மொழிபெயர்ப்பு கவிதைகள்: ஹிந்தியில் நிலய் உபாத்யாய் | தமிழில் : வசந்ததீபன்(1) எனது சூரியன்
________________________

எனக்காக எந்த நதி உற்பத்தியாகும்
எந்த மரம் எனக்கு பழம் தரும்
மேற்கு மலை போல்
கனமானதாக இருக்கின்றன
எனது துக்கங்கள்.

ஊதியம்
மரத்தின் மேல் பறந்து போகிறது போல
வெயிலில்..
கம்பளியின் பஞ்சு
தேளின் கொடுக்கு போல
ஏறிக் கொண்டிருக்கிறது
சர்…சர்ரென்று..
இருட்டு
சோழி பிடித்து அலையடிக்கிறது நஞ்சு
என்னுடைய பூட்ஸ்களை
யார் அணிவார்கள் இங்கே
யாருடைய தலை இருக்கும்
எனது தலைப்பாகை
மேற்கு மலை போல்
கனமானதாக இருக்கின்றன
எனது துக்கங்கள்
இங்கே மூழ்கக் கூடாது __
இப்போது மூழ்கக் கூடாது
எனது சூரியன்.(2) எனக்கு வேண்டாம்
___________________________

எனக்கு கற்பக மரம் வேண்டாம்
வேண்டாம் காமதேனு
இந்த நிலத்தின் மேல்
வாழ்வதற்காக
எனக்கு இவ்வளவு தான்
அன்னம் வேண்டும்
எவ்வளவு எறும்பு தனது அலகில் எடுத்துச் செல்கிறது
அவ்வளவு தான் பூமியில் வாழ முடியும்
சுரைக்காயின் சிரிப்பும்
அவ்வளவு தான் பருத்தியின்
மூடி மறைக்கப்பட்ட அவமானம்
நினைவுகளிலிருந்து
கற்பனை உலகம் வரை
ஒரு சாலையும்
நெறிமுறை நிரம்பி
இருக்கணும் கல்வியும்
எந்தக் குபேரனுடைய கஜானாவும்
நமக்கு வேண்டாம்
நமக்கு வேண்டாம்
முதலைகளால் நிறைந்த
பாலின் தீய நதி.(3) போய்க் கொண்டிருக்கிறேன்
_________________________________________

நான் கிராமத்திலிருந்து
போய்க் கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் பொருட்களை
எடுத்துக் கொண்டு
போய்க் கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் பொருட்களை
விட்டு விட்டுப்
போய்க் கொண்டிருக்கிறேன்
நான் கிராமத்திலிருந்து
போய்க் கொண்டிருக்கிறேன்
ஏதோவொரு
(பிரசவத் தீட்டுள்ள)
நூல் ஆடையை அணிந்து
ஐந்து விரல் கணுக்களை
கக்கத்துள் அமுக்கி
நான் கிராமத்திலிருந்து
போய்க் கொண்டிருக்கிறேன்
எனது யுத்தம் தோல்வியில் முடிந்திருக்கிறது.
வெற்றியிடம் தஞ்சம் புக
போய்க்கொண்டிருக்கிறேன்
நான் கிராமத்திலிருந்து
போய்க் கொண்டிருக்கிறேன்
வயல் மவுனமாயிருக்கிறது ,
முற்றிய தானியங்கள்
சத்தமில்லாமல்
பூமியிலிருந்து வானம் வரை
மென்மையாக இருக்கிறது மெளனம்…
மெளனத்துக்குள்
உரக்க அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
எனது முன்னோர்கள்…
எனது பெற்றோர்கள்…
அவர்களைச் சந்தித்து இருக்கிறது
எனது தோல்வி
என்னுடைய கிராமத்திலிருந்து
போகும் செய்தி
என்னை ஞாபகம் வைத்திருக்கும்
எனது கிராமம்
நான் கிராமத்திலிருந்து
போய்க் கொண்டிருக்கிறேன்.(4) ஹுசைனின் தனித்த வீடு
____________________________________

ஏதோவொரு புழக்கமில்லாத கிணற்றில்
கொக்கியால் தொங்குகிறார்
ஹுசைன் சகோதரர்
தூரம்…
எங்கேயோ
நாய்களின் குரைப்பொலி வருகிறது
கொக்கி அசையத் தொடங்குகிறது
தூரம்…
எங்கேயோ
காலடிகளின் சத்தம் கேட்கிறது
கொக்கி அசையத் தொடங்குகிறது
தூரம்…
எங்கேயோ
கோவிலில் மணிகள் ஒலிக்கின்றன
கொக்கி அசையத் தொடங்குகிறது
எப்பொழுதும்
கொஞ்சம் வேகமாக வீசுகிறது காற்று
வெடிக்கின்றன பட்டாசுகள்
தொடங்குகிறது வீழ்ச்சி… வீழ்ச்சி…
கிணற்றில் விழுந்தார்
ஹுசைன் சகோதரர்
கிணற்றில் முகப்பின் மீது
சிவப்புத் திரை நெய்கிறது சிலந்தி
இங்கே மறைந்து வாழ்வது ஹுசைன் சகோதரர்
உலகம் அமர்ந்த பச்சோந்தி
தலை அசைக்கிறது
மற்றும் உள்ளே __
மிகவும் உள்ளே வரை
காயவடு தருகிறது மரணம்.

கிணற்றில் __
கொக்கியால் தொங்குகிறார்
ஹுசைன் சகோதரர்
குடும்பங்களில்
தனியாக வீடு இருக்கிறது
ஹுசைனுடைய வீடு.(5) கவிஞன் விற்றுவிட்டான் மும்பையின் லோக்கல்
___________________________________________

ஏய்..சகோதரனே கேள் ?
என்ன நடந்தது ?
ஒரு கவிஞன் விற்று விட்டான்
மும்பையின் லோக்கல்.

யாரோ ஒருவன் பெட்டிகளை விற்றுக் கொண்டிருந்தான்..
யாரோ ஒருவன் இஞ்ஜின்..
யாரோ ஒருவன் சிக்னல் விற்றுக் கொண்டிருந்தான்..
யாரோ ஒருவன் டிக்கெட்..காவலர் சட்டம்
மற்றும் டி டி ஃபைன்
விற்றுக் கொண்டிருந்தார்கள்
பெட்டி , இஞ்ஜின் , சிக்னல் , டிக்கெட் , காவலர் மற்றும் டி டி உட்பட
ஒரு கவிஞன் விற்று விட்டான்
மும்பையின் லோக்கல்.

கவி விற்று விட்டான் மற்றும்
வாங்கியும் விட்டான்
அங்கே போ நிற்க இதுவே சர்ச்சை
செய்திதாள்கள் யூகிக்க தொடங்கி இருந்தன
கோபமாக இருந்தான் அந்தக் கவிஞன்
டிவியில் சொல்வதை கேட்டு இருந்தது மக்கள்
மும்பையின் லோக்கல் முஷ்டியையும் இழந்த இளமையையும்
பெற்றுக் கொள்வீர்
தயாரிப்புகளை விற்பதற்காக இடம் இல்லை போல
அன்பு தப்பிப்பதற்காக இடம் இருக்கிறது
இவ்வளவு
நெரிசலான கூட்டத்துக்கு மத்தியில்
நசுக்கி
வளைந்து
தொங்கி
எங்கேயோ எங்கேயோ
எங்கேயோ இருக்கை
எப்படி எப்படிச் செல்கிறது

எப்படி எப்படி மலருகிறது அன்பு
தோற்றம் பார்
மும்பையின் லோக்கல் காதலின்
மிகவும் நவீனமான முறையாக இருக்கிறது
எங்கே பெறுவோம் இவ்வளவு
காதலின் பெரிய பஜார் ?
பார்த்தான் கவிஞனும்
விற்று விட்ட
மும்பையின் லோக்கல்
யோசித்தான்
இவ்வளவு அன்பு ஏன் வாழ்கிறது ?
யாரோ ஒருவரிடமும் அருகிலும்
வாங்கி விடு
மற்றும் வைத்து விடு தண்டவாளங்களின் மேல்
அது நிற்கும் போது
அதனுடைய பார்வை இப்போது மும்பையின் மேல் இருக்கிறது
ஆனால்
இது பற்றாக்குறை ஒப்பந்தம்.

ஹிந்தியில் : நிலய் உபாத்யாய்
தமிழில் : வசந்ததீபன்நிலய் உபாத்யாய்
_________________________

பிறப்பு : 28 ஜனவரி 1963

இடம் : துல்லஹபுர் கிராமம் , பக்ஸர், ஜன்பத் போஜ்புர் , பீஹார்.

சில முக்கிய படைப்புகள் :
(1) அங்கேலா கர் ஹூஸைன் கா (1994)
(2) கடெளதி (1999)

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)