சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்
******************************************
அதிகமாய்ப் போனாலும்
சிறந்த ஹைக்கூ
குழந்தையின் மூன்றடி நடை
******************************************
ஆசிரியர் கைகளில்
சிகரெட் துண்டுகள்
புகைக்குமா கரும்பலகை?
******************************************
சுறாக்களிடம் தப்பிய மீன்கள்
மாட்டிக்கொண்டன
மனிதனின் வலையில்
******************************************
குழந்தை சிரிக்கிறது
கலக்கமடைகிறாள்
குழந்தை இல்லாதவள்
******************************************
பாட்டியும்
டாக்டர் ஆகிவிடுகிறார்
பேரனுக்குக் காய்ச்சல்
******************************************
உழைப்பின் முகவரிகளோ?
பாதத்தில்
வெடிப்புகள்
******************************************
வானில் பறக்கும்
காகிதத்தாள்கள்
கற்றுத்தரும் காற்று
******************************************
அம்மாவின் கவனம் சிதற
காத்திருக்கின்றது
திருட்டு பூனை
******************************************
ஏராளமான அரிசி வகைகள்
ஏழையோ
ஒரு வேளை உணவை தேடி
******************************************
📚 எழுதியவர்:
– சா.சமீமா சிரின்
இராமநாதபுரம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

