ச.லிங்கராசுவின் சென்ரியு கவிதைகள்
**********************************************
1
வறண்டு போன நதியின்
பெயரில் ஊர்
ஈர மனம் கொண்ட மக்கள்
**********************************************
2
நதிநீர்க்கான தீர்ப்பு
கொள்முதல் நிலையத்தில்
நாற்றாங்காலாய்
**********************************************
3
மூன்று சதவீதம் முழுவதையும்
விழுங்கியதால் இன்று
மூர்ச்சையாகிக் கிடக்கிறோம்
**********************************************
4
ஜனநாயகத்தில் எல்லோரும்
மன்னர்
சனாதனத்தில் ஜாதியே மன்னர்
**********************************************
5
சுதேசி வேஷமேல்லாம்
சுடுகாடு போனதால்
பரதேசம் போய் பல்லிளித்து தோற்றோம்
**********************************************
6
மதமும் ஜாதியுமில்லா உலகில்
பிழைப்புக்கு வழி இல்லாதவரை
நினைக்க அத்தனை சுகம்
**********************************************
7
ஊழலை ஓழிக்க வந்தவர்களின்
ஓலங்கள் இப்போதெல்லாம்
உதடசைவோடு நின்று விட்டன
**********************************************
📚 எழுதியவர் :
✍🏻 ச.லிங்கராசு
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.