சிறுகதை: நெய்யப்பத்தின் கதை (Neyyappathin Story) | Neyyappathin Story in Tamil | அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: நெய்யப்பத்தின் கதை| மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

நெய்யப்பத்தின் கதை

மலையாளத்தில் – அஷீதா

தமிழில் – உதயசங்கர்

 

கசுமலா காக்கா, சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி வசிக்கிற கிராமத்தில் அய்யப்பன் என்ற பெயருடைய ஒரு சிறுவனும் இருந்தான்.

அவன் எப்போதும் சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியுடன் சச்சரவு செய்து கொண்டேயிருப்பான்.

அடிபிடி சண்டை போடுவான். சின்னுவிடம் கோவிப்பான். நாய்க்குட்டியின் மீது கல்லெறிவான். பூனைக்குட்டியின் மீது தண்ணீரை ஊற்றுவான்.

ஒருநாள் அய்யப்பனின் அம்மா நெய்யப்பம் செய்தார். நெய்யப்பம் என்ன மணம்! ஆலமரத்தின் கிளையிலிருந்து பறந்து சென்றது கசுமலா காக்கா.

அடுக்களைப் பக்கமாக வாசலில் நின்று நெய்யப்பம் தின்று கொண்டிருந்தான் அய்யப்பன்.

அவன் கையிலிருந்த நெய்யப்பத்தைக் கொத்திப் பிடுங்கிக் கொண்டு பறந்தது.

அப்படியே சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாரும் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

கசுமலா காக்கா பறந்து வருவதைப் பார்த்ததும் மூன்று பேரும் விளையாட்டை நிறுத்தினார்கள்.

அவர்களுக்கு ஆசை வரவேண்டுமென்று வாயில் நெய்யப்பத்துடன் கீழே தாழ்வாகப் பறந்தது கசுமலா காக்கா.

ஒரு குதி குதித்து பூனை அதைத் தட்டிப்பறித்தது.

மின்னல் வேகத்தில் நாய்க்குட்டி அதைப் பிடிங்கிவிட்டது.

அடுத்த நிமிடம் சின்னு அதை விழுங்கி விட்டாள்.

கசுமலா காக்காவுக்கு வேதனையாகி விட்டது. இப்போதும் அந்த கிராமத்தில் குழந்தைகள் பாடுவார்கள்,

“ அய்யப்பன் அம்மா நெய்யப்பம் சுட்டார்

காக்கா கொத்திப் பறந்து போனது

பூனைக்குட்டி பாய்ந்து பறித்தெடுத்தது

நாய்க்குட்டி தாவி பிடுங்கியெடுத்தது

சின்னுக்குட்டி அதை விழுங்கி விட்டாள். “

*****************

நெய்யப்பத்தின் கதை எழுதியவர்:

உதயசங்கர் (எழுத்தாளர்) - Tamil Wiki

தமிழில் – உதயசங்கர்
நன்றி: பறயாம் நமுக்கு கதகள்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *