். இந்தி சமஸ்கிருதம் ஆகியவற்றின் ஆதிக்கத்தை இந்திய நாட்டின் எல்லைக் கோடுகள் வரை நீட்டித்தல். குழந்தை நேயக் கல்வி, கல்வி இணைச் செயல்பாடுகள், கதை கூறல் இவற்றுக்கான தன்னார்வலர்களுக்கு அனுமதி என்ற பெயரில் வகுப்புவாத நஞ்சை அறியாப்பருவம் முதல் கலக்க முயற்சிக்கும் கபடம். இவையே இதன் உள்ளடக்கம். இந்த வரைவுக் கல்விக் கொள்கை திரும்பப் பெறக் கோரி அறைகூவல் விடுத்து அல்லது மக்கள் கருத்து கேட்பில் கூறும் கருத்துக்களை செவிமடுத்து ஒட்டு மொத்தமாக திருத்தி அமைக்க வழிவகை செய்தாக வேண்டும். இல்லையெனில்.

வளர்ச்சியின் நாயகன் என்பதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர் மோடி. தற்போது இந்திய மக்கள் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணம் உண்மையில் இந்திய நாட்டின் கல்விக் கற்றல் குறைபாடுகளைக் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கு காரணம் குஜராத் கல்வியை சற்று ஆராய்ந்து பார்க்கும் போது தெரிகிறது. பள்ளி கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் இன்றைய தரம் அதன் பரிதாபகரமான நிலை பற்றி பேசுகிறது அறிக்கை.

ஆனால் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்திய சமூக விஞ்ஞான கழகம் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் தொடங்கி பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிறுவனங்களின் உயர் பதவிகளிலும் மத்திய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அனைத்து நியமனங்களும் ஆர்எஸ்எஸ் நியமனங்களே. இது இவர்களது தர பராமரிப்புக்கு மற்றுமொரு சான்று.

உயர் பதவி நியமனங்களே இப்படி இருந்தால் குஜராத் அரசுப் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கடந்த இருபது வருடங்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நியமங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். அரசுப் பள்ளிகளில் இவ்வாறு நியமிக்கப்பட்டவர் கள் நாள் தோறும் பாடம் நடத்தினார்களோ இல்லையோ, நாள் தோறும் சாகாக்களுக்கு மாணவர்களை அழைத்து சென்றார்கள்.

இதன் விளைவாக இன்றைய குஜராத் அரசுப் பள்ளிகளில் நிலைமை மிகப் பரிதாபமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 63 அரசுப் பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டோ 79 பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி 10 விழுக்காட்டிற்கும் கீழே. பள்ளிக் குழந்தைகளின் மனதில் இந்துத்துவா விஷத்தை தூவ இரண்டு விதமான குழுக்கள் வேலை செய்கிறதாம். ஒன்று இந்துத்துவத்தை வேகமாக புகுத்துமாம். மற்றொன்று மென்மையாக எடுத்துச் செல்லுமாம்.

உயர்கல்வி நிலையங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் நிலைமை இன்னும் மோசம். மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வு, (NET)முனைவர் பட்டம் படித்தவர்கள், நல்ல ஆராய்ச்சி பட்டம் படித்தவர்கள் என அனைவரும் ஓரங்கட்டப்பட்டு, குஜராத் மாநில அளவில் நடத்தப்படும் மாநில தகுதி தேர்வு (SET) முடித்தவர்களே பெருவாரியாக பணியமர்த்தபப்டுகிறார்கள். குஜராத் மாநிலத்தின் இந்துத்துவ கல்வியாளர் என்று அறியப்பட்ட தீனாநாத் பத்ரா புத்தகங்கள் அங்கு பள்ளி மாணவர்களுக்கு துணைப் பாடங்கள்.

அவற்றை வாசிக்க வேண்டியது கட்டாயம். அவைகளுக்கு மோடி கூட அணிந்துரை வழங்கியியுள்ளார். அந்தப் புத்தகங்களை படித்து முடித்த பிறகு கேட்கப் படும் கேள்விகளை வைத்து அந்த புத்தகங்களில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அகண்ட பாரதம் என்றால் என்ன ஒரு கேள்வி. மற்றொரு கேள்வி இந்திய நாட்டின் உண்மையான தேசிய கொடி எது?. விசயம் உங்களுக்கு புரிந்திருக்கும். இந்தக் கேள்விகள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானவை. அகண்ட பாரத கனவை குழந்தைகள் மனதில் ஊட்டி வளர்ப்பவை.

பாண்டியா குஜராத் பல்கலைக்கழகப் பேராசிரியர்.மாநிலம் அறிந்த பொறியியல் அறிஞரும் கூட. ஆனால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக பேராசிரியர் பதவி உயர்வு கேட்டுப் போராடி வந்தார். இவரது போராட்டத்தைத் தொடர்ந்து குஜராத் மாநில அரசே ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர் மாநில கல்வி அமைச்சர். அந்தக் குழுவே பரிந்துரை செய்தும் பேராசிரியர் பாண்டியாவிற்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.

ஒரே காரணம் அவர் பாஜகவின் விரோதி என்ற பட்டம் மட்டுமே. இத்தனைக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. குஜராத் பல்கலைக்கழக சிண்டிகேட் இவரது பதவி உயர்வை தொடர்ந்து நிராகரித்து வந்தது. காரணம் தன்னாட்சி பொருத்திய சிண்டிகேட் இந்துத்துவ வாதிகளால் நிரம்பி வழிந்தது. தற்போதைய குடியரசுத் தலைவர் இராம் நாத் கோவிந் அந்த பல்கலைக்கழகத்திற்கு வருவது உறுதியான பிறகு பாண்டியா குடியரசு தலைவருக்கு ஒரு தந்தி கொடுத்தார்.

“தங்கள் வருகையின் போது எனக்கு தற்கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டும்” என்பதே அந்த தந்தி வாசகங்கள். ஒருவழியாக இந்த போராட்டத்தின் மூலம் அவர் பேராசிரியர் பதவியை சமீபத்தில் பெற்று விட்டார். நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியான வெங்கி இராமகிருஷ்ணன் படித்த பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். ஏற்கெனவே பணியில் பேராசிரியர்கள் பாஜகவின் கொள்கைகளுக்கு மாற்றாக பேசுவோர் அனைவரும் எந்தவொரு கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நுழைய முடியாது.

அவர்களுடைய படைப்புகளை கல்லூரி வளாகத்தில் பார்வைக்கு வைக்க இயலாது. நாடு முழுவதும் தீண்டாமைக் கொடுமையை முன்வைத்து ஆசிரியர்கள் தொடுத்துள்ள வழக்குகளில் நாற்பது விழுக்காடு குஜராத் பட்டியலின ஆசிரியர்கள் கொடுத்தது. ஆனால் அம்மாநிலத்தில் உள்ள வசதி படைத்தவர்கள் நல்ல சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்கள் பிள்ளை சேர்த்து படிக்க வைத்துக் கொள்கிறார்கள்.

ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பாதிப்பையே உணர முடியாத வகையில் இந்துத்துவ போதைக்குள் ஆழ்த்தப்பட்டு விடுகிறார்கள். தந்திரமான முறையில் மேற்கொள்ளப்படும் சில முயற்சிகள் இப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே இப்போதேனும் மத்திய அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக் செவி சாய்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் கல்விக் கொள்கை வடிவமைக்க வேண்டும்

Show 2 Comments

2 Comments

  1. மு. சுந்தரராஜ்

    புதிய கல்வி கொள்கை முற்றிலும் அம்பானி அதானி அகியவரின் திட்டம் கல்வியும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு இனி எல்லாம் அவர்கள் தான் முவுசெய்முடியும்

    • மு. சுந்தரராஜ்

      இது புதிய கல்வி கொள்கை இல்லை காவி கொள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *