அ.சீனிவாசன் எழுதிய ஒன்பது புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள்

***********************************************

1.

இல்லாமையிலிருந்து
இல்லாமைக்குச் செல்லும்
வாழ்க்கைப் பயணத்திற்கே
எல்லா உடைமைகளும்!

யாரோ சுமக்கப்போகும்
உன்னுடலை
தேவையின்றி
ஏன் சுமக்கிறாய்?

உன்னையும் துற —
உலகம் உனதாகும்!

***********************************************

2. ஞாயிறு மலர்

காத்திருப்புகளை
கவசமாக அணிந்துள்ளேன்.
நிதானமாய் நிராகரி.

***********************************************

3.

உனக்கான சொற்களை
எத்தனை நாட்களாக
பாதுகாத்தேன்!
தானும் தூங்குவதில்லை,
என்னையும் தூங்கவிடுவதில்லை.

எத்தனை முறை உனக்கான சொற்களோடு
வானத்தில் வட்டமிட்டேன்!
கடற்கரை போதாதாம், கடல் தரையைத் தொட்டு வந்தேன்!

இத்தனையும்
இரகசியமாக வேறு செய்ய வேண்டியுள்ளது!

உனக்கான சொற்கள் தான்,
ஆனால் உனக்கு பிடிக்குமா என்ற தயக்கம்!

நீ திருப்பிவிட்டாலும் பரவாயில்லை,
மீண்டும் என்னுள்ளம் தாங்கிப் பிடித்துக் கொள்ளும்.
உன் நிராகரிப்பை
உனக்கான சொற்கள் தாங்குமா?
நிராகரிப்பில் உன் மனதைக் கீறிவிடுமா?
அல்லது உன் நினைவுகளை எழுப்பி வருத்திவிடுமா?
என்றொரு மயக்கம்!

பிறந்தது முதல் என்னோடே இருந்து வரும்
என்னுடலைப் போலே,
பிரிந்தது முதல் என்னோடே இருந்து கொண்டிருக்கும்
உனக்கான அந்த மூன்று சொற்களும்
இருக்கும் வரை என்னோடே இருந்து போகட்டும்.

உனக்கான இடத்தில்
உனக்கான சொற்களையாவது நிரப்பிக் கொள்கிறேனே!
“ஐ மிஸ் யூ.”

***********************************************

4.
இல்லாமல் போவதற்காகத்தான்
இருந்து கொண்டிருக்கிறோம்.

***********************************************

5.
சற்று முன்னர்,
சாலையில் வேகத்தடையைப் பொருட்படுத்தாது
பறந்தவன்,
தானே கொஞ்சம் நேரத்திற்கு
வேகத்தடையானான்.

***********************************************

6.
நமக்கு மேல் யாருமில்லை என்ற
நமது தலைக்கனத்தை,
ஒரே கணத்தில் நடனமாடித் தகர்த்துவிடுகிறாள்
மேல் போர்ஷன் நர்த்தகி.

***********************************************

7.
கடலோ, கண்ணாடித் தொட்டியோ!
தண்ணீர் போதும்.
வாஸ்தா பார்க்கின்றன
வாஸ்து மீன்கள்!

***********************************************

8.
உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.
நம் காதலை நீ பார்த்துக்கொள்.

***********************************************

9. தற்கொலை!

தானாக
இறந்து போவதற்கு,
யாரோவாக கூட
இருந்து போகலாமே!

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *