“நிலைகெட்ட மனிதர்கள்” – சிறுகதை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கணேசபாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினைக் கேட்ட கணேசபாண்டியன் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறு வெளியே வந்தார்.
ஊடகங்கள் அவரை சூழ்ந்துகொண்டன சார்! சார்! என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது எதற்காக வழக்கு தொடர்ந்தீர்கள்? என்று பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் எனச் சூழ்ந்து கொண்டு அவரிடம் கேள்விக்கணை தொடுத்தனர்.
அழுகையை நிறுத்த முடியாமல் தழுதழுத்த குரலிலே பேசினார் கணேச பாண்டியன். சார் கொஞ்சம் சத்தமாக பேசுங்கள் எதுவும்புரியவில்லை ஊடகவியலாளர்கள்.
அழுகையை அடக்கி கொண்டு சார் என்னோட பேரு கணேசபாண்டியன் நான் தாழையூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் என் மீது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு பணியிட நீக்கம் செய்யப்பட்டேன்.
எதற்காக உங்கள் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது யார் சுமத்தினார்கள்?
சார் ஒரு பள்ளியில் நேர்மையான ஆசிரியராக பணிபுரிந்தால் பல சோதனைகளுக்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது. தலைமை ஆசிரியரின் அனைத்துச் செயல்களுக்கும் அடிபணிய வேண்டும்.
நான் எல்லா தலைமை ஆசிரியர்களையும் குறிப்பிடவில்லை. ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தான்சொல்வதுதான் வேதவாக்கு மாற்றுக் கருத்து எதுவும் எந்த ஆசிரியரும் சொல்லக்கூடாது அவர்கள் செய்யும் தவறுக்கு உடந்தையாக இருக்க வேண்டும். எதிர்த்து கேட்டுவிட்டால் அவர்களை பழிவாங்குவது அவருக்கு ஆதரவாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தனிச் சலுகை வழங்குவது எனச் செயல்படுகின்றனர்
தனிச்சலுகை என்றால் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்வி.
பள்ளிக்கு காலதாமதமாக வரலாம் பள்ளி முடிவதற்குள் அனுமதி என்ற பெயரில் வெளியில் செல்லலாம் விடுமுறை முதல் நாள் எடுத்தால் மறுநாள் கையொப்பமிட்டுக்கொள்ள அனுமதிப்பது இவை போன்ற சலுகைகள் தான் சார் . தனக்கு சாதகமாக செயல்படும் ஆசிரியர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது.
சார் உங்களுக்கு என்ன பிரச்சனை உங்கள் மீது ஏன் பாலியல் குற்றம் சாட்டப்பட்டது?
பாட வேளையில் வகுப்புக்கச் செல்லாமல் அனிதா சீதா லட்சுமி ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் ஓய்வு அறையில் தூங்குவது பூ கட்டுவது என இருப்பர். அதை தட்டிக் கேட்டதால் என் மீது அவர்களுக்கு வெறுப்புணர்வு. மாணவர்கள் நலன் பாதிக்கப்படுவதை பார்த்து என்னால் சும்மா இருக்க முடியவில்லை மாவட்ட கல்வி அலுவலருக்கு பெற்றோர்கள் மூலம் புகார் மனு அளித்தேன்.
மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை என்ற பெயரில் வந்து விசாரித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெறும் ஊழல் பற்றி பொது மேடையில் பேசினேன்.
இவையெல்லாம் உங்கள் பள்ளிக்கூடத்தில் மட்டும் தான் நடக்குதா?.
சார் எந்த பள்ளியில் நடக்குதோ எனக்கு தெரியாது நான்வேலைபார்க்கிறபள்ளியில்நடக்கக் கூடாது என்று மேலதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன்.
அந்த இரண்டு ஆசிரியர்களும் என் வீட்டின் அருகில் தான் இருக்கிறார்கள். எனக்கும் அவர்களுக்கும் முன் விரோதம்.
மாவட்ட கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர் பற்றி இயக்குனருக்கு புகார் அளித்ததாலும் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு இரண்டு ஆசிரியைகளுக்கும் நான் தொடர்ந்து பாலியல் தொந்தரவு தருவதாக மாவட்ட கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர் மாவட்ட கல்வி நேர்முக உதவியாளர் உடந்தையுடன் என் மீது பாலில் குற்றம் சாட்டப்பட்டது.
பாலியல் குற்றம் பற்றிய விசாரணைக்கு யாரெல்லாம் வந்தாங்க மாணவர்கள் பெற்றோர்கள் என்ன கூறினார்கள்.
விசாரணை ரகசியமாக மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் இதனை கண்டு கொள்ளவே இல்லை.
முன்விரோதம் காரணமாக அனிதா சீதாலட்சுமி ஆகியோர் சத்துணவு அமைப்பாளர் முருகேஸ்வரியின் பெயரில் போலியான ஆவணம் தயாரித்துப் பொய்ப் புகார் அளித்தனர்.
இதுதான் தருணம் என்று கருதிய அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து விசாரணை என்ற பெயரில் ஒப்புதலுக்காக விசாரணை செய்துவிட்டு உங்கள் மீது இரு ஆசிரியர்களும் கூறிய பாலியல் குற்றச்சாட்டு உண்மை எனவும் எனவே உங்களைப் பணியிட நீக்கம் செய்கிறேன் என்று கூறிவிட்டு பள்ளியிலேயே தட்டச்சு செய்து பணியிட நீக்க ஆணையை மாவட்ட கல்விஅலுவலர் கையொப்பம்மிட்டு எனக்கு தந்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் யார் பெயரில் புகார்மனுதரப்பட்டதோ அந்த சத்துணவு அமைப்பாளரை விசாரணை செய்யவே இல்லை.
நீங்கள் ஒன்றும் செய்யவில்லையா ஊடகவியலாளர்கள் கேள்வி.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை.அடுத்த பேரதிர்ச்சியாக என் மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.
என்னங்க தொலைக்காட்சியில் உங்களைப் பற்றி செய்தி வந்து கொண்டிருக்கு. நீங்கள் இரண்டு ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அது நிரூபணம் ஆனதால் உங்களை மாவட்ட கல்வி அலுவலர் பணியிட நீக்கம் செய்துள்ளதாகவும் செய்தி போட்டுக்கிட்டு இருக்காங்க என்று கதறி அழுதாள் என் மனைவி சாந்தி.
இந்தச் செய்தியைத் தொலைக்காட்சி நாளிதழுக்கு தந்தவரே மாவட்ட கல்வி அலுவலர் தான்.
இரண்டு மூன்று நாள் வீட்டை விட்டு வெளியேவே வரவில்லை. வீடே மயான அமைதியாக இருந்தது. தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருந்தது நாம் என்ன குற்றம் செய்தோம்? நல்லதை தட்டிக்கேட்டத்திற்கு இப்படி ஒரு தண்டனையா? இதில் நாம் தோற்றுவிடக்கூடாது என் அப்பா அம்மா மனைவி என எல்லோரும் உத்வேகம் தந்தனர்.
இதனைத் தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்ற உத்தரவுபடி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
இதில் சத்துணவு அமைப்பாளர் முருகேஸ்வரின் பெயரில் எனக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து ஆசிரியர்கள் அனிதா சீதாலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது.
இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதன் பின்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் எனக்கு என்னுடைய தற்காலிக பணி நீக்கம் பணிக்காலமாக கருதி ஊதியம் பெற்றிட உத்தரவும் வழங்கப்பட்டது.
அதோடு அந்தப் பிரச்சனை முடிவு பெற்றதா? மற்றொரு செய்தியாளர் கேள்வி.
இல்லைசார்நான்சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்
பத்து ஆண்டுகளுக்குப் பின்பு நீதி வென்று உள்ளது. நேர்மை வென்றுள்ளது விசாரணை முடிந்த நிலையில் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் முகமது காசிம் இன்று தீர்ப்பளித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் ஆசிரியர்கள் அனிதா சீதாலட்சுமி ஆகிய மூன்று பேருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றொரு மாவட்டக்கல்வி அலுவலர் தனசேகரனுக்கு ஒன்றைரை ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வட்டார கல்வி அலுவலர்கள் இருவர் என மூன்று பேருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். அத்துடன் எனக்கு ரூபாய் ஐம்பதாயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு உங்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறதா? தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீங்க.
ஊடகவியலாளர் நண்பர்களே! நேர்மை என்றுமே அழியாது. குறுக்கு வழியில் செல்வோர்க்கு வாழ்வில் ஒரு நாள் ஏதோ ஒரு வடிவில் நிச்சயம் தண்டனை கிடைக்கும்.
இதை உணராமல் பல அலுவலர்கள் லஞ்சம் வாங்குவது தட்டி கேட்பவரை பழி வாங்குவது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியப் பெருமக்களும் தன் கடமையில் இருந்து தவறுவது மற்றவர் மீதுபொய் புகார் அளித்தால் அதற்குரிய தண்டனை கிடைக்கும் என்பதை இதன் வாயிலாக உணர்ந்து கொள்வார்கள் என்று நிச்சயம் நம்புகின்றேன்.
” வாய்மையே வெல்லும் “என்ற நீதிமன்றத்தின் முகப்பில் எழுதப்பட்டிருந்த சொற்றொடரினைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு” நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்ற பாரதியின் வரிகளை கூறிவிட்டு தன் குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றார் கணேசபாண்டியன்.
📚 எழுதியவர்:

✍️ – கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப் புது தெரு
சக்கம்பட்டி –625512
ஆண்டிபட்டி
தேனி மாவட்டம்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

