ஆண்கள்… – நிஷா வெங்கட்

ஆண்கள்… – நிஷா வெங்கட்



மகளுக்குக் கருவறையில்லா தாய்…
மகனுக்கு நேர்நின்ற எதிரி…
மறைமுகத் தோழன்…
மனைவிக்கு எல்லைக் காவலன்…
பெற்றவருக்கோ பிள்ளையாகிய வரம்….

வலித்தாலும் அழத் தயங்குபவர்…
அன்பென்றாலும் அடக்கியே
ஆள்பவர்…
குடும்பத்திற்குச் சுமைதாங்கி…
தன் சுகத்தினை மறந்த
தியாகி…
மொத்தத்தில் ஆண்களின் மொழி
பேரழகானது….
கூடவே நிறைய வலிகளையும்
தாங்கவல்லது…

– நிஷா வெங்கட்…🖤


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *