நிஷா வெங்கட் கவிதை: சன்னலோர பயணம்……சன்னலோர பயணம்……

மரங்களெல்லாம் பின்னால்
நடக்க…
“மரங்கள் ஏம்மா பின்னாடிபோகுது” என்று அம்மாவிடம் கேட்டக்
கேள்வியும் புன்னகையாய்
சிறகு விரிக்க…
நடந்து முடிந்த அனைத்தும்
மீண்டும் நினைவுகளாய் மிதக்க….
உலகம் மறந்து மனதும்
புதிதாய் பிறக்க….
கொஞ்சம் வெறுமையும்
எட்டிப்பார்க்க….
சில கூரிய சொற்களும்
மனதை கிழிக்க….
சிலர் உதட்டுச்சிரிப்பும் உண்மைதானோ? என்று குழப்பமும் முளைக்க….
அவ்வளவு எளிதல்லா
இந்த சன்னலோர பயணத்தையும்
கடக்க…..

– நிஷா வெங்கட்…🖤