அ. ஷம்ஷாத் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ. ஷம்ஷாத் கவிதைகள்

அ. ஷம்ஷாத் கவிதைகள்

*****************************************************************

1. கனவு 

நித்திரையில் அவன் முகம்
நீங்காமல் அலை அலையாய்
நீந்திக் கொண்டே சென்றது
நில் நில் என்றேன் ரசிக்க
நிதானம் நிதானம் என்றேன்
நீயும் வாயேன் என்றது

நின்னைச் சரணடைந்தேன் கண்ணே
நினைவில் வந்தது
கனவிலும்
கனவு கலைந்தது

விடியற்காலை
கண்விழித்தேன்
சேவல் கூவியது
கண்ணெதிரே அவனைக் காணவில்லை

கஞ்சத்தனம் ஏனோ?

கனவில் மட்டுமே
காட்சி தருகிறாய்
கண்ணாளா என்று
கலங்கினேன்

கண்ணை மூடியும் பார்த்தேன்

கானாமல் போனது முகம்

குடும்ப பாரச் சுமையோ
கடைசிவரை வரவில்லையே
கைப்பிடித்தவன்.

*****************************************************************

2. பொம்மை

பொய்யை மெய்யாய்
பொய்மை வாக்குறுதி

பொய்யையே
மெய்யாய்க் கருதும்
மக்கள் மௌனமாய்

பொய்மை மறையுமோ
ஆட்சி காலத்தில் என்ற
பொய்யான கனவில்
வாழும் மக்கள் எதிர்பார்ப்பு

மெய்யின் அருமை அறியாமல்
பொய்யாய் வாழும்
பொய்யின் கயமை.

வாய்க்குமோ
பொய்யினின்று விடுபட்டு
மெய்யாய் வாழும் உறவு

*****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻 அ. ஷம்ஷாத்,
சென்னை.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *