அடிபடைவாதிகளின்
ஆக்டோபஸ் கரங்கள்
எங்கும் எதிலும் விரவி கிடக்கிறது
எதிர்க்காலம் நம்மை எங்கே
கொண்டு போகும் என்று
கிலியினால் மனம் துவண்டு போகிறது
நீதி தேவதையின் வெண்ணிற
வர்ணம் மெதுவாக மிக மெதுவாக
நிறமாறிக் கொண்டிருக்கிறதோ
என்று எண்ண வேண்டி இருக்கிறது
அவள் கண்களை மறைக்கும்
கறுப்புத் துனியும் கூட
கைகளில் உள்ள தாராசும் கூட
ஒரு பக்கமாய் சாய்மானத்துடன்
அதன் முள் மழுங்கியோ அல்லது
துருப்பிடித்தோ தோன்றுகிறதோ
என்று சந்தேகம்
கொள்கை முடிவுகளில்
முரண்பட்டு மன்றம் ஏறினால்
முட்டுக் கொடுக்கும் மன்றத்தினர்
நாளை ஆளுநரின் கனவுகளில்
நியாய தராசு ஒன்றுதான்
இங்கு நிமிர்ந்து நிற்கிறது என்ற
நெஞ்சம் நிறைந்த காலமொன்று இருந்தது
அது ஓர் கனாக் காலமென்று
இன்றுநெஞ்சம் கலங்கி நிற்கிறது