வியாபித்திருந்த
பெருந்தலைகளினூடே
விழி தேடும் கடலில்
கரைகிறது தினம்!
கிழிந்தும் கிழியாத
அலங்கோலத்தோடு
செழிப்புற்ற
ஏனைய பலரும்
இடைநிற்கும்
துவேஷ தூரங்களில்!
வகுக்கப்பட்டோ
வகைக்குட்பட்டோ
வரையறுக்கப்பட்ட
கையறு நிலை
விடையில்லாப் புதிர்!
அவ்வாறான
சிந்தனையில்
தீய்ந்துபோன
சொற்ப நாட்களும்
ஊடுருவல் கணங்களில்!
இவைகளின்
பின்னணி ஏதும்
ஆராய அவகாசமில்லை!
நிகர வித்தியாசம்
ஏராளமெனில்
மேலோ கீழோ
உழலுதலில்
கடந்து போகிறது
கவலையோடு
மற்றொரு கணம்..
சப்தங்களை மிஞ்சும்
நிசப்தமாய்!
…….
எழுதியர்
எஸ். மகேஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.