இந்திய மரபணு உயிரியலின் சர்வதேச அடையாளம் நிஷா கண்ணன் | Dr. Nisha N Kannan is an international icon of Indian genetic biology - https://bookday.in/

நிஷா கண்ணன்: இந்திய மரபணு உயிரியலின் சர்வதேச அடையாளம்

இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

12. இந்திய மரபணு உயிரியலின் சர்வதேச அடையாளம் நிஷா கண்ணன் (Dr. Nisha N Kannan)

இந்திய மரபணு உயிரியலாளர் நிஷா கண்ணன் (Dr. Nisha N Kannan) திருவனந்தபுரத்திலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் செயன்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தில் முதன்மை அறிவியல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.. மனித உடல் எப்படி ஒரு கடிகாரமாக செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்கின்ற ஒரு வகை கடிகார ஆய்வகம் அவருடையது. Chronobiology என்கிற புதிய துறையின உலகலாவிய வல்லுனராக நிஷா கண்ணன் அறியப்பட்டிருக்கிறார்.

மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடைய உடலி ஒரு விசித்திரமான கால கடிகாரம் செயல்படுகிறது மனிதன் மட்டுமல்ல உலகத்தின் ஒற்றை மரபணு உயிரிகளான பாக்டீரியாக்கள் முதல் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஒரு கடிகாரம் செயல்படுகிறது என்பதுதான் உண்மை .. உயிர்களின் உடலில் உள்ள இந்த கடிகாரம் ஃப் எப்போது பாலியல் உணர்வு கொள்ள வேண்டும் எப்போது அடுத்த சந்ததியை உருவாக்க வேண்டும் எப்போது மீண்டு உறக்கத்திற்கு செல்ல வேண்டும் போன்ற அலாதியான விஷயங்களை உயிரிகளை தாமாகவே செய்ய வைக்கிறது.

இந்திய மரபணு உயிரியலின் சர்வதேச அடையாளம் நிஷா கண்ணன் | Dr. Nisha N Kannan is an international icon of Indian genetic biology - https://bookday.in/
Chronobiology

இந்த உயிரிகளுக்குள் இருக்கும் கால கடிகாரம் பறவைகளை இதோ காலை புலர்ந்து விட்டது என்று குரலெழுப்ப வைத்து எப்போது வெளியில் கிளம்ப வேண்டும் எப்போது திரும்பி வர வேண்டும் கூட்டுக்கு என்று விளங்க வைக்கிறது இதே கடிகாரம் தான் சில பறவைகளை பல 1000 மைல்களுக்கு அப்பால் பறந்து சென்று முட்டையிட்டு அடுத்த சந்ததியை உருவாக்கி திரும்ப வரவைக்கிறது.. எத்தனையோ விலங்குகளை கடுமையான குளிரில் இருந்து தப்பவும் சில சமயம் நில அதிர்வுகளை முன் உணரவும் கூட இந்த உயிரி கடிகாரம் உதவுகிறது.

மனிதனின் விஷயத்தில் கடைசியாக நீங்கள் விமானத்தில் வெளிநாடுகளுக்கு எப்போது பயணம் செய்தீர்கள் என்பதை யோசித்தால் உங்கள் உடலின் கால கடிகாரம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.. நம்முடைய நாட்டில் இருந்து இரவும் பகலும் மாறுபடுகின்ற ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு நீங்கள் சென்றதாக வைத்துக் கொள்வோம் நள்ளிரவு என்பது அந்த நாட்டில் இருக்கும் பொழுது உங்களுக்கு கடுமையாக பசிக்கிறது அங்கு சென்று இறங்கிய ஓரிரு நாட்களுக்கு உங்கள் உடல் மிகுந்த மாறுபாடாக நடந்து கொள்கிறது
ஏனெனில் இந்தியாவில் பகல் என்பது அந்த நாட்டில் இரவாக இருக்கிறது ஆனால் இரண்டே நாட்களில் உங்கள் உடலின் கால கடிகாரம் மிக அழகாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு அந்த நாட்டின் கால சூழலுக்கு ஏற்றார்போல் உங்களுடைய உடலை இயக்க வெகுவிரைவில் தன்னை சரி செய்து கொள்கிறது.. ஆனால் இத்தகைய அதிசயமிக்க கடிகாரத்தை நம்முடலில் இயக்கிக்கொண்டிருக்கும் உறுப்பு எது.. இது தான் நிஷா கண்ணன் (Dr. Nisha N Kannan) எனும் அந்த மாமனிதரின் ஆய்வாகும்.

இந்திய மரபணு உயிரியலின் சர்வதேச அடையாளம் நிஷா கண்ணன் | Dr. Nisha N Kannan is an international icon of Indian genetic biology - https://bookday.in/
நிஷா கண்ணன் (Dr. Nisha N Kannan)

உயிர்களுக்கு உள்ளே இயங்கும் இந்த கால கடிகாரம் குறித்த ஆய்வு தாவரங்களில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.. பகலில் சூரிய ஒளிக்கு ஏற்றார்போல பச்சன் தாரிக் கின்ற தன்னுடைய உறுப்புகளை தீவிரமாக இயங்க வைக்க ஒரு கால கடிகாரம் தாவரத்திற்கு தேவைப்படுகிறது இரவு நேரத்தில் அதனுடைய முழு சுழற்சியாக அவர்கள் கரியமில வாயுவை வெளியிடு வதற்கு மற்றொரு கால கடிகாரம் வேலை செய்ய வேண்டும்..

நிஷா கண்ணன் குழுவினர் TIM PORTIEN என்னும் அமைப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள்.. இந்த வகைப் புரதங்கள்..PER எனும் வகை புரதங்களுடன் இணைந்து 24 மணிநேர கால கடிகார முறையை உடலுக்கு வழங்குகின்றன.. இரண்டு RNA இணைந்து போர் வீரர்களை போல செயல்பட்டு காலத்தை மிக கட்சிதமாக உள்வாங்கிக்கொண்டு PROTIEN ள் செய்யும் முறைப்படி மரபணுக்களை தூண்டுதல் செய்கின்றன.. இந்த மரபணுக்களின் தூண்டல் நியூரான்களின் வழியாக மூளையில் தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றன.. என்பது நிஷா கண்ணனின் கண்டுபிடிப்பாகும்.

பழங்களின் வண்டுகளை FRUIT FLIES அடிப்படையாக கொண்ட.. தன்னுடைய ஆய்வுகளை அவர் ஜப்பானின் 0KAYAMA பல்கலைக்கழகத்தில் … தன்னுடைய குரோம்பயாலஜி முனைவர் பட்ட ஆய்வின்போது தொடங்கி.. பிறகு படிப்படியாக இந்தியாவில் திருவனந்தபுரத்தில் உள்ள தன்னுடைய ஆய்வகத்திலும் தொடர்ந்து வருகிறார்.. இந்த விஷயத்தில் மைக்ரோ ஆர் என் ஏ க்களின் வேலை மிக மிக முக்கியமானதாகும் கால கடிகாரம் கண்டுபிடிக்கின்ற தூண்டுதல்களை மூளைக்கு எடுத்துச் செல்லுகின்ற தகவல் நியூரான்களை தாவல் கொடுத்தவுடன் இந்த RNA க்கள் உடனடியாக அழித்து விடுகின்றன.. மனிதனின் நடத்தையில் இந்த கால கடிகாரம் மிக சரியாக இயங்குவது என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது.

இந்திய மரபணு உயிரியலின் சர்வதேச அடையாளம் நிஷா கண்ணன் | Dr. Nisha N Kannan is an international icon of Indian genetic biology - https://bookday.in/

இந்த கால கடிகாரம் சரியாக இயங்குவதற்கு மனிதனின் உறக்கம் மிக மிக அவசியம் என்பது நிஷா கண்ணன் (Dr. Nisha N Kannan) குழுவினரின் கண்டுபிடிப்பு சராசரியாக வளர்ந்த மனிதர்கள் 8 மணி நேரம் ஒரு நாளைக்கு உறக்கத்தை கடைபிடிக்கிறார்கள் வயதானவர்களை உறக்கமின்மை என்கிற மிகப்பெரிய சிக்கல் தாக்குகிறது.. அதேசமயத்தில் பிறந்தது முதல் குறிப்பிட்ட ஆண்டு வரை குழந்தைகள் மிகக் கூடுதலாக பல மணி நேரங்கள் உறங்குகின்றன.. குழந்தைகளின் நீண்டகால உறக்கத்திற்கு முக்கிய காரணம் அப்போதுதான் நியூரான்கள் இடையே இணைப்புகள் மிக துல்லியமாக முதல் முறையாக ஏற்படுத்தப்படுகின்றன.

மனிதனின் உறக்க நிலையில் மூளையிலுள்ள நியூரான்களின் இணைப்புகள் தங்களை மறு பிரவேசம் செய்து கொள்கின்றன கால கடிகாரத்தின் மிக முக்கியமான பணி மனிதனை உறக்கத்தில் தள்ளுவது ஆகும்.. உறக்கத்தை தள்ளிவைப்பது அல்லது இரவு நேரத்தில் பணி செய்து பகலில் உறங்குவது இவை அனைத்தையுமே உடலிலுள்ள மைக்ரோ ஆரண்யக்கள் மிக சரியாக இயக்குகின்றன.. நிஷா கண்ணனின் ஆராய்ச்சி நிஷா கண்ணனின் ஆராய்ச்சி உறக்கமின்மை ஏன் ஏற்படுகிறது என்பதை நோக்கி தன்னுடைய ஆய்வுகளை எடுத்துச் செல்லும் என்பது அவருடைய இலக்கு.

நிஷா கண்ணன் (Dr. Nisha N Kannan) கேரளத்தின் கண்ணூர் ல் பிறந்தவர் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் உயிரியலை எடுத்துப் படித்தார்.. பிறகு அதே கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் ஆக உயிரி தொழில் நுட்பத்தை எடுத்துக் கொண்டார் பெங்களூரில் உள்ள ஜவகர்லால் நேரு அட்வான்ஸ்டு சயின்ஸ் ரிசர்ச் இன்ஸ்ட்டிட்யூட்ல் Chronobiology துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நிஷா கண்ணன் உயிரிகளின் கால கடிகாரம் குறித்த விஞ்ஞானி மட்டுமல்ல அவர் ஒரு அற்புதமான ஓவியரும் ஆவார்.. மனிதன் காலையில் கண் விழிப்பதில் இருந்து உணவு உண்டு அது செரிமானமாவது உட்பட நாள் முழுவதும் உழைக்கவும் இரவு நேரத்தில் உறங்கவும் மனிதனுக்குள்ளே செயல்படுகின்ற உயிரி கடிகாரத்தை அதன் நோக்கத்தை ரகசியத்தை உலகிற்கு அம்பலப்படுத்தும் நிஷா கண்ணன் போன்றவர்களின் அர்ப்பணிப்பு நாட்டிற்கு பெருமை.

கட்டுரையாளர் :
இந்தியாவின் ஒப்பற்ற புவி இயற்பியலாளர் அபிஜித் முகர்ஜி | India's peerless Geophysicist Abhijit Mukherjee (earth scientist) -https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்தியாவின் முதல்  அறிவியல் ரத்னா கோவிந்தராஜன் பத்மநாபன் (Biochemist Govindarajan Padmanabhan)

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. Sree Rama Krishnan CBE

    All your writings always giving new information not only in science but also our scientists.
    Many many thanks

  2. Ravi G

    காலக் கடிகாரத்தை பற்றிய ஆய்வு தொடரட்டும். பல வியத்தகு அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளியாகி வருவது மனித இனத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *