நேசமிகு விரல்கள் – கவிதா பிருத்வி

Nesamigu Viralgal Poetry By Kavitha Prithivi. நேசமிகு விரல்கள் - கவிதா பிருத்வி. Book Day is Branch of Bharathi Puthakalayamநேசமிகு விரல்கள்
**********************

சின்னஞ்சிறு நதியலை போல்
நெஞ்சுக்குள் சிறு தூவானம்..

எத்தனை பேருக்கு கிடைக்கும்
இந்த அன்பின் ஸ்பரிசம்..

காலம் கடந்த பின்னும்
கைவிரல் பிடித்து
மருதாணி வைக்கும் அழகு..

சிறுவயதில் சண்டையிட்டு,
பிடிவாதம் பிடித்து
அவளிடம் எதையும்
சாதித்துக் கொள்ளலாம்..

ஐம்பதை தாண்டிய பின்
அம்மாவின் இடத்திலவள்..

அம்மா இல்லா வலிகளை
மருதாணி இட்டு ஆற்றுகிறாள்..

கள்ளம் கபடம் இல்லா
விரல்கள்..

எத்தனை கதைகள் சொல்கிறது..

மருதாணி சிவப்பு மறைந்துபோகும்..

விரல்களின் நேசம்
என்றும் மாறாது..

மறு ஜென்மம் என்றிருந்தால்
அவள் தாயாய் நானாகுவேன்..

இப்பிறவியில் அவள் அறியாத
மகிழ்ச்சி அனைத்தும்
அவள் காலடியில்..

காத்திரு..
நான் வருவேன் உன் தாயாக..

என் கருவறை காத்திருக்கும்
உன் வருகைக்காக..

கவிதா பிருத்வி
தஞ்சை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.