இன்றைக்கும் என்றைக்கும் நம் அன்பில் பிரிவேது
இல்லறத்திற்கு இணையான
உலகத்தில் உறவேது
என்னுயிர் கலந்த நாயகனே
எனக்குள் வாழும் மன்னவனே
ஏழேழு உலகை ஆள்பவனே
ஏழைக்கு இரங்கும் தென்னவனே
நீ இருக்கும் இடந்தேடி
நினைவு வரும் மறவாது
நீங்காத உன் அன்பில்
நிலைத்திடும் நேசம் அயராது
நீயின்றி நானில்லை
நாம் சொல்லத் தேவையில்லை
நீயே நானென்று
இறைவன் சூடினான் பூமாலை
கண் மூடிப் பார்த்தேன்
நீ செய்த தியாகம்
கண் கலங்கி நின்றேன்
நான் உந்தன் யாகம்
நம் வாழ்வில் என்றென்றும்
புரிதல் கலையாத மேகம்
நாள்தோறும் மின்னும்
உன் பொன்னுடல் தேகம்
அப்பொழுதும் இப்பொழுதும்
நீ எந்தன் பக்கத்தில்
எப்பொழுதும் என் நெஞ்சம்
உயர்ந்த உந்தன் இதயத்தில்
சரவிபி ரோசிசந்திரா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.