நிறம் மாறிய காகம் | Niram Mariya Kagam - யூமா வாசுகி

எளிமையான சொற்கள், சின்ன சின்ன வாக்கியங்கள், வலிந்து திணிக்காத கருத்துகள் மற்றும் நீதி இப்படி அமைந்த நூல்கள் சிறார் வாசிப்பிற்கு மிகவும் உகந்ததாகும். அப்படியான ஒரு நூல் தான் நிறம் மாறிய காகம். இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு. யூமா வாசுகி அவர்கள் தொகுத்து மிக அருமையாக மொழிபெயர்த்துள்ளார்.

இந்தத் தொகுப்பில் 21 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றார் போன்ற சித்திரங்கள் இந்த நூலின் தனி சிறப்பு.

இந்த கதைகள் அனைத்தும் தினமணி சிறுவர்மணியில் வெளிவந்த பெரும் வரவேற்பு பெற்றவை.

இன்று இந்த நூலை நானும் என் மகனும் இணைந்து வாசித்து மகிழ்ந்தோம்..கதைகளை வாசித்து மகளுக்கு சொல்லிய போது அதீத மகிழ்வு..

உதாரணத்திற்கு லட்சிய ஓவியம் என்ற கதை யை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு கிராமத்தில் நிறைய ஓவியர்கள் வசித்து வந்தார்கள். ஜென்சி, மேரி இருவரும் ஓவியர்கள் மட்டுமல்லாது நெருங்கிய தோழிகள். அந்தப் பகுதியிலேயே ஜான் என்ற ஒரு முதிய ஓவியரும் வசித்து வந்தார். நான் என்றாவது என் லட்சு ஓவியத்தை வரையப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்..

தோழிகளின் ஜென்சிக்கு உடல்நிலை கடுமையாய் பாதிக்கப்பட்டபோது, அவளுக்கு தான் விரைவில் இறந்து விடுவோம் என்ற எண்ணம் தோன்றியது. அவள் படுத்து இருந்த கட்டிலுக்கு அருகே இருந்த எதிர்கட்டடத்தின் சுவரில் ஒரு செடி முளைவிட்டிருந்தது. அதில் சில இலைகள் துளித்து இருந்தன. அந்த இலைகள் இருக்கும் வரை தான் தான் உயிரோடு இருப்போம் என்ற எண்ணம் அவள் ஆழ்மனதிலே தோன்றி விட்டது. காற்றில் ஒவ்வொரு இலையாய் உதிர துவங்க, அவளுக்கு வாழும் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடைசி இலை அதுவும் உதிரும் சூழ்நிலையில். அப்போது யாருக்கும் தெரியாமல் இரவில் முதிய ஓவியர் ஜான் தத்ரூபமாக அந்த இடத்தில் ஒரு இலையை வரைந்தார். அடுத்த நாள் காலையில் நம்பிக்கை இல்லாமல் ஜென்சி அந்த கட்டிடத்தை பார்த்தபோது அந்த இலை

உதிராமல் இருந்தது. இனி கண்டிப்பா நாம் பிழைத்து விடுவோம் என்ற ஒரு ஆழ்ந்த நம்பிக்கை ஜென்சிக்கு தோன்றியது.

அன்பை கூறும் கதைகள் பண்பை கூறும் கதைகள் நட்பை கூறும் கதைகள் நகைச்சுவை கதைகள் இதில் ஏராளம் உண்டு..

வாசிக்க துவங்கும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு புத்தகம். நாமும் வாசித்தால் குழந்தையோடு குழந்தையாய் நம்ம மாற வைக்கும் ஒரு புத்தகம்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : நிறம் மாறிய காகம்

தொகுப்பு மொழிபெயர்ப்பும் : யூமா வாசுகி

சித்திரங்கள் : கி.சொக்கலிங்கம்

பக்கங்கள்: 176

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

விலை : ₹95.00

 

நூலறிமுகம் எழுதியவர் 

May be an image of 1 person

பூங்கொடி பாலமுருகன் 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *