கவிதை: விவசாயம்…. – நிஷா வெங்கட்….விவசாயம்….
————————–
நிலத்தடி நீரையும் எடுத்தாச்சு….
மண்வளத்தையும் சிதைச்சாச்சு…..
நீர்நிலை முழுக்க குப்பையால்
நிரப்பியாச்சு….
மரத்தவெட்டி சன்னல் கதவுனு கோத்தாச்சு….
விதைச்சவன் விலையை
தீர்மானிக்க வாய்ப்பில்லைன்னு
அவங்க வயிற்றுலையும் அடிச்சாச்சு…..
எல்லாத்தையும் எப்படியோ அழிச்சாச்சு…..
கடைசியா எஞ்சியிருக்குற
அந்த விவசாயத்தையும்
அழிக்காமயிருந்தா சரிதான்….
ஏன்னா வாக்கரிசிக்குன்னு நாளு நெல்லுமணியாவது தேவைசாமீ….
பீட்சா பர்கர்லாம் செல்லாதுசாமீ….
                       -நிஷா வெங்கட்….