நூல் அறிமுகம்: நியூட்டன் ஏன் கடவுளை நம்பினார்..? – பிரபுநூல்: நியூட்டன் ஏன் கடவுளை நம்பினார்..?
ஆசிரியர்: ஆயிஷா. இரா. நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 145
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/newton-kadavulai-nambiyathu-yen/

அறிவியல் புத்தகங்களை வாசிக்கும் போது குறிப்பெடுப்பது வழக்கம் ஆனால் இந்த அறிவியல் புத்தகத்தை வாசிக்கும் போது அவ்வாறு குறிப்பெதுவும் எடுக்கவில்லை காரணம் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை வாசிக்கும் போது எங்கேயும் நிறுத்த முடியவில்லை. இது மொழிப்பெயர்ப்பு நூல் தான் ஆனாலும் தோழர். இரா.நடராசனின் எழுத்து நடை வாசிப்பாளர்களை கவர்கிறது.
ஒவ்வொரு கட்டுரைகளும் புதிய பல அறிவியல் விவரங்களை தருகிறது நியூட்டனின் மூன்று விதிகளுக்கும் பென் மில்லர் கொடுத்த விளக்கம் பாடத்திட்டத்தில் நிச்சயம் இடம்பெற வேண்டியது. டார்வின் பற்றி எழுதிய ரிச்சர்டு டாக்கின்ஸ் அறிவியல் உண்மை அனைத்தையுமே மேசை மீது வைக்க வேண்டியதில்லை என்கிறார். கணித நிருபனத்திற்கும் அறிவியல் நிருபனத்திற்கும் இடையே உள்ளே நுட்பமான வேறுபாட்டை சைமன் சிங் கட்டுரை விவரிக்கிறது. கி.மு.600ல் கண்டுபிடிக்கப்பட்ட பித்தாகரஸ் தேற்றத்திற்கு பின்னால் 20ஆண்டுகள் உழைப்பு இருக்கிறது. அதனால் தான் 2000ஆண்டுகளை கடந்தும் பயன்படுகிற கணித சூத்திரமாக இருக்கிறது.
மொத்தம் 13 கட்டுரைகள் 137 பக்கங்கள் தான். நியூட்டனில் துவங்கி ஐன்ஸ்டன்-டார்வின்-ஸ்டீபன் ஹாக்கிங் வரை தொட்டுவிட்டார். அவசியம் ஆசிரியர்கள் மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்..!