ஆங்கிலேய புரட்சிக் காலத்தில், 17 ம் நூற்றாண்டில், பேசுபொருளாக இருந்த விஞ்ஞானிகளுள் ஒருவர் நிக்கோலஸ் கல்பெபேர்(Nicholas Culpeper (பிறப்பு உத்தேசமாக, 18 அக்டோபர் 1616 –இறப்பு :ஸ்பிடல்பீல்டு  ,லண்டன்,10 ஜனவரி  1654)) ஆங்கிலேய விஞ்ஞானியான நிக்கோலஸ் கல்பெபேர்(  Nicholas Culpeper) மற்றவர் களிலிருந்து  கொஞ்சம் ஒரு வித்தியாசமான மனிதர். வாழ்க்கையில் நிறைய நிறைய சோதனைகளைச் சந்தித்தவர். பொதுவாக எல்லோருக்குமே வாழ்க்கையில்  சோகம், பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சினைகளுக்குகிடையே வாழ்க்கையைக் கண்டவர், கண்டறிந்தவர். கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.நிக்கோலஸ் கல்பெபேர். அப்போது பல நூற்றாண்டுகளாக சோதிடம் மூலமே, நோய் பற்றி முன்கணிப்பு செய்தனர்.

200px-In_Effigiam_Nicholai_Culpeper_Equitis_by_Richard_Gaywood

சொந்த மொழியில் மருத்துவ புத்தகம்..!

நிக்கோலஸ் கல்பெபேர் ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த ஒரு தாவரவியலாளர், மூலிகையாளர், மருத்துவர்,மற்றும் மருந்து செய்து விற்பவரும் கூட.  மருந்து விற்பனைக்கு காரணி  பாராசெல்சியஸ் என்ற விஞ்ஞானிதான்.பாரம்பரிய மருத்துவ அதிகாரிகள் மற்றும் அந்த முறைகளில் நம்பிக்கையின்றி புதிய வேதியல் முறைகளைக் கண்டறிந்தவர் பாராசெல்சியஸ். அவர்  மூலம் உத்வேகமும் தூண்டுதலும்  பெற்றவர். நிக்கோலஸ் கல்பெபேர். நிக்கோலஸ் ;லத்தீன் படிக்கத் தெரியாத மனிதர்களுக்காக மருத்துவம் மற்றும் மருந்தியல் தொடர்பான தகவல்களை ஆங்கிலத்திலேயே புத்தகமாக எழுதி   வெளியிட்டார். அது மட்டுமல்ல, நிக்கோலஸ் கல்பெபேர் ஒரு ஜோதிடரும் கூட.. புரட்சிகரமாக  எதிலும் எதிர்த்து நின்று போராடி வாழ்க்கையை வென்றேடுத்தவ்ர்  நிக்கோலஸ் கல்பெபேர், இவர் 1616  ,அக்டோபர் திங்கள் 18 ம் நாள்,,இங்கிலாந்தின் சர்ரே என்ற இடத்தில் பிறந்தார்..இவரின் தந்தை.. திருச்சபைச் சமயகுருவாக இருந்த  இளைய ரெவெரெண்ட் நிக்கோலஸ் கல்பெபேர் , தாயின் பெயர் மேரி.. நிக்கோலஸ் ரொம்பவும் வசதியான குடும்பத்திலேயேதான்  பிறந்தார்.

கருவறையில் சோதனை களம் கண்ட கல்பெபேர்..!

   நிக்கோலஸ் கல்பெபேரின் வாழ்க்கை என்பது சுருக்கமாக வாழ்தலுக்கும், குறிப்பாக தனிப்பட்ட சோகங்களுக்கும் பெயர் போனது.பொதுவாக நிறைய கற்பனைத் திறன் உள்ள தேடல்கள், முற்போக்கு கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு வரும் சோதனைகள் இயல்புதான்.ஆனால் நிக்கோலஸ் கல்பெபேரின் சோகம் என்பது அவர் பிறக்கு முன்பே  துவங்கிவிட்டது.ஆம். அவர் பிறப்பதற்கு 13 நாட்களுக்கு முன்னே, அவரின் தந்தை  ரெவெரெண்ட் நிக்கோலஸ் கல்பெபேர்,இறந்து விட்டார். ஆனால் தந்தை நிக்கோலஸ் கல்பெபேருக்கு அதற்கு கொஞ்சம் மாதங்களுக்கு முன்னர்தான் இங்கிலாந்தின், சர்ரே என்ற ஊரின் ஓக்லி மானரின் பிரபுவாக(Lord of Ockley Manor) நியமிக்கப்பட்டார். அவரின் இறப்புக்குப் பிறகு அந்த பதவி இடம் மாறியது.

லத்தீன் கற்றுத்தந்த தாத்தா..!

  கணவர்  நிக்கோலஸ் கல்பெபேரைப் புதைத்த  பின் மேரி தன குழந்தைக்கு, தந்தையின் பெயரையே மகனுக்கு நிக்கோலஸ் கல்பெபேர் எனஅவரின் நினைவாக  சூட்டினார். அதற்குப் பிறகு  தன் குழந்தையை எடுத்துக் கொண்டு,தனது   சொந்த ஊரான இஸ்பீல்டுக்கு (Isfield, Sussex) சென்றார்.  உணர்ச்சி மயமான நிக்கோலஸ் பிறந்த காலகட்டத்தில், அப்போது மிகச் சிலரே  மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இளைய நிக்கோலஸ் மற்ற குழந்தைகளைப் போலவே, இந்த உலகின் அதிசயங்களைப் பார்த்து பிரமித்தார்.அவரது தாத்தா ரெவெரெண்ட்  வில்லியம் ஆட்டர்சோல் ( Reverend William Attersole) தான் நிக்கோலஸுக்கு ஆதர்ச மனிதராகத் தெரிந்தார். அவர்தான் நிக்கோலஸுக்கு கல்வி தந்தவர். அவரே லத்தீன் மற்றும் கிரேக்க மொழியையும் குழந்தை   நிக்கோலஸுக்குக்  கற்றுத் தந்தார்.

Tenby Museum & Art Gallery » Book of the Month – Culpeper's Complete Herbal

வானவியலும்..மருத்துவமும்..

  நிக்கோலஸ் கல்பெபேருக்கு  தன சிறுவயதில் வானை அண்ணாந்து பார்த்து அங்கு தெரியும் விண்மீன்களைப் பார்ப்பதில் பரவசமும், மிகுந்த ஆர்வமும் இருந்தது..மேலும் சோதிடத்தையும் தன பத்தாவது வயதிலிருந்தே தனது தாத்தாவின் நூலகத்திலிருந்து எடுத்து   படித்து வந்தார்.அதே சமயம்..அவரின் ஈடுபாடு மருத்துவத் துறையிலுள்ள தாவரங்கள் மற்றும் மூலிகைகள் பக்கமும் திரும்பியது. மோதியது.நிக்கோலஸ் தன  தாத்தாவின் நூலகத்திலுள்ள அனைத்து புத்தகங்களையும் படித்தார். இதனை அறிந்த அவரின் தாத்தா நிக்கொலசிடம்  “பைபிள்தவிர மற்றவற்றைப் படிக்கக்கூடாது என்று  கட்டுப்பாடு விதித்து விட்டார். .

மத போதக பணி மறுத்த நிக்கோலஸ் கல்பெபேர்..!

    நிக்கோலஸ் 16 வயது வந்ததும், 1632 ல் அவரின் தாத்தா அவரை கேம்பிரிட்ஜ் பலகலைக் கழகத்துக்கு அனுப்பினார். அங்கும் அவர் தாத்தாவின் கனவுகளை நிறைவேற்றவே  , திருச்சபையில் பணிபுரிய  இறையியலே படிக்க நிர்பந்திக்கப்பட்டார்.இளைய புரட்சியாளர் நிக்கோலஸ் கல்பெபெருக்கு  கொஞ்சம் கூட இறையியல் மேல் ஈர்ப்பே இல்லை.ஆனால் அவரின் காதல் எல்லாம் மருத்துவத் துறையின் பக்கமே இருந்தது..எனவே அவரின் ஆர்வமேலீட்டால் கிரேக்கத்தில்,வாழ்ந்த, கிரேக்கத்தின்  மருத்துவத் துறை  பிதாமகனான   ஹிப்போகிரேட்ஸ்(Hippocrates கி.மு 460 –கி.மு. 370) பற்றியும் அவரின் செயல்பாடு பற்றியும் படித்தார்.அவர்களைப் பின்பற்றவே விரும்பினார். .அவருக்கு பின் வந்த ரோம் சாம்ராஜ்யத்தின் நகரின் பிரபல்  மருத்துவர் கிளேடியஸ் காலன்  (Claudius Galen கி.பி.130– கி.பி 210) பற்றியும் படித்தார். ஆனால் நிக்கோலசின் அம்மாவும் கூட, நிக்கோலஸ் அவரின் தந்தை போலவே ஒரு மத போதகராக வேண்டும் என்று விரும்பினார். இதனால் இதெல்லாம் பிடிக்காத நிக்கோலஸுக்கு, கவனம்  டென்னிஸ், நீச்சல் போன்ற விளையாட்டுகளின் மீது திரும்பியது. ஆனால் அதே சமயம், அப்போது தேவாலயத்தில் இருந்த  மத குருமார்களுக்கு கடுமையான நீதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் கட்டுப்பாடும் கறாராக இருந்ததால்,அவர் மதம் பக்கம் எட்டிக்கூட பார்க்கவவ்வில்லை .இருப்பினும்  தாத்தாவின் தொல்லை தாங்காமல், மனம் வெறுத்துப்போய் புகை பிடிக்கத் துவங்கினார். அத்துடன் மதுப் பழக்கமும் கூடவே வந்தது.ஆனால் இறுதியில் நிக்கோலஸ் பல்கலையில் படிப்பை முடிக்காமலேயே வெளியேறிவிட்டார்.

Nicholas Culpeper, Culpeper's English Physician - SMU

திருடிப்படித்தால் மருத்துவரான கல்பெபேர்….!

     நிக்கோலஸ் ஒரு முறை, தாமஸ்  விகாரி எழுதிய  மனிதனின் உடலியல் பகுதியின்  படங்கள் ( Anatomy of Man’s Body by Thomas Vicary.).( தாமஸ் விகாரி என்பவர்  மூன்றாம் ஹென்றிக்கு அறுவை சிகிச்சை செய்தவர்) என்ற புத்தகத்தை நூலகத்தில்  பார்த்தார். அதனை நிக்கோலஸ் என்ன செய்தார் தெரியுமா? யாருக்கும் தெரியாமல் சுட்டுவிட்டார். அதாம்பா, நூலகத்திலிருந்து திருடிக் கொண்டு வந்தே ரகசியமாகப் படித்தார். அவருக்கு மனிதனின் இனப்பெருக்க உறுப்புகளைப பற்றிய விபரங்களையும், மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான விஷயங்களைப்  புதிராக  பார்த்து அதிசயப்பட்டார். ஆட்கொள்ளப்பட்டார். இதனாலேயே நிக்கோலஸ் 1651ல், செவிலிகளுக்கான அகராதியைத் தானே(Culpeper’s own Directory for Midwives (1651)) தயாரித்தார்..  இதுவே அவரை மருத்துவத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவும்,அவரை மருத்துவராக அழைப்பதற்கு முக்கிய காரணி எனலாம்.

அனைத்தும் தாய்மொழியில்…!

  கல்பெபேர் காலன் என்ற மருத்துவரின் Art  of  Physick  என்ற புத்தகத்தை லத்தீனிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தார். இதில் அடிப்படைத் தகவல்களான, சுவை, & ஆற்றல் தொடர்பான மருத்துவப்பொருட்கள்,பற்றியும், இவை எப்படி இந்த உலகையே மாற்றி அமைக்கப்   உள்ள மாற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

காதலியை இழந்த  புரட்சியாளர்..!

   ஆனாலும் கூட நிக்கோலஸ் வளைந்து கொடுக்காத தீர்க்கமான புரட்சியாளராகவும்,அன்றைய அரசரை எதிர்த்த எதிப்பாளராகவும் இருந்தார்.பெரிய சீமாட்டியான் ஜூடித் ரிவேர்ஸ்(Judith Rivers) என்ற  சீமாட்டியை காதலித்தார். ஆனால் இந்த விஷயம்  ஊர் முழுவதும் பரபரப்பானது. அது அவரது  காதலி சென்ற வண்டி மீது மின்னல் தாக்கி அவர் இறந்தார்.   மனம் வெறுத்த நிக்கோலஸ் படிப்பைத்  துறந்தார்.இப்படி இளம் நிக்கோலஸுக்கு வேதனைகளும் சோகங்களும் தொடர்கதையாகவே இருந்தன. மேலும் பேரன் சொன்ன பேச்சு கேட்காமல் நடந்ததால், தாத்தா அவரை வீட்டில் சேர்க்க  மறுத்து  விட்டார். சொத்தும் கொடுக்கவில்லை.

  பின்னர் நிக்கோலஸ் ஒரு 7 ஆண்டுகள் ஒயிட்டின்  உதவியாளராக இருந்தார்.மருத்துவ மூலிகைகளை முழுமையாக  சேகரித்தார்.அவைகளை  வகைப்படுத்தினார்.  ஆனாலும் கூட அவருக்கு சோதிடத்தின் மேல் உள்ள காதல் குறையவில்லை. அதானால் நிக்கோலஸ் வில்லியம் லிலியின் படைப்புகளைப் படித்தார். அவரை சந்தித்து அவரை பின்பற்றினார். நிக்கோலஸ் ஹெய்டன் என்பவரின் நீதிக்கான சோதிடவியலின் பாதுகாப்பு (Heydon’s Defence of Judicial Astrology (1603)) என்ற நூலால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் நிக்கோலஸ்.

 

Nicholas Culpeper publishes Complete Herbal – Harry Potter Lexicon

ஏழைகளின் பாதுகாவலர்..!

 .. நிக்கோலஸ் 15 வயதான ஆலிஸ் பீல்ட் (Alice Field,)என்ற பணக்காரப் பெண்ணை மணந்ததால் அவரின் வாழ்க்கை கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தது. பின்னர் லண்டனில் ஏழைகள்  வாழும் பகுதியல் ஒரு கடை வைத்தார். நிக்கோலஸ் தன்னை ஒரு சோதிடர் தாவரவியலாளர்,                                         மூலிகையாளர்,மற்றும் மருத்துவராகவே மக்களின் முன் காட்டிக் கொண்டார். மக்கள் இந்த அவியலான விஷயத்தை விரும்பவில்லை,ரசிக்கவும் இல்லை. மருந்து  விற்பனையாளர் எனபதும் செல்லுபடியாகவில்லை. இதில் இவருக்கு தோல்விதான்.

தாத்தாவும்..ஏமாற்றமும்..!

   நிக்கோலசின் தாத்தா  1640 ல் இறந்து போது நடந்த நிகழ்வு அவர் முகத்தில் யாரோ பளீரென அறைந்தது போலிருந்தது. அதுதான் தாத்தா,தன பேரன்    நிக்கோலஸுக்கு வெறும் வெறும் 70 ஷில்லாங்கை மட்டுமே உயிலாக எழுதி வைத்திருந்தார். இதனால் நிக்கோலஸ் ஏதும் வருத்தம் கொள்ளவில்லை.ஆனால் அதே ஆண்டிலேயே நிக்கோலஸ் கல்பெபேர் 1940 ல், தனது மருத்துவப் பணியினை முறையாக, ஸ்பீட்டாபீச்ட்ஸ்(Spitalfields) என்ற இடத்தில் துவங்கினார்.

பாவப்பட்ட மக்களுக்கு மருத்துவமனை..!

  நிக்கோலஸ் எப்போதும் மக்களின் தலைவனாகவே இருந்தார். அவர்  ஏழைகளின் இருப்பிடத்தில், பாவப்பட்ட மக்களுக்குக்காக  தன மருத்துவத்தை துவக்கினார்.அவர்களின் கடவுளாகவே பார்க்கப்பட்டார். ஒரு நாளில் 40 நோயாளிகளை  கவனித்தார்.அவர்களிடம் பெரிதாக ஏதும் பணம் வாங்கவில்லை. ஏழைகளின் கஷ்டத்தை பெரிதும் அனுபவித்து உணர்ந்தவர் என்பதால் அவர்களுக்கு சேவையே செய்தார். நிக்கோலஸ் கிழக்கு லண்டனில் 1644ல் ஒரு சொந்த கடையையும் நிறுவினார். அங்கே ஆங்கில  மருத்துவ புத்தகங்களையும் விற்பனை செய்தார்.இதன் மூலம் நிக்கோலஸ் பல்கலையில் பயின்ற ஏகபோகமுதலாளிகளான  மருத்துவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அதுமட்டுமின்றி நிக்கோலஸ் அரசியல் தீவிரவாதியாகவும், அரசர் , நீதியரசர்கள மற்றும் உரிமம்  மருத்துவர்களுக்கு எதிராக துண்டறிக்கைகளை விநியோகம் செய்தார்.

Nicholas Culpeper, Culpeper's English Physician - SMU

எதிர்ப்புகளை மீறி வெளிவந்த புத்தகம்..!

  நிக்கோலஸ் கல்பெபேர் நிறைய மருத்துவ புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.அவைகளில் மிகுந்த வெற்றி பெற்ற புத்தகம் எனப்படுவது 1653ல் அவர் அன்று ஆங்கில மருத்துவர்எனப்பட்ட, இன்றுகல்பெபெரின் மூலிகை”(The English Physician of 1653 (now known as Culpeper’s Herbal) என்ற புத்தகமே..அதுதான் அன்றைய புகழ் பெற்ற துவக்க கால நவீன பிரிட்டனின் வெளியீடுகளுள் ஒன்று. வட அமெரிக்க கல்பெபெரின் மூலிகை என்பது சோதிடத்தையும், மருத்துவ குறிப்புகளையும் இணைத்த ஒரு மூலிகை மருத்துவமாகவே அதன் தொகுப்பாகவே கருதப்பட்டது. அந்த புத்தகம் உலகளவில் ஒரு வித்தியாசமான புத்தகமாகும். அதில் மருத்துவ தாவரங்களின் படங்களும், அதனைப் பற்றிய குறிப்புகளும், மேலும் அது தொடர்பான மருத்துவ தகவல்களும் இருந்தன. ஆனால் அந்த மருத்துவ தகவல்கள் எல்லாம் மருத்துவர்களின் கல்லூரியிலிருந்து, அனைத்து தகவல்களும் லத்தீனிலெயெ காணப்பட்டன. அதனை எல்லாம், நிக்கோலஸ் கல்பெபேர் ஆங்கிலத்தில் வெளியிட்டார். இதனை அறிந்த அந்த கல்லூரி ரொம்பவும் வெகுண்டெழுந்து, அந்த புத்தக வெளியீட்டினை தடை செய்ய கோரியது..ஆனால் இதுவரை வந்த புத்தகங்களிலேயே இதுதான் அத்தனை எதிப்புகளையும் மீறி வெளிவந்த  புத்தகம், மக்களின்  வரவேற்புடன் பதிப்பு  வந்தது.

சுதந்திரப் போராட்ட வீரரும் மருத்துவரும்..!

   மேலே குறிப்பிட்ட அத்தனை தகவல்களும் அதிகப் பிரதிகள் விற்பனைக்கான ‘the queen’s conjuror” புத்தகத்தின்  ஆசிரியரின் படைப்பிலிருந்து , நிக்கோலஸ் கல்பெபெரின்  அறிகிறோம். அவரை ஒரு பழம்பெரும் புரட்சியாளர், மாற்றம் நோக்கும்.விழையும்  சிந்தனையாளர், நேர்மையாளர் மற்றும் மிகப் பெரிய மூலிகையாளர் என்றே அறிமுகப்படுத்துகிறார். இதுதான், பிரிட்டனின் புரட்சிக்காலத்தில் ,மருத்துவத் துறையில் நடந்த, லண்டனில் குடியேறிய முதல் சுதந்திர போராட்ட வீரரைப் பற்றியமருத்துவத் துறையின்   வலுவான, வரலாறு.. என்றும் பேசப்படுகிறது. 117 ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், இங்கிலாந்துக்கு  4 குதிரை வீரர்கள உள்நாட்டு  வருகின்றனர். பஞ்சம், விவசாயிளின் கஷ்டம், கருப்பு இறப்பு எனப்படும் கொள்ளை நோய்கள் பரவுதல், ஏராளமான குழந்தைகள் இறப்பு ()7/8 குழந்தைகள் பெற்ற  அன்னைகள் கூட குழந்தையின்றி போன நிலை).  இந்த மோசமான கால கட்டத்தில் தான் நிக்கோலஸ் கல்பெபேர் மக்களுக்கு மூலிகை மருந்துகளும், புத்தகமும் கொடுத்து பிரபலமானார்.பிறப்பிலிருந்தே வித்தியாசமாக, மூட கருத்துகளை எதிர்க்கும் குணம் உள்ளவராக  உருவானவர்.

Nicholas Culpeper, Culpeper's English Physician - SMU

ஆலோசனையாளார்கள்..Dr.அனுபவம், Dr. காரணம்..!

  கல்பெபேர் தன ஆயுள் காலம் முழுவதும்,இங்கிலாந்தை சுற்றியுள்ள இடங்களிலேயே சுற்றித் திரிந்தார். எதற்க்காக? அங்கு இருக்கும் மருத்துவ மூலிகைகளைக் கண்டறிவதற்காகவே..கல்பெபேர் அவர் காலத்தில் வாழ்ந்த இயற்கைக்குப் புறம்பான முறைகளை கடுமையாக விமரிசனம் செய்தார்.அவர்களைப் பற்றி அவர் எழுதியுள்ள வாசகம் : இது எனக்கு ரொம்ப மகிழ்வானதல்ல.லாபம் குறைவானதும் தான். ஆனால் நான் எனது இரண்டு சகோதரர்களை கலந்தாலோசித்தேன்..அவர்கள் Dr. காரணம் மற்றும் Dr.அனுபவம். மேலும் எனது தாய் இயற்கையை சந்திக்க  பயணித்தேன்.அவரின்  பேரிலும் Dr .விடாமுயற்சியின் உதவியுடனும்,நான் எனது விருப்பத்தை அடைந்தேன்.நான் திருமிகு, நாணயத்தால் எச்சரிக்கப்பட்டேன்.அவர் நமக்கு அன்னியமானவராகவே இருக்கிறார். அவற்றை உலகுக்கு வெளியிட வேண்டும். நான் செய்திருக்கிறேன்.

 writing: “This not being pleasing, and less profitable to me, I consulted with my two brothers, DR. REASON and DR. EXPERIENCE, and took a voyage to visit my mother NATURE, by whose advice, together with the help of Dr. DILIGENCE, I at last obtained my desire; and, being warned by MR. HONESTY, a stranger in our days, to publish it to the world, I have done it.”

    சந்தேகமே இன்றி, உலகுக்கு நிக்கோலஸ் கல்பெபேரின் மிகப்பெரிய பங்களிப்பு என்பது, முழுமையான் மூலிகைகளும், ஆங்கிலேய மருத்துவனும்.(“Complete Herbal and English Physician”) என்ற புத்தகம்தான்.இதுதான் இங்கிலாந்திலேயே சிறந்த மூலிகை மருத்துவக் குறிப்பாக ஒரு 250 ஆண்டுகளுக்கு  அந்த நாட்டை வலம் வந்து அதன் ஆளுகைக்கு உட்படுத்தியது.

சிறுவயதில்..பலியான மருத்துவர்..!

  நிக்கோலஸ் கல்பெபேருக்கு ,ஒரு முற்றுகையின் போது  ,அவரின் தோளில் துப்பாக்கி குண்டு துளைத்தது. அதில் ஏற்படுத்திய பாதிப்பால் அவரை என்புருக்கி நோய் தஞ்சம் அடைந்தது.பின்  நிக்கோலஸ் கல்பெபேர் தனது மிகக் குறைந்த 38 வது வயதில், நிக்கோலஸ் கல்பெபேர், என்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்டு, 1654, ஜனவரி 10ம் நாள் தான் சிந்திப்பதை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்னர்தான் , அவரின் ஆங்கிலேயா மருத்துவர் வெளியீடும் நடந்தது..கல்பெபெரின் பிரசுரிக்கப் படாத கையெழுத்துப் பிரதிகள், அவரின் மறைவுக்குப் பின்னரே வெளியிடப்பட்டன.ஆனால் அவற்றின் பெரும்பகுதி, 1666 ல் ஏற்பட்ட லண்டனின் பெருந்தீ க்கு இரையாயினமிகவும் இளைய வயதினராய் நிக்கோலஸ் மறைந்தது என்பது அறிவியலுக்கு மிகப் பெரிய சோகம்தான்.

(பேரா.சோ.மோகனா)

Culpeper's Complete Herbal | Cheryl Bolen's Regency Ramblings

References :

  1. http://www.skyscript.co.uk/
  2. http://www.ediblewildfood.com/bios/nicholas-culpeper.aspx
  3. http://www.famousscientists.org/nicholas-culpeper/
  4. http://www.bbc.co.uk/programmes/b0074syr
  5. http://www.traditionalmedicine.net.au/culpeper.htm
  6. http://www.sciencemuseum.org.uk/broughttolife/people/nicholasculpeper.aspx
  7. http://www.amazon.in/The-Herbalist-Nicholas-Culpeper-Medical/dp/0007126581
  8. http://www.librarything.com/subject/Culpeper,+Nicholas,+1616-1654


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *