நினைவாகிப்போன
எல்லாக் கணங்களிலும்
தற்கொலை செய்து கொண்ட
பல கனவுகள் இருக்கும்
வாழ்த்தவும் வரலாம்
தாழ்த்தியும் செல்லலாம்
வாழ்வும் நகரலாம்
தலைகீழாக மாறலாம்
வழங்கிய நேசமோ
பழகிய அதே இடத்தில்
அப்படியே தங்கிவிட்டது
நகராமல்
சதாகாலமும்
என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும் சந்தோஷத்தைத் தந்த
உன் நினைவுகளோடு வாழும்
என்னுள்ளத்திற்கு
பேராசை
என்பது இனியில்லை
நேசத்தின் சம்பளம்
என்னவாக இருக்கக்கூடும்?
முடிவிலி நேசம் தான்
எழுதியவர்
Dr. ஜலீலா முஸம்மில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.