Neya Puthuraja Poetry Trust (Nambikkai) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches Of Bharathi Puthakalayam.



நம்பிக்கை

என்னிடம் கடவுள் இல்லையென்று சொல்லிவிடாதீர்கள்…
இந்த பெரும் வலியில் இருந்து என்னைக் கரையேற்றுவார்
என ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையாக…

என்னிடம் கடவுள் இல்லையென்று சொல்லிவிடாதீர்கள்….
இந்தப் பாவிகளை எல்லாம்
அவர் தண்டிக்காமல் விடமாட்டார்
என நம்பிக்கையோடு இருக்கிறேன்..

என்னிடம் கடவுள் இல்லையென்று சொல்லிவிடாதீர்கள்…
இவர்களை
எதிர்த்து அடிக்க வலிமை தருவார்
என நம்பிக்கையோடு இருக்கிறேன்…

என்னிடம் கடவுள் இல்லையென்று
சொல்லிவிடாதீர்கள்…
என்னைக் கட்டிப்போட்ட சங்கிலியை
உடைத்தெறிவார் என
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்…

என்னிடம் கடவுள் இல்லையென்று சொல்லிவிடாதீர்கள்…
அடுத்ததாக வரிசையில் வண்புணர்வு செய்ய காத்திருக்கும்
அந்த மஞ்சசட்டை காரனையாவது தடுத்துவிடுவார்
என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்…

என்னிடம் கடவுள் இல்லையென்று
சொல்லிவிடாதீர்கள்…
என் உடலை நார்நாராக கிழித்துப்போட்ட
இந்தக் கைகளை எல்லாம்…
செயலற்றுப் போகும்படி
செய்து விடுவார் என…
நம்பிக்கையோடு இருக்கிறேன்…

என்னிடம் கடவுள் இல்லையென்று
சொல்லிவிடாதீர்கள்….
இவர்கள் கையில் உள்ள இரும்புத்தடி
என் பிறப்புறப்பைத் தாக்காமல்
காத்திடுவார் என நம்பிக்கையாக…

என்னிடம் கடவுள் இல்லையென
சொல்லிவிடாதீர்கள்…இவ்வுலகில்
வண்புணர்வில் பலியான
எண்ணற்ற என் சகோதிரிகளின் வரிசைகளில்….
என் பெயரும்
சேர்ந்துவிடாமல் காத்திடுவார்
என இறுதி நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன்…

நேயா புதுராஜா,
தமுஎகச அறம்கிளை உறுப்பினர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



10 thoughts on “நேயா புதுராஜாயின் கவிதை *நம்பிக்கை*”
  1. “என்னிடம் கடவுள் இல்லையென
    சொல்லிவிடாதீர்கள்…இவ்வுலகில்
    வண்புணர்வில் பலியான
    எண்ணற்ற என் சகோதிரிகளின் வரிசைகளில்….
    என் பெயரும்
    சேர்ந்துவிடாமல் காத்திடுவார்
    என இறுதி நம்பிக்கையோடு
    காத்திருக்கிறேன்…”

    உணர்வு மிக்க வரிகள் !! வாழ்த்துக்கள் தோழர்..

  2. உணர்ச்சி மிக்க வரிகள் !! வாழ்த்துக்கள் தோழர்..

    1. இந்த கவிதையை படித்து இருந்தால் கடவுள் கண்டிப்பாக வந்து இருப்பார் தோழர். பல பெண்களின் குரலாக பதிவாகியுள்ளது. சிறப்பு தோழர்

  3. வலிகள் மிகுந்த வரிகள், சொல்ல வார்த்தைகள் இல்லை .வாழ்த்துகள்

  4. சமூகத்தின் வலிகளை,
    உணர்வு மிக்க வரிகளாக வடித்துள்ளார்
    கவிஞர் நேயா அவர்கள்.
    அன்பும், வாழ்த்துகளும்.👏👏👏🎊🎊🎊

  5. நிகழ்கால உண்மையை உணர்த்தும் வலிமிகுந்த வரிகள் … வாழ்த்துக்கள் தோழர்.

  6. வலிகளுக்கு வலிமை அதிகம்…
    அதை எழுதிக்’கொல்லும்’ பொழுதில் எழும் நிம்மதி…மிக அதிகம் …
    கொன்று வென்றுவிட்டீர்கள் சகோதரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *