வெளிச்சம் – நேயா புதுராஜாவெளிச்சம்…

இருள் கண்டு
பயப்படாதே மானிடா…
எத்தனையோ காரிருளை
கண்டுவிட்டது உலகம்…

ப்ளேக் காலரா இன்னும்
பிற கொடிய நோய்கள் என ….
வரலாறு எங்கிலும்
வலி மிகுந்த பக்கங்களாக…

மதங்களும் சாதிகளும்
நிறங்களும் மொழிகளும்
எல்லைகளும் என்று…
ஒவ்வொரு பிரிவினைக்காக
யுத்தங்கள் பல பல…

அணுகுண்டு தாக்கிய
பின்னும்…
பீனிக்ஸ் பறவையாக
உயிர்த்தெழுத்த நகரங்கள்…
இன்று உலகின் முதல்வரிசையில்…

சுனாமியில் வாழ்வாதாரத்தை
மொத்தமாக இழந்த பின்னும்..
சூறாவளி வருடம் தோறும்
தாக்கும் போதும்…
எரிமலைகள் அவ்வப்போது
வெடிக்கும் போதும்…
பூகம்பம் ஒவ்வொரு முறை
குலுக்கும் போதும்…
மழை வெள்ளம் காட்டாறாய்
பெருகும் போதும்…
மீண்டு தழைத்த மானுடம்
வரலாற்று சாட்சிகளாக…

இன்று கொரோனா என்ற
கொடிய மிருகத்தை கண்டு…
அஞ்சி நடுக்கி அலறி
பேதலிப்பது வீண்…
கொடிய நோய் என்பது
“பயமே”யன்றி வேறில்லை…
எல்லாம் சரியாகும்…
“எல்லாம் கடந்து போம்”
என்ற அற்புத மந்திரத்தை
மறந்து போனதேன்…

பிரளய கால
நோவா கப்பல் போல்…
உன் “நம்பிக்கை” என்ற
அற்புத மருந்தில்…
இந்த உலகம் மீண்டெழும்…

இருள் கண்டு
பயப்படாதே மானிடா…
வெளிச்சம் பரவும்
நாள்-வெகுவிரைவில்….

நேயா புதுராஜா.