தி. இரா. அகத்தியனின் கவிதைகள்
***********************************************
1
பிஞ்சு இளம் கைகளுக்கு
என்ன தெரியும்
சிவக்க சிவக்க மருதாணியிடும்
மனிதர்களை பற்றி!
***********************************************
2
எங்கேயோ இருக்கும்
ஏதோவொரு மனிதனுக்கு
எங்கேயோ இருக்கும் கதை
பொருந்திதான் ஆகவேண்டி இருக்கிறது.
***********************************************
3
யாருமற்றவர்களின் சுவாசம்
எப்பொழுதும்
அதீத வலிகளை உள்ளடக்கிய
துர்நாற்றமாகவே வீசுகிறது..
***********************************************
4
கடவுளென்னும் முகக்கவசம்
அணிந்திருக்கும் மனிதர்களுக்குப்
பகுத்தறிவு என்றவாசனை
எப்படித்தான் புலப்படும்?
***********************************************
5
இல்லாத அவளின்
இருக்கின்ற நினைவும்
இல்லாமல் போனால்
இல்லாமல் போவேனே!.
***********************************************
6
அன்பைக் கொடுக்க
ஆயிரம்பேர் இருப்பினும்
ஆசையாய்க் கொடுக்க
அவள் ஒருவளே!
“அம்மா”.
***********************************************
7
இருவிரல் சுழற்சியில்
இறுகுகிறது பூக்காரியின்
ஒட்டுமொத்த வலி.
***********************************************
8
மனித அழகியல் கோட்பாட்டில்
தன்னை இனைத்துக்கொள்ளாமல்
தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும்
ஒரு மடத்தனம் “சாதி”.
***********************************************
9
சிந்தனையற்றுத்திரியும்
இந்த மனிதப் பாலூட்டிகளுக்கு மத்தியில்
யாரை நம்பிப் பெயர் வைப்பது
அவளுக்குப் “பெண்” என்று.
***********************************************
எழுதியவர் :

✍🏻 தி.இரா.அகத்தியன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.