பாண்டிச்செல்வியின் இந்தக்கவிதைத்தொகுப்பு நெருப்புக்கணைகளாய் பாய்கின்றன, இன்றைய சமுகத்தின் அவலங்களையும் அரசியலையும் ஒரு சேரச்சாடும் கவிதைகள் இவை,
மோது போரின்றி
வாது போரின்றி
சூதுபோரில் வென்றதாய் மகாபாரதத்தில் கூறுவர்,ஆனால் இறுதிப்போர் குருச்சேத்திரத்தில் நடந்த பின்புதான் அநீதி அழிக்கப்பட்டது, இத்தொகுப்பில் அநீதிகள் வரிசையாய் தொகுக்கப்பட்டு சாட்டையடி காதில் கேட்கிறது, பாஞ்சாலிக்கு கவிஞர் ஒரு விண்ணப்பம் வைக்கிறார்,
ராமாயணத்தை புதிய கோணத்தில்—
வெளுத்துவிட்டார்கள்
ராமனின் யோக்யதையை
துணி வெளுப்பவர்கள்–என்கிறார்,
பெண்கவிஞர் என்பதால் அவர்களது அவலவாழ்வே கவிதைகளில் மேலோங்கியுள்ளது,
மொட்டுகளுக்கு இடமளித்து உதிர்கின்றன
பூக்கள்–எனும் கைகூ போன்ற நயமான
கவிதைகளும்–
தண்ணீர் வற்றிய கிணறுகள்
குப்பைத்தொட்டி—கண்ணீர் வற்றியகிணறு–விவசாயிகளின் கண்கள் என்பத நல்ல உவமை,
கர்ப்பக் கிருகத்தில் காமக்களியாட்டம்
மனுவின் கொடியை உயர்த்தும் மகாபுருஷர்கள்-
என்று மடாதிபதிகள் தோலுரிக்கப்படுகிறார்கள்,
இன்றை காலத்தின் கோலத்தை–
மணமகனின் தகுதி குடிகாரனாயிருப்பது
மணமகளின் சேவை தொட்டுக்க தயாரிப்பத–என்று நையாண்டி செய்கிறார், பாண்டிச்செல்வியின் கவிதைகள் வீரியமாய் எழுந்து நிற்கின்றன,
கவிதை வலிமையானது, மனிதமனங்களில் அது மரணம்வரை நிலைத்துவிடுகிறது,
அதனால்தான் கிரேக்கத்துச்சாணக்கியன் பிளேட்டோ கவிஞர்களை நாடு கடத்த வேண்டுமென்றான், அவர்கள் விமர்சனம் தாங்கவே முடியவில்லை என்று அலறினான்,
பாண்டிச்செல்வி திருமங்கலத்தில் என் தோழர் கணேசன் மகள்,திண்டுக்கல் தேர்தலில் என்னுடன் இணைந்து களமாடியவர், இவரது சகோதரி மாலதி
சிஐடியு தலைவர், சின்னப்பெண்ணாக என்னிடம் செம்மலருக்கு கவிதை கொண்டுவந்தவர், இன்று பெருமளவுக்கு வளர்ந்துள்ளார்,
இனி போர்க்குரல்கள் வெளிவரட்டும், பிளேட்டோ சொன்ன மாதிரி மோடி நாடு கடத்தபடட்டும், வாழ்த்துகிறேன் செல்வியை,,,,,
நூல்: நெருப்புச் சொற்கள்
ஆசிரியர்: க.பாண்டிச்செல்வி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

