கோபி மணிராஜா கவிதைகள்
1.அம்மா.
அம்மா
நீ இறந்தாலும்
என்னோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்.
என் மகளின் வடிவில்.
********************************
2.சேவல்.
விடியற்காலையில்
கூவிய சேவல்.
விடிந்ததும் குக்கருக்குள் வந்து
விசிலடிக்கிறது.
********************************
3.வலி.
வலியில்லாத வாழ்க்கை இல்லை.
வழியில்லாத வலிகளும் இல்லை.
********************************
4.கவிதை.
எனக்கும் கவிதை எழுத ஆசைதான்.
என்
பேனாவின் முனை
கூர் மழுங்கிப் போனது.
என்னவளுக்கு கடிதம் எழுதி எழுதி.
********************************
5.சுதந்திரம்.
வாழ்நாள் முழுவதும்
கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும்
கிளியின் வாழ்க்கையை விட.
ஒரு நாள் சுதந்திரமாய் வாழ்ந்து மடியும்
ஈசலின் வாழ்க்கை எவ்வளவோ மேல்.
********************************
6.நன்றி கெட்டவன்.
தாயை
நடுத்தெருவில் விடும்
நன்றி கெட்ட மனிதன்.
நாயை பார்த்து சொல்கிறான்
நன்றி கெட்ட நாய்கள் என்று.
********************************
7.முயற்சி.
சிலிர்த்தெழு
சிறகை உயர்த்து
வானம் கூட தொட்டு விடும் தூரம்தான்.
முயற்சி எடுக்காமல் முத்து எடுக்க முடியாது.
********************************
8.அடிமை.
பழக்கப்பட்டுவிட்டால்
சுற்றிச் சுற்றித்தான்
வரவேண்டியிருக்கும்…
அடிமைப் பட்டுக் கிடப்பவனுக்குச்
சிறு சங்கிலி கூட
பெரிய விலங்காய்த் தெரியும்.
யானையைப் போல.
உதறினால் உடைந்து விடும்.
********************************
9.என்ன அலைகள்.
எத்தனை முறை அடித்தாலும்
அலைகள் கடலைத் தாண்டிப் போவதில்லை.
எத்தனைமுறை
மறக்க நினைத்தாலும்
உன் நினைவலைகள்
நீங்குவதேயில்லை.
10.
சட்டம் ஒழுங்கு கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
எப்போதும் சூடாக வைத்திருக்க வேண்டும்.
📚 எழுதியவர்:
✍️ – கோபி மணிராஜா.
கோபிச்செட்டிப்பாளையம்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
