New justice Poem | கவிதை - புதிய நீதி

கவிதை : புதிய நீதி – கௌ. ஆனந்தபிரபு

தேர்க்கால்களில் அடித்து
கன்றைக் கொன்றதறிந்து
ஆராய்ச்சி மணியடிக்க
ஓடி வந்தது பசு.
அங்கு மணியைக் காணவில்லை.
திகைத்துப்போனபசு
அங்கிருந்த காவலர்களிடம்
இது குறித்துப் புகாரிட்டது.
மேலிடத்திற்குத் தெரிந்தால்
விபரீதம் விளையுமென
மணியைத் திருடியது பசுதானென
கைதுசெய்தார்கள்.
விடிய விடிய விசாரித்ததில்
சிறைக்குள்ளேயே பசுதற்கொலை
செய்ததென்றார்கள்.
மாட்டின் உரிமையாளர் கொஞ்சம் பெரிய இடம் போல.
மேல் முறையீட்டில்
மீண்டுமொரு முறை தீர விசாரித்ததில்
விளையாடுவதற்கு வேண்டுமென
குட்டி இளவரசர் மணியை எடுத்தது

தெரியவந்தது.
இது போன்ற தவறுகள்
நிகழாமல் தடுப்பதற்காக
இனி ஆராய்ச்சிமணியைக்
கட்டுவதேயில்லையென நான்குபேர்சேர்ந்து
தீர்ப்பெழுதினார்கள்.

 

கௌ. ஆனந்தபிரபு

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *