சங்க இலக்கியங்களில்  வந்து நிற்கும்,என்றும் நினைவில் நிற்கும் தோழியை ஞாபகப்படுத்தி விட்டு. “நிலாமகளுக்கு ஒரு தோழி” என்ற தனது மூன்றாவது படைப்பு இலக்கியத்தில். தமிழ் உறவுகளை சந்திக்கும்,கவிஞர் இரா. மதிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களையும் கூறிக் கொள்வதில் உள்ளம் மகிழ்கிறேன்.
மாத, வார இதழ்கள் மற்றும் இருபது மேற்பட்ட பல்வேறு மின்இதழ்களிலும், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கவிஞரின் படைப்புகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன., வளரும் இளம் கவிஞர்களில் கவிஞர் இரா, மதிராஜ், ஒருவர் என்பதை தொடர்ந்து வெளிவரும் அவரதுகவிதைகளும். படைப்புகளுமே சாட்சி. சக எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.
“வேர்களைப் பற்றி ஒன்றும் யாரும், 
பார்க்க வேண்டியதில்லை அவைகள் 

ஒன்றாய் தான் இணைந்திருக்கும்

நூல் ஆசிரியர்
எப்பவுமே”
மண்ணில் புதைந்து தாங்கிப் பிடிக்கும் வேர்கள், தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய மரங்களின் வேர்களின் ஒற்றுமையை, சாதி மத பேதமற்ற, மனித குலத்தின் ஒற்றுமையை மரத்தின் வேர்கள் வழியாக நின்று பார்க்
கும் கவிஞரின் சமூக பார்வை பாராட்டுதலுக்குரியது.
தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலத்தையும், நீர் வற்றி காணாமல் போன ஊர் கிணறுகளைப் பற்றியும், அரைகுறையாக நிறைவேறும் நீர்மாலை சடங்குகளைப் பார்த்து,
தான்பிறந்து வளர்ந்த மண்ணின் வேதனைகளை, கவிஞர் இவ்வாறு பதிவுசெய்கிறார்.
“ஊர் கிணறுகளும் இல்லை, 
நீர் மாலை ஊர்வலங்களும் இல்லை, 
தண்ணீரை விலைக்கு வாங்கி தலைக்கு மட்டும் தெளித்து 
நீர் மாலை சடங்குகள்நிறைவேறுகிறது.”
“பூமி பந்தின் 
ஓரங்களில் எல்லாம், 
இந்த மதுபானம் பாட்டில்கள். முத்தமிட்டு கொண்டிரு.க்கிறது.”
மது மற்றும் மது பாட்டில்களின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மனிதனையும், அவன் வாழும் நிலத்தையும் பற்றிய  கவிஞரின் சமூக பார்வை விசாலமானது.
“இமைகளின் இறுதி 
முத்தமே,
மரணமாகிறது.”
புதிய சிந்தனை பார்க்கும் கோணம். மரணம் குறித்தவரையறை அருமை
இப்பேரண்டம் விரிவடைந்து கொண்டே செல்வதாக. அறிவியல் கூறுகிறது.
“இதுவரை
எழுதாதக் 
கவிதைகள்
அனைத்தும்
 இயற்கை இடமே 
இருக்கிறது…!”
இந்த கவிதை வரிகள் கருத்தாழம், பொருண்மை நிறைந்ததாகவும்,கவிஞரின் சிந்தனை பரந்து விரிந்து செல்வதாக எனக்குத் தெரிகிறது.
“முற்றிலும்.
இருள் சூழ்ந்த
என் உலகுக்கு,
உன் ஒற்றை 
புன்னகை
மட்டுமே 
விளக்கு.”
ஒரு ஆண்மகன் பார்வை படும்போதுதான், அவள் பேரரழகி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறாளோ?
“அவள்  அப்படி ஒன்றும்.
பேரழகியல்ல 
அவன் ஏறிட்டுப் 
பார்க்காத வரை..”
குடும்ப பாரத்தை சுமக்கும் ஒரு தந்தையின் நிலைமையை, கடந்து செல்லும் ஒரு மஞ்சள் நிற பேருந்து, ஞாபகப்படுத்தி விட்டு செல்வதாக கூறுகிறார், இவ்வாறு.
“தன் மகளின்
 கல்லூரி கட்டணத்தை இன்னும் செலுத்தாமல் இருப்பது.”
சிறகடித்து பறக்கும் இந்த வண்ணத்துப்பூச்சியின் ஆசையை நிறைவேற்றுவோம்,இயற்கையை பாதுகாப்போம், அதை எதிர்கால சந்ததியின் கையில் கொடுப்போம்,  இயற்கை குறித்தான கவிஞர்களின் பார்வை பசுமையானது.
“வட்டமடிக்கும் அந்த 
வண்ணத்துப்பூச்சி சொல்கிறது,
இன்னும்
 சில தினங்களில் 
பசுமையைக் 
காணலாமென்று…!”
“பூனை இன்று.
ஏன் கறி எடுக்கவில்லை.
என்று.
என்னிடம் கேட்பதாக உணர்கிறேன்….!”
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டடீர்.
என்று பாரதியார் சாதி மத வேறுபாடுகளை.தவிர்த்துஒற்றுமையை வலியுறுத்தும்பாரதிக்கு பிறகு, கவிஞர் இரா,மதிராஜ் அவர்கள் பூனை மூலம். வேலையில்லா திண்டாட்டம் குடும்ப வறுமை,  நடைமுறை வாழ்க்கை சூழலை இவ்வாறு மேற்கோள்காட்டுகிறார்.
“கற்காலம் என்பது எதுவுமில்லை 
எனக்கு.
அவளைப் பற்றிய.
அறிமுகம் இல்லாத 
காலம் தான்.”
காதல் திருமணத்திற்கு முந்தைய வாழ்வினை கற்காலம் என்று வரையறை செய்கிறார்.
தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் கவிதையாக்கும் கலை அருமை.
“இணிப்பாக ப் பார்க்கப்படுவதில்லை,
மாறாக
கணக்காகவேபார்க்கப்படுகிறது.”
மேலும் இது போன்ற படைப்புகள் பல வெளிவர வேண்டும்.
இதுவரை
எழுதாதக்
கவிதைகள்
 அனைத்தும்
 இயற்கை இடமே
இருக்கிறது…!
என்ற தங்கள் கூற்றுபடி பரந்து விரிந்து கிடக்கும்இயற்கையை கவிதைகளாக மொழிபெயர்த்து தமிழ் கூறும் நல்லுகத்திற்கு தரவேண்டும். உங்கள் எழுத்துக்களை வாசிக்க தமிழை சுவாசிக்கும் உறவுகள் பலர் காத்துக்கிடக்கிறார்கள்.
மேலும் உங்கள் படைப்புகள் சிறக்க உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.! நன்றி.!
                           
                        நூலின் தகவல்கள் 
நூல் : “நிலா மகளுக்கு ஒரு தோழி” (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் :
வெளியீடு  : இயக்கி பதிப்பகம்
பதிப்பு        :  தை 2024
பக்கம்         : 96 பக்கங்கள்
                    அறிமுகம் ஏழுதியவர் 
             கவிஞர் அ. செல்வராஜ் 
        முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடுமலைப்பேட்டை 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *