புதிய வேளாண் சட்டங்களும் மண்டிகளும் – தமிழில் இரா.இரமணன்டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் வேளாண்குடி மக்கள் அல்லர்; மண்டிகளை நடத்தும் இடைத் தரகர்கள் என ஆளும் கட்சி ஆதரவாளர்களும் சில ஊடகங்களும் சித்தரிக்கின்றன. மண்டி உரிமையாளர்கள் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்பது உண்மைதான். அரசின் குறி இவர்கள்தான் என்பதை மெய்ப்பிப்பது போல இவர்கள் மீது வருமானவரி சோதனைகள் நடத்தப்படுகின்றன. ‘அர்ஹித்யாஸ்’ எனப்படும் இவர்கள் இடைத்தரகர்கள் என பொருள்படும் ‘பிச்சவ்லியா’ என அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள். இது அவர்களது பங்கை குறுக்கி பார்ப்பதாகும். விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி வைத்திருக்கும் ஒரு வியாபாரி அல்ல அவர். விவசாயிக்கும் மெய்யாக வாங்கும் வியாபாரிக்கும் இடையில் நடக்கும் வணிகத்திற்கு உதவி செய்பவர்தான் அவர். மெய்யாக வாங்குபவர் பலர். அவர்கள் தனியார் வணிகர்; பதப்படுத்துபவர்; ஏற்றுமதியாளர்; அல்லது உணவுக் கழகம் போன்ற அரசாங்க நிறுவனமாக இருக்கலாம். இதனால் மண்டிக்காரர் இடைத்தரகர் போல் நினைக்கப்படுகிறார்.  

ஆனால் மண்டிக்காரர் விவசாயிக்கு நிதி உதவியும் செய்கிறார். மேலும் அவரது கமிஷன் வருமானம் அவர் மூலம் வணிகமாகும் விளைச்சலின் அளவு, மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து இருக்கின்றது. இந்த இரண்டு காரணங்களினால் அவரது நலன் விவசாயியின் நலனுடனே இணைக்கப்பட்டிருக்கிறது. 

Agri Reform Bills: What Will the New System, Which Effectively Bypasses  APMC Mandis, Look Like?

பஞ்சாபிலுள்ள கமிஷன் மண்டிகள் விவிசாயிகளிடமிருந்து 2.5% கமிஷன் தொகை பெறுகின்றன. இந்த தொகையில் டிராக்டர்களிளிலிருந்து விளைச்சலை இறக்குவது, சுத்தம் செய்வது, நிறுத்து சாக்குக் கோணிகளில் அடைப்பது, தைப்பது, வியாபாரியின் வாகனங்களில் ஏற்றுவது ஆகிய செலவுகளை ஈடுகட்ட வேண்டும். ஒரு சிறிய மண்டி உரிமையாளர் 7-8இலிருந்து பெரிய மண்டிகாரர்  70 வரை தொழிலாளிகளை வைத்திருப்பார். அவர்களை தங்க வைத்து உணவு அளிக்க வேண்டும். ஏலத்திற்கு பயிர்களைக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு தேநீரும் சிற்றுண்டியும் அளிக்க வேண்டும். வரவு செலவு கணக்குகளை பார்க்கும் அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும். இதில் சில செலவுகள் விவசாயிகளிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் பெறப்படுகிறது. சமயத்தில் அரசு ஊழியர்களை கவனிக்க வேண்டும். எல்லாம் போக 1% தொகைதான் நிற்கும் என்கிறார்கள் மண்டி உரிமையாளர்கள்.   

ஆந்திரா குண்டூரில் உள்ள மிளகாய் மண்டிகள் பஞ்சாப் ஹரியானா மண்டிகளிளிருந்து சற்று வேறுபட்டது. இவர்கள் 2%தொகையே கமிஷனாகப் பெறுகிறார்கள். இதையும்  விவசாயிகளிடமிருந்தே பெறுகிறார்கள். வியாபாரிகளிடமிருந்து வாங்குவதில்லை. கமிஷன் சதவீத கணக்கில் பெறப்படுவதால் விவசாயிக்கு அதிக பட்ச விலை கிடைப்பதற்கே இவர்கள் முயற்சிக்கிறார்கள். பஞ்சாபில் பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ள மண்டி உரிமையாளர்கள் வியாபாரம் செய்யும் அளவையே இலக்காக கொள்கிறார்கள். இந்த ஆண்டு பஞ்சாபில் உற்பத்தி செய்யப்பட பாஸ்மதியல்லாத அரிசி 145 இலட்சம் டன். ஆனால் அங்கு கொள்முதல் செய்யப்பட அளவு 202 இலட்சம் டன். அதாவது மற்ற மாநிலங்களிலிருந்தும் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனையாகியுள்ளது.  

குண்டூர் போன்ற இடங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் பெரிய ஆபத்தாகப் பார்க்கப்படுவதில்லை. அதற்கு மூன்று காரணங்களை ஒரு வியாபாரி முன்வைக்கிறார். (இவர் விவசாயிக்கு 24%வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலையும் அவரது விளைச்சலை விற்பதற்கு உதவும் மண்டி வியாபாரத்தையும் செய்கிறார்.)

Punjab farmers throng mandis despite protests against agri laws - The  Economic Times

முதல் காரணம்  குண்டூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1% தொகையையே கட்டணமாக வியாபாரிகளிடம் வசூலிக்கிறது. ஆனால் பஞ்சாபில் 3% கட்டணத்துடன் 3%செஸ் தொகையும் விதிக்கப்படுகிறது. ஹரியானாவில் இவை முறையே 2%. குண்டூர் ஒ.மு.வி.கூடத்தின் வருடாந்திர வருமானமான ரூ75/ கோடி பெரிய தொகை இல்லை. இனவே வணிகத்தை இதிலிருந்து  மாற்றும் அவசியம் எழவில்லை.    

இரண்டாவதாக, குண்டூரில் கிட்டத்தட்ட 400 கமிஷன் முகவர்களும்  250 பதிவு செய்யப்பட வணிகர்கள்/ஏற்றுமதியாளர்கள் இருப்பதால் தேவைப்படும் பணப்புழக்கம் இருக்கிறது. ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர்நாடகாவிலிருந்தும் விவிசாயிகள் தங்கள் விளைச்சலை விற்பதற்கு வருகிறார்கள். எண்ணிக்கையில் அதிகமான விற்பவர்களும் வாங்குபவர்களும் வருவதால்  நல்ல விலை கிடைக்கிறது.

மூன்றாவதாக, தன்னுடைய விளைச்சலை விற்க வரும் விவசாயி உடனடியாக பணப் பட்டுவாடாவை எதிர்பார்ப்பார். வாங்க வரும் பெரும் நிறுவனங்களால் தினம் ரூ 2.5 கோடியளவு தேவைப்படும் ரொக்க பணம் தர இயலாது. இதை கமிஷன் வியாபாரிகள் தருகிறார்கள். நிறுவனங்கள் அவர்களுக்கு 15நாட்களுக்குப் பிறகே செட்டில் செய்கிறார்கள். ஆக இரண்டு தரப்பினரும் கமிஷன் வியாபாரிகளையே சார்ந்து இருக்கிறார்கள். இந்த இணைப்பை நீக்குவது என்பது பெரும் நிறுவனங்களாலும் இயலாது. அதுவும் குண்டூர் போன்ற நல்ல விலை கிடைப்பதும் வெளிப்படையானதுமான மண்டிகள் விஷயத்தில் நடக்காது.

10.12.2020 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கட்டுரையிலிருந்து .