1925-ல் உருவாக்கப்பட்டு இதுவரை இந்தியாவின் எந்த ஒரு சட்டத்தின் கீழும் எங்கேயும் பதிவு செய்யப்படாமலேயே பண்பாட்டு இயக்கம் என்று அறிவித்து அரசியலையே மையப்புள்ளியாக வைத்து இயங்குகின்ற, ஆதிக்க மனோபாவ இந்துக்களை கொண்டிருக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ். சீருடை ஆயுதப்பயிற்சி, ஆயுதம் இல்லாப் பயிற்சி போன்றவற்றோடு பெனிட்டோ முசோலினி உருவாக்கிய இத்தாலிய பாசிச இயக்கங்களின் பாணியில் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ்.

இதன் வலையமைப்பு சீராக பெருகிப் பெருகி தற்போது 30க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளோடு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட திட்டப்பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது. ஆனால் அதிகமாக கேள்விப்பட்டிராத அல்லது வெளியில் தெரியாத எண்ணற்ற பெயர்களில் பல திட்டப் பணிகளையும் சங்பரிவார் செய்து வருகிறது.

பாஜக மட்டும்தான் அதிகாரப்பூர்வமான அரசியல் ஈடுபடுவதற்காக உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு என்று நாம் கருதினாலும், முழுமையாக அரசியல் செய்வது ஆர்எஸ்எஸ் தான். தேர்தலில் போட்டியிடுவதை தவிர ஒரு அரசியல் கட்சி செய்யும் அனைத்தையும் இது செய்கிறது. மக்களைத் திரட்டுவது, அரசியல் பிரிவினைகளை உண்டாக்குவது, சிக்கல்களை வளர்த்தெடுப்பது, தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது, வாக்குச்சாவடி அளவிலான  பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பது என அனைத்திலும் தலையிடுகிறது. அல்லது அதுதான் முடிவு செய்கிறது.

அதுமட்டுமில்லாமல் உத்திகளையும், சித்தாந்த வழிகாட்டல்களையும், ஊழியர்களையும், தலைவர்களையும் பாஜக உள்ளிட்ட இதர துணை அமைப்புகளுக்கு வழங்குவது ஆர்எஸ்எஸ்தான். அதுமட்டுமில்லாமல் நேரடியாகவோ அல்லது அதன் துணை அமைப்புகளின் மூலமாகவோ ஏராளமான வகுப்புவாத கொந்தளிப்புகளிலும் இதன் பங்கு இருக்கிறது.

பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் அந்த அமைப்புக்குள் எந்தவித தொடர்பும் அற்ற ஒரு தொடர்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த தொடர்பற்ற தொடர்பு தான் ஆர்.எஸ்.எஸ் -ன் மிகப்பெரிய பலமாகவும் இருக்கிறது. உதாரணத்திற்கு கல்புர்கி, லங்கேஷ்கர், கோவிந்த்பன்சாரே படுகொலைகளில் ஈடுபட்டது ஆர்எஸ்எஸ் நிழல் இராணுவங்களே ஆனால் நேரடியாக இதில் ஆர்.எஸ்.எஸ் -ன் தொடர்பு இல்லை என அவர்களால் தப்பிக்க முடிகின்றது. காரணம் அவர்கள் உருவாக்கி வளர்த்த வருகின்ற இத்தகைய உதிரி அமைப்புகளே.

தேசத்தின் மிகப் பெரிய நாச செயல்களான மகாத்மா காந்தியின் கொலை துவங்கி, பாபர் மசூதி இடிப்பு வழியாக இன்றுவரை ஆர்எஸ்எஸ் அல்லது சங்பரிவார் அமைப்புகள் செய்திருக்கிற பல்வேறு துறைகளிலும், பல்வேறு தளங்களிலும் பல்வேறு வெடிகுண்டு வழக்குகளிலும் அவர்கள் நேரடியாக சிக்காமல் தப்பிக்க அவர்களின் இத்தகைய கட்டமைப்பு ஒரு காரணமாய் இருந்திருக்கிறது.

RSS ropes in professionals from top business schools to lure youth ...

புதிய புதிய அமைப்புகளை துவக்குவதற்கும், புதிய புதிய பெயர்களில் செல்வதற்கும் அவர்கள் எப்போதும் தயங்கியது கிடையாது. வரலாற்றுப் போக்கில் இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் இத்தகைய முயற்சிகளில் மிக மிகப் பின்தங்கி இருப்பது வேதனைக்குரிய ஒன்றுதான்.

ஆர்எஸ்எஸின் விஷப் பின்னல்களையும் அவற்றின் நிழல் ராணுவங்களையும் திரேந்திர அவர்கள் ஆய்வு பூர்வமாக பல இடங்களில் சுற்றித் திரிந்து இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்தியாவில் இருக்கிற அனைத்து நிலவரங்களையும் முழுமையாக ஆய்வு செய்வது அவர் நோக்கம் அல்ல, அதற்காண வாய்ப்பும் குறைவு. ஆனால் பாஜகவோடு நேரடியாக சம்பந்தப்பட்ட இருக்கின்ற நான்கு இயக்கங்களையும் நேரடித் தொடர்பு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறேன் அல்லது நடித்துக்கொண்டிருக்கிறார் நான்கு இயக்கங்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை மிகவும் ஆய்வு பூர்வமாக, உண்மைதன்மையோடு இந்த புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.

சனாதன் சன்ஸ்த்தா, இந்து புவ வாகினி. பஜ்ரங்தளம், ஸ்ரீராம் சேனா, இந்து ஐக்கியவேதி, அபினவ் பாரத், போன்சாலா இராணுவப்பள்ளி, இராஷ்ட்ரிய சீக் சங்கத் ஆகிய எட்டு அமைபுகளே இந்நூலில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவை.

2.1 பகுத்தறிவாளர்கள் படுகொலைகள்:  தன்னைதானே கடவுள் என அழித்துக்கொள்ளும் ஜெயந்த் பாலாஜி அதாவ்லே என்பவராக் உருவாக்கப்பட்டதுதான் சனாதன் சன்ஸ்த்தா என்ற அமைப்பு. கோவாவின் இராம்நதி கிராமத்தில் பிருமாண்டமான மாளிகைதான் இவர்களது தலைமையிடம். இதனருகில் ஓடுகிற நதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆணுறைகளை கொட்டி நிலங்களை பாழ்படுத்திய தரமான அமைப்பு இது. 2009 அக்டோபர் 16ஆம் தேதி மாலையில் மடகாவினில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு கோவா காவல்துறையினர் அதிரடியாக சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்துக்குள் நுழைந்தனர்.

2008 ஆம் ஆண்டின் மத்தியில் தானே மற்றும் வழி பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தியதற்காக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலரையும் மகாராஷ்டிர காவல்துறை கைது செய்தது. அதே ஆண்டு ஜூன் 4ஆம் தேதி அன்று தானேவில் உள்ள கட்காரி ரங்கயதன் அரங்கத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு குண்டு வெடித்ததில் 7 பேர் காயமடைந்தனர்.

பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட விக்ரம்பாவே மற்றும் ரமேஷ் கட்காரி என்ற சனாதன் சன்ஸ்த்தா அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கும் மும்பை நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இவ் வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுமே குற்றவாளிகளுக்கும் அமைப்புக்கும் தொடர்பில்லை என சொல்லி சனாதன் சன்ஸ்தா தட்டிக்கழித்து மடகாவ் குண்டுவெடிப்பு விசாரணையில் அவ்வியக்கத்தின் உண்மையான முகத்தை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தது காவல்துறை.

தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை ...

இவ்வியக்கம் பயங்கரவாத இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது எம கோவா காவல்துறை மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு படையினர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்து சனாதன் சன்ஸ்தா இயக்கத்தை தடை செய்ய கோரினர். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி எனினும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்பு பாஜக ஆட்சி வந்தால் அவர்களை தொடக்கூட முடியவில்லை.

அதன் விளைவு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த தபோல்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சினுடைய மகத்தான தலைவர் கோவிந்த் பன்சாரே, ஹம்பி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கல்புர்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த எல்லா படுகொலைக்கு பின்பும் இந்த அமைப்பே காரணம். இவர்களின் பாதுகாப்பு ஆர்.எஸ்.எஸ்.

2.2 யோகி எனும் குற்றவாளி: 1999ஆம் ஆண்டு சமாஜ்வாதி பாராளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு செய்து அந்த வழக்கில் சிக்கியவர் தான் யோகி ஆதித்யநாத். 2002இல் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மிகமோசமாக தோற்று அதிகாரத்தை சமாஜ்வாதி கட்சியிடம் இழந்ததும், 2002 ஆம் ஆண்டில் யோகி ஆதித்யநாத் ”இந்து யுவ வாகினி” என்னும் அமைப்பை துவக்கினார். இந்த இயக்கம் துவங்கப்பட்ட திலிருந்தே நச்சு கலந்த மதப் பிரச்சாரத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்தது. எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடாமல் மிகச் சிறிய பிரச்சனையைக் கூட முழுவீச்சில் கலவரமாக்கியது.

Three years of Yogi Sarkar CM Yogi Adityanath counts achievements ...

சிறுபான்மையினரை இந்துக்களின் எதிரிகளாக சித்திரிப்பது, லவ் ஜிகாத்,  முஸ்லிம்களின் புலால் உண்ணும் பழக்கங்கள்,  அவர்களது வன்முறை நிறைந்த குணம்,  இந்து மத நம்பிக்கைகளையும் தேசிய சின்னங்களையும் அவர்கள் வேண்டுமென்றே அவமதிப்பது என கதைகளை உருவாக்கியது. இதற்கு அடுத்தடுத்த தேர்தல்களில் கைமேல் பலன் கிடைத்தது. 1999 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 1339 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்த யோகி, 2004 தேர்தலில் அதே தொகுதியில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள், 2009 இல் மூன்று லட்சம் வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்

இந்து யுவ வாவியின் உறுப்பினர்கள் களத்தில் ஆதித்தியநாத் தவிர யாருக்கும் அடிபணியாத அடியாட்கள். ”கௌரக் ஷா பிதாதீதாஸ்வர் பரம்பூஜ்ய ஆதித்யநாத் ஜி மஹராஜ்” எனதான் அழைப்பர். ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை, பஜ்ரங்தள் யுவ வாகினி என அனைத்து அமைப்புகளின் மதவெறி செயல்பாடுகள் மூலம் கிடைத்த வாக்குகளை வைத்து தான் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக இன்று ஆதித்யநாத் விட்டிருக்கிறார்.

ஆதித்யநாத் மீது பல வழக்குகள், அவரது இந்துவ அமைப்புகள் மீது எண்ணற்ற சாட்சியங்கள் இவைகள் அனைத்தையும் முலாயம் சிங் யாதவ் மற்றும்  அகிலேஷ் யாதவ் மிக பொறுப்புணர்வோடு கையாண்டிருந்தால் ஆதித்யநாத் சிறையிலிருந்து இருந்திருப்பார். ஆனால் யோகி இன்று முதல்வர் இப்போது குற்றம் சாட்டியவர்களை, நேர்மையானவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

2.3 ரவுடிகள் கூடாரம்: பஜ்ரங் தளம் பாப்ரி மசூதி இடிப்பு சம்பவத்தில் பங்கேற்ற மிகப்பிரபலமான அமைப்பு. அதை மார்தட்டிக் கொண்டு பேட்டி அளித்தவர்கள். இப்பொதும் மங்களூரில் இருக்கின்ற வியாபாரிகளை தாக்குவதும் அவர்கள்தான் அவர்களைப் பாதுகாக்க ஆட்களை அனுப்புவதும் அவர்கள்தான். அதாவது தனியார் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி அடியாட்களை பஜ்ரங்தள் தலைவர்களே! இவர்கள் இயக்கத்தினால் நிகழ்த்தப்படும் கலவரங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு காவல்துறையின் அணுகுவது பயனற்றது என்று மங்களூர் வியாபாரிகளும் பொதுமக்களும் கருதுவதால் பஜ்ரங்தள் இயக்கத்திற்கு கலவரம் லாபம் கொழிக்கும் தொழிலாய் மாறியுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பதையும் அதை தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவது மையமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்காகவே 1980களில் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பால் உருவாக்கப்பட்ட இளைஞர் குண்டர் படை தான் பஜ்ரங்தள். பலமும் வலிமையும் உடைய என்கின்ற அர்த்தத்தைக் கொண்ட பஜ்ரங்தள் என்ற வார்த்தையை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் பயங்கரவாத ...

மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆனால் நரசிம்மராவ் அரசின் நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது. 1992 டிசம்பர் 10 ஆம் தேதி வி.எச்.பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்தது. ஆனால் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக சமரசப் போக்கு உடனேயே நடந்துகொண்டது மிக சொற்ப எண்ணிக்கையிலான நபர்களை கைது செய்யப்பட்டனர். பலான முக்கிய பிரமுகர்கள் மறைவாக சென்று விடவும் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்பு ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தளம் மீதான தடை நீக்கப்பட்டது

பல்லாண்டுகாலம் வாய்புகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அமலாக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தை தூண்டியதில் இந்த அமைப்பே முதல் நின்றது. மோடி முதல்வராய் இருந்த போது குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் மீதான கொடூரமான கொலைகளை கட்டவிழ்த்துவிட்டவன் பாபு பஜ்ரங்கி. இவன் பஜ்ரங்க்தள் தலைவன். இவன் நடத்திய படுகொலைகளை பெருமையோடு டெகல்கா பத்திரிக்கை நிருபரிடம் பட்டியலிட்டு அம்பலப்பட்டபோது அந்தாமைப்பிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என ஆர்.எஸ்.எஸ் மறுத்தது. ஆனால் பஜ்ரங்தள் ஆர்.எஸ்.எஸ் ஆலகால விஷ்த்தை உணவாக கொண்டு வளந்த இயக்கம்.

2.4 ஸ்ரீராம் சேனா எனும் கூலிப்படை : பள்ளி காலம் மட்டும் இளமை காலம் முழுவதையும் கர்நாடக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இருந்தேன். சிறையில் நான் கண்டெடுத்த பாதையில் பயணிக்கத் துவங்கினேன் நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக அவ்வியக்கம் கொடுத்த பொறுப்புகளையும் பணிகளையும் செய்து வந்தேன்” இப்படி வாக்குமூலம் கொடுத்தது ஸ்ரீர்ச்ச்ம் சேனா எனும் காவிப்படையின் தலைவர் முத்தலிக். ஆனால் அவர்கள் யாரென்றே தெரியாது என சாதிக்கும் ஆர்.எஸ்.எஸ்?

1993 இல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படைவாத பண்பாட்டை இயக்கமான விஹெச்பி அமைப்பின் பொறுப்பாலராக இருந்தவர். 1994 கர்நாடக பஜ்ரங்தள் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட முரண்பாட்டால் கூட்டத்துடன் சிவசேனாவிற்கு மாறி அதன் கர்நாடக பிரிவுக்கு தலைமை தாங்கினார்.  மராட்டி மற்றும் கன்னட மொழி வெறியர்களுக்கு இடையிலான மோதல்கள் வெடித்தன. எனவே சிவசேனாவிற்காக கர்நாடகாவில் இயங்குவது இயலாத காரியமாகி விடும் என்பதால் 2006-ல் ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பை துவக்கினார்.

கலவரங்கள் நாசவேலைகளில் கலாச்சார காவல் நடவடிக்கைகள் வகுப்புவாத வன்முறைகள் போன்றவற்றின் பெரும்பாலான வழக்குகளில் ஸ்ரீராம் சேனாவின் பெயர் இல்லாமல் இல்லை. இதனால் தன்னுடைய போராட்ட களத்தை ஸ்ரீராம் சேனாவிடம் பஜ்ரங்தள் இழந்தது, தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயன்றது. 2002 போட்டி இந்துத்துவ அமைப்புகளுக்கு நடுவே மாட்டிக் கொண்ட மங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வகுப்புவாத கலவரங்கள் தொடர்ந்து நடந்தன.

2008 ஆகஸ்ட் 26 டெல்லியில் சஹ்மத் என்கின்ற ஒரு அரசு சாரா நிறுவனம் நடத்திய கலை கலைகண்காட்சியில் புகழ்பெற்ற ஓவிய கலைஞரான எம்.எப்.உசை ஒவியங்களை ஸ்ரீராம் சேனாவின் உறுப்பினர்கள் தாக்கி அழித்தனர். இதனால் தேச முழுவதும் இந்த இயக்கம் பரபரப்பானது 2009 ஜனவரி மாதத்தில் கர்நாடக காவல்துறை ஹூப்ளி குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக ஸ்ரீராம் சேனாவின் தொண்டர்கள் 9 பேரை கைது செய்தது. அதே ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மங்களூரில் அம்னீசியா இரவு விடுதியில் இந்து கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மீறுகிறார்கள் எனக்குள்ளே பல இளம்பெண்களை அடித்ததன் மூலம் தேசம் முழுவதும் எதிர்ப்பை சந்தித்தது. கடுமையான நெருக்கடிகளுக்கு பின்பு கர்நாடக பாஜக அரசு அவர்களை கைது செய்யும் நாடகத்தை நடத்தியது.

மிகப்பெரிய இந்து பாதுகாவலர்களை போல தங்களை காட்டிக் கொண்டாலும் இது முழுக்க முழுக்க கூலிக்கு மாரடிக்கும் கூட்டமே. தெகல்கா பத்திரிக்கை நிருபர் ஒருவர் ஒரு ஓவியக் கண்காட்சியில் கலவரம் செய்து புகழ்பெற வைக்க எவ்வுளவு தொகை என பேரம்பேசி ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தலிக்கிடம்  50,000 பணம் கொடுத்து அம்பலப்படுத்தியது.

2.5 கேரளாமீது வைக்கப்படும் குறி: கேரளாவில் பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு அடித்தளம் இடுவதற்காக இந்து ஐக்கிய வேதி என்ற இயக்கத்தை உருவாக்கியது. பிரபல பாடகரான கே.ஜே.ஜேசுதாஸை குருவாயூர் கோவிலில் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோவில் நிர்வாகத்திடம் கேரளாவில் கூட்டுறவு மற்றும் தேவசம்போர்டு அமைச்சராக இருந்த சுதாகரன் கேட்டுக்கொண்டார். அப்போது கே.ஜே.ஜேசுதாஸை மக்காவில் அனுமதிக்குமாறு இதேபோன்று கடிதமொன்றை சவுதி அரேபியா அதிகாரிகளுக்கு அனுப்புவீர்களா என பிரச்சாரம் செய்தனர்.

RSS-BJP against Presidential rule in Kerala, says senior RSS ...

”1921 மாப்பிளாவில் வெறிபிடித்தவாறு முஸ்லிம்கள் நடந்து கொண்டபோது வேறு வழியின்றி தங்களுடைய வீடுகள், சொத்துக்கள், கோவில்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு இந்துக்கள் வெளியேற வேண்டியிருந்தது. கேரள வரலாற்றின் அவமானகரமான பக்கங்கள் அவை.” என வரலற்றை திரித்து நச்சு விஷ வித்துக்கள் இவ்வமைப்பாள் துவப்பட்டது. ஆனால் உண்மை என்ன?

1921இல் மாப்பிள என்றழைக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள் தங்களுடைய நிலவுடைமையாளர்களான நம்பூதிரிகள் மற்றும் நாயர்களை எதிர்த்துப் போராடினார் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களோடு நிரூபித்து இருக்கின்றனர். ஆதிக்கசாதி நிலவுடைமையாளர்கள் மிக மோசமான வடிவங்களிலான சுரண்டலுக்கு எதிராக நடத்தப்பட்ட விவசாயிகள் எழுட்சிக்கு மத சாயம் பூசி ஒடுக்கியது பிரிட்டிஷ் அரசாங்கம். முதன்முதலில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நம்பூதிரியும் நான்கு நாய்களும் கூட உண்டு என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இந்து ஐக்கிய வேதி மற்றும் இன்னும் பிற ஆர்எஸ்எஸ் அமைப்பு களின் ஒட்டுமொத்த கேரள இந்துத்துவ அரசியலும் உச்சியில் இருக்கும் சங்பரிவாரத்தின் தலைமைச் செயலகத்தில் தான் தீர்மானிக்கப் படுகிறது. கேரளாவில் 3000 கோவில்களுக்கு மேலாக நிர்வகித்து வரும் தேவஸ்தான களிடமிருந்து கேரள கோவில்களை விடுவிக்கும் கோரிக்கைகளை இந்து இயக்கம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறது இந்த அமைப்பு. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களின் வழிபாட்டுத் தலங்களை அந்தந்த சமூகத்தினரை நிர்வாகி நிற்பதைப் போல இந்து கோவில்களில் நிர்வாகத்தையும் இந்துக்கள் உடனே கொடுத்துவிட வேண்டும் என கோருகின்றனர். (இந்த கோரிக்கை குறித்து ”யார் கைகளில் இந்து ஆலையங்கள்” என்ற புத்தகத்தை நான் எழுதியுள்ளேன்).

கடந்த தேர்தலில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் என்டிபி என்கின்ற ஈழவ சாதி இயக்கம் பாஜகவோடு கூட்டணி அமைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஈழவ சமூகத்து மக்களின் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கமாக இருந்ததால் மாநிலத்தின் அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை அது பெற்றிருந்தது. இதன் விளைவாக 2011 இல் 6.3.  சதமாக ஆக இருந்த வாக்கு சதவீதம் 2016ல் 16. சதமாக ஆக அதிகரித்தது.

2.6 அபிநவ் பாரத்: கோட்சேவின் வாரிசுகள்:

Image may contain: 1 person

காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் தம்பியான கோபால் கோட்சேவின் மகள், மற்றொரு வகையில் சாவர்க்கரின் தம்பியான நாராயணன் சாவர்க்கரின் மருமகள்தான்  ஹிமானி. இவரின் அரசியல் அனுபவத்தை விடவும் அவருக்கிருந்த இரட்டை பாரம்பரியமே அவரை இந்து மகாசபா சமைக்கும் அதனைத் தொடர்ந்து அபினவ் பாரத்துக்கும் அழைத்து வந்தது. மகாராஷ்டிராவில் அதிதீவிர சாவர்க்கர் விசுவாசிகளால் 2006 இல் துவக்கப்பட்ட இயக்கம்தான் அபிநவ் பாரத்.

மலேகான் குண்டுவெடிப்பில் இந்து தீவிரவாதிகளான அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் கைதான போது, அதனை ஹிமானி வெளிப்படையாக நியாயப்படுத்தி பேசினார். ”தோட்டாவுக்கு பதில் தோட்டா எனும்போது ஏன் குண்டுவெடிப்புக்கு பதிலடி மற்றொரு குண்டு படிப்பாக இருக்கக் கூடாது என்றார்”. மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் விசைத்தறி நகரமான மாலேகானில் 2008 செப்டம்பர் 29 நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் அபினவ் பாரத் என்கின்ற இயக்கம் பரவலாக அறியப்படாமல் போயிருக்கும்.

பயங்கரவாத வழக்குகளில் அச்சம்பவத்தின் விசாரணை மாறுபட்டதாக இருந்தது. மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரே என்பவர்தான் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையை தலைமை ஏற்று நடத்தினார் இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்புவதற்காகவே வலதுசாரி இந்து தீவிரவாத இயக்கங்கள் பார்ப்பதை முதல் முறையாக இந்த விசாரணை வெளிக்கொண்டு வந்தது.

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி ...

இதில் குற்றவாளியான  சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இப்போது எம்பியாக உள்ளார்.

அபிநவ் பாரத் தன் பாத்திரத்தை கண்டுபிடித்த மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படையினர் அதுவரையிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை இந்த கருதப்பட்ட பல்வேறு முந்தைய வெடி குண்டு வெடிப்புகளுக்கு மதவாதிகளுக்கு உள்ள தொடர்பினை வெளிக்கொண்டு வர தொடங்கினர். 2010 டிசம்பரில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் ஆன சுவாமி அசீமானந்தாவின் கைதுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் இந்து தீவிரவாதி செயல்பாடுகள் அறிந்துகொள்ள புதிய பார்வையை கொடுத்தது.

2015 ஜூன் மாதத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ரோகினி சலியன் குற்றவாளிகளை உடனடியாக விசாரிக்க வேண்டாம் என்று தன்னை தேசிய புலனாய்வுத் துறை கேட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார் முன்வைத்தார். காரணம் அந்த கொலையாளிகளுக்கு ஆதரவான அல்லது கொலையாளிகளை வளர்த்த பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்ததுதான்.

2.7 போன்சாலா ராணுவப் பள்ளி – ராணுவ மயமாக்கப்படும் சிறுவர்கள்:

अब RSS तैयार करेगा फौजी, यूपी के इस ...

மாலேகான் குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு பின்னரே மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படையினர் கண்காணிப்பு வளையத்திற்குள் போன்சாலா ராணுவப் பள்ளி சிக்கியது. குண்டுவெடிப்பு தொடர்பான நிகழ்வுகளை விசாரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு பள்ளியுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. அபினவ் பாரத் இயக்கத்துக்கு சில முக்கியமான உதவிகளை ஆர்எஸ்எஸ் நடத்தும் இந்த ராணுவப் பள்ளி செய்திருக்கிறது. மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுப்பதும் பல்வேறு ராணுவ பாதுகாப்பு பணிகளுக்காக தேர்வுகளில் பங்கேற்க அவர்களை தயார்படுத்துவதுமே அதன் நோக்கம்.

அப்பள்ளியை உருவாக்கியவர் மூஞ்சே 1930களில் அவர் ஐரோப்பா சென்றபோது பாசிஸ்டுகள் பயிற்றுவிக்கும் முறைகளை கண்டார். பின்னாளில் போன்சாலா ராணுவப் பள்ளி துவங்குவதற்கு அதன் மூலம் இந்து வகுப்புவாத அரசியலை முன்னெடுக்கும் அவரது ஐரோப்பிய பாசிச படிப்பினையை அடித்தளமாக அமைந்தது.

ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவரின் அரசியல் குருதான் இந்த  மூஞ்சே. 1927 முதல் 1930 வரை அகில பாரத இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர். ஆங்கிலேய ஆட்சியாளர்கள், பாரம்பரிய மன்னர் குடும்பங்கள் மற்றும் பெரு வியாபாரிகள் ஆதரவைப் பெற்றுத்தான், ரகசிய இந்துமத நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றும் ராணுவ பள்ளியை துவக்கினார்.

மராட்டிய மன்னர் குடும்பத்திற்கு தனது விசுவாசத்தைக் காட்டும் விதமாகவும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மராட்டியப் பேரரசை ஆட்சி காலத்தில் சூழல் திரும்ப வேண்டும் என்கின்ற விருப்பத்தை காட்டும் விதமாகவும் போன்சாலா என்ற பெயரையே பள்ளிக்கு தேர்ந்தெடுத்தார். ”எங்கள் குடும்பமே நாக்பூர் மன்னர் குடும்பத்திற்கு விசுவாசமாக பணியாற்ற பணியாற்றிய பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பம் ஆகும் அதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்” என்று குவாலியர் மகாராஜா சிந்தியாவுக்கு அவர் கடிதம் எழுதினார்.

1950களின் இறுதியில் மூஞ்சிய தொடக்கிய ராணுவ பள்ளியை தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் ஆர்எஸ்எஸ் கொண்டுவந்தது. 1996 ஜூன் மாதம் நாக்பூர் பள்ளியின் மற்றொரு கிளையை துவக்குவதில் முக்கிய பங்காற்றியது. நாசிக்கில் 160 ஏக்கர் பரப்பளவிலும், 30 ஏக்கர் பரப்பளவில் நாக்பூரில் அதன் கிளையையும் இயங்கி வருகின்றன. இராணுவத்தை மதவயப்படுத்துவதே இதன் நோக்கம்.

2.8 ராஷ்டிரிய சீக் சங்கத் –  சீக்கிய மத்தை அழிக்க சதி:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய ...

1984 இல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை பயன்படுத்திக் கொண்டு அவர்களைப் பாதுகாப்பதற்காக 1986 நவம்பர் 26ஆம் தேதியன்று ராஷ்டிரிய சீக் சங்கத்  என்ற இயக்கம் உருவானதாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் இது ஆர்எஸ்எஸின் இன்னொரு சதித்திட்டம். 1984 நவம்பரில் சீக்கிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தினால் அம்மக்களிடம் ஏற்பட்டிருந்த பய உணர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் சீக்கியர்கள் இந்துக்கள் தான் என்கின்ற தன்னுடைய கருத்தை முன் வதற்கு முன் வைப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியது ஆர்எஸ்எஸ்.

சீக்கியர்கள் தனியான மத குழுவை சேர்ந்தவர்கள் இல்லை.  இந்து மதத்தின் ஒரு சிறு பிரிவினர்தான் அவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் தான் சீக்கியர்களுக்கு தனியான அடையாளம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டது என்றும் பிரச்சாரம் செய்தனர். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு சீக்கிய அடையாளமே காரணம் என்று வகுப்புவாத கலவரத்தையும் நியாயப்படுத்தும் விதமாக பேசினர்.

இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் எதிர்த்து இரு முனைகள் பதிலடி கொடுக்கப்பட்டது. ஒரு முனையிலிருந்து போர் வீரர்கள் போர்க்களத்திலும்,  பக்தி இயக்கம் என்ற பெயரில் இந்து மதத் துறவிகளும், ஞானிகளும் ஆன்மீக எழுச்சியை நடத்தினர். நாடு முழுவதுமாக இயங்கிய பக்தி இயக்கங்கள் வேதங்களிலும், இதிகாச புராணங்களிலும், தர்ம சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டதையே அவர்கள் சொன்னார்கள் என கதை கட்டினர்.

அப்படி போராடிய சாதுக்களில் ஒருவர்தான் குருநானக். அவர் அழைப்பை எற்றவர்கள் சீக்கியர்கள் என்று அழைக்கப்படனர் என வரலாற்றை திரித்தனர். ரிக், சாம, யஜுர், அதர்வண மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை தொடர்ந்து சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தை ஆறாவது வேதமாக பஞ்சாபின் இந்துக்கள் கருதுவதாக இவர்கள் மடைமாற்றினர். ஆனாலும் சீக்கிய மக்களிடம் இவர்களது வேலைகள் எடுபடவில்லை, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 1997 இல் பஞ்சாபில் உருவான அகாலிதளம் பாஜக கூட்டணி மற்றும் 1998 மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை சாதகமாக மாற்றி பலை விஷ விதைகளை அங்கு விதைத்துள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் முயற்சிகளை துவங்கியிருக்கின்றனர்.

மின்னம்பலம்:சிறப்புத் தொடர் ...

இந்த்துவா அமைபுகளில் வலைப்பின்னல் குறித்த சிறிய சித்திரங்கள் தான் மேலே பார்த்தவைகள் எல்லாம். அவர்களின் இலக்கு ”அகண்ட இந்து ராஸ்டிரம்”!? அதற்காக அவர்கள் குறுகிய நோக்கங்களை கொண்ட இலக்குகளை திட்டமிடுவதில்லை. எந்த ஒரு இலக்கும் குறைந்தபட்சம் கால் நூற்றாண்டு திட்டங்கள்தான். ஆனால் உண்மையில் தேசத்தின் மீது அக்கறை கொண்டுள்ள, மதச்சார்பின்மை மீது அக்கறை கொண்ட இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பது விவாததிற்குரிய ஒன்றாகும்.

தமிழகம் பெரியார் மண், திராவிட இயக்க பாரம்பரியம் கொண்டது, இடதுசாரிகள் பாரம்பரியமாக உள்ள மண் எனவே இங்கு மதவெறி அவ்வுளவு எளிதில் வெற்றி பெறாது என தோழர்கள் முழங்குவதை கேட்க முடிகிறது. உண்மைதான் எனினும் முழு உண்மையா என்ற கேள்வி எழுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியிலும், அதிமுகவிலும் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. எனது பள்ளி மற்றும்  கல்லூரியில் கால நண்பர்கள் இப்போது இயக்கங்களில் முக்கிய பொறுப்புய்களில் இயங்கி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியுடன் அவர்கள் கட்சி  கூட்டணி வைத்த பின்பு நடக்கிற விவாதங்களின் அவர்களது மாற்றங்களை எளிதாக யூகிக்க முடிகிறது. இன்னொரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

வன்னியர் சங்கம் போராட்டங்களை நடத்தியதால், பல உயிர்களை பலிகொடுத்ததால்  மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்கின்ற ஒரு பிரிவை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்கிய மண்டல் கமிஷனை  எதிர்த்து பாஜக ஆர்எஸ்எஸ் செய்த கலவரங்களையும் அதனால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்ததும் அவர்கள் நினைவில் இல்லை. மிக இயல்பாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்களை இந்துதுவ சக்திகள் மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுடைய பதிவிலிருந்து தெரியவருகிறது.

நிழல் இராணுவங்கள் - nizhal-raanuvangal - Panuval ...

இன்னொரு பக்கம் அதிமுகவை பற்றி சொல்லவே தேவையில்லை, எந்த அரசியல் சித்தாந்தமும் இல்லாதவர்கள். மோடி எதிர்த்து எந்த ஒரு கேள்வி கேட்டாலும் அந்தக் கேள்வியின் அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாமல் பிஜேபியின் பின்னூட்டத்தை அப்படியே எடுத்து பதிவு செய்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் நோய்த்தொற்று காலத்தில் மத்திய மாநில அரசுகள் தவறுகளை கேள்விக்கேட்டால் பாஜக நபர்களைப் போல ஆர்.எஸ்.எஸ் பதிவுகளை பின்னூட்டமாக அதிமுக, பாமக நண்பர்கள் அப்படியே  நகலெடுத்து எல்லோருக்கும் வழங்கியது.

மற்றொரு பக்கம் கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் அப்பட்டமாக பிஜேபியின் ஊதுகுழலாக மாறி இருக்கிற சூழலில் சித்பவன பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு, பார்ப்பன மேலாதிக்கத்தை கட்டியமைக்க தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை, ஆர்எஸ்எஸ் யாருக்கு எதிராக தன்னுடைய பார்ப்பன மேலாதிக்கத்தை கட்டமைக்கிறது அவர்களே வைத்து அமலாக்கம் பணியை தமிழ்நாட்டிலும் துவங்கி இருப்பது புரிந்துகொள்ள முடிகிறது.

ஆகா மெல்ல மெல்ல தமிழகத்தில் தனது வலைப் பின்னலை மிக அழுத்தமாக ஆர்.எஸ்.எஸ் விரிப்பதற்கு முன்னால் இத்தகைய நூல்களை தமிழ்க மக்கள் மத்தியில் அதிகம் கொண்டுசெல்ல வேண்டும். காலத்தின் தேவையை உணர்ந்து இதை வெளியிட்ட எதிர் வெளியீட்டாருக்கும், மிக எளிய தமிழில் சிக்கலற்ற மொழிபெயர்ப்பை செய்த இ.பா.சிந்தனுக்கும் பேரன்பும் நன்றியும்!

நிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்)

– திரேந்திர கே. ஜா

தமிழில்:  இ.பா.சிந்தன்

எதிர் வெளியீடு

விலை: 220, பக்கம்: 200

– எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *