கவிஞர் அ.சீனிவாசன் எழுதிய ஒன்பது புதிய தமிழ் கவிதைகள் | அ.சீனிவாசனின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள்

கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள்

***********************************************************

1.

என்னை விட்டு
எவ்வளவு தூரமானாலும்
சென்று கொள்
என்னை
அழைத்துக் கொண்டு!
எனக்கொன்றும்
வருத்தமில்லை.

***********************************************************

2.

ஒரு முறை கூட தோற்கவில்லை
எனில்
அது என்ன விளையாட்டு.

ஒரு முறை கூட அழவில்லை
எனில்
அது என்ன வாழ்க்கை.

ஒரு முறை கூட பிரியவில்லை
எனில்
அது என்ன உறவு

ஒரு முறை கூடஉனக்கு
எனை
பிடிக்காமலா போய்விடும்!!

***********************************************************

3.

விசச் செடியை
எல்லாம் சரியாக கண்டுபிடித்து
சாப்பிடாமல் விட்டுவிடுகிறது.
விசமருந்து
அடித்த செடியைத்தான்
கண்டுபிடிக்க முடிவதில்லை.
தின்ற ஆடே
பாவமென்றால்
அந்த செடி
அந்த செடியின் பூ
எவ்வளவு பாவம்.

***********************************************************

4. அப்பா

இருந்த இடம் தெரியாமல்
இருந்தார்.
அவர் இருந்த இடத்தையும்
சேர்த்து
தேடிக் கொண்டிருக்கிறேன்.

***********************************************************

5.

சகமனிதனால் சபிக்கப்படாதிருத்தலே
சாகாவரம்

***********************************************************

6.

சுவாசிக்கிறாயோ
இல்லையோ
காற்று
உன்னோடே
இருக்கிறது!

நேசிக்கிறாயோ
இல்லையோ
நான்
உன்னோடே
இருக்கிறேன்!

***********************************************************

7.

யாரும் பெற்றிராத வெற்றிக்கு முயற்சி செய்,
யாரும் அடைந்திராத தோல்வியை ஒன்றும் அடையப் போவதில்லை!!

***********************************************************

8.
இடையேயுள்ள
வரப்பின் அகலம்
அளந்து சொல்கின்றது
பக்கத்து
நிலத்துக்காரருடனான
உறவின் உயரத்தை!

***********************************************************

9.
கையில் மகளின்
திருமணப்பத்திரிக்கை
ஏந்திய எந்த ஒரு கரடுமுரடான தந்தையும் ஒரு
திடீர் ஞானி தான்!

எழுதியவர் : 

✍🏻கவிஞர் அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *