நிஷா வெங்கட் கவிதைகள் 🖤அடைமழை பெய்தாலென்ன
இலைமறைவிலும் இன்பம்
இருக்கு….

குடைமறைவில்
நனையாதிருத்தலைவிட
இலைமறைவில் இன்ப மழையில்
நனைவதே பேரானந்தம்…..

இல்லாமையென்றோ இயலாமையென்றோ
ஊர் கூறாலாம்…..
எங்கள் மகிழ்வைக்கண்டு
உங்களுக்கு பொறாமையென்றே
நாங்கள் கூறுவோம்….

Image

அப்பாவின் அழுகை……

திருமணத்தின் போது
என் அழுகையை கண்டு
மௌனமாக புன்னகைத்த
அப்பா……
இதுவரை யாரிடமும் சொன்னதேயில்லை
முந்தைய நாள் இரவு தான்
தேம்பித் தேம்பி
அழுததை….