Neya Pudhu Raja Poetry Yethiligal in Tamil. This Poetry About Refugee Lifes. Book Day Website Is Branch Of Bharathi Puthakalayam.

ஏதிலிகள் – நேயா புது ராஜா



ஏதிலிகள்…

கொடுங்காலம் தொடங்கி
நீண்டுகிட்டே போவுது…
கும்பி பல காஞ்சி
வாடித்தான் கிடக்குது…
அக்கம் பக்கம் எல்லாம்
கை நீட்டியாச்சு…
அஞ்சு பத்து கூட
தீர்ந்துதான் போச்சு…
வெறும் அரிசி வடிச்சு
வவுறாறலாம்ன்னா…
பண்ட பாத்திரம் எல்லாம்
அடகுக்கு போயிருச்சே…
ரெண்டு நாளைக்கு முன்னதா
இருந்த மூணு நாலு சேலையும்
சீமெண்ண வாங்க சரியாகிப் போச்சு…
மழதண்ணி இல்லாம
விவசாயம் செத்து
கரடு காஞ்சி போச்சுதின்னு…
விஷமருந்த நாங்க
கையிலெடுக்காம இருக்க…
மானமா பொழகைக்கலாம்ன்னு
அக்கம் பக்கம் சொல்ல
ஊர்தாண்டி ஊர்விட்டு வந்தோம்…
சின்ன பெரிய வேலைசெஞ்சி
கெடைக்கும் வரும்படியில
சிரிச்சிட்டே வாழ்ந்தோம்…
சந்தோசம் எல்லாம்
தாராந்து பூடும்னு…
சத்தியமா நம்பல…
வாழ்க சதிராடி
போகும்னு நினைக்கல…
ஐயனார விட்டு..
அடுத்த சாமி தேடினது
அம்புட்டு குத்தமான்னு
குரங்கு புத்தி சொல்லுது…
குய்யோ முறையோன்னு
மனசு தவிக்கிது..
சாராய சாமியோ
வெள்ள சொள்ள சாமியோ…
அத்தனையும் வேடிக்க பாக்குது…
இந்த வெறும் வயித்துகாரங்கள.

— நேயா புது ராஜா



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *