நிஷா வெங்கட்…🖤 கவிதைசிங்கத்தை பார்த்தால்
சிங்கமாகதான் தெரிகிறது….

மயிலை பார்த்தால் அப்படியே அச்சுப்பிசகாமல் மயில் போலவேயிருக்கின்றது…..

நான் நட்ட ரோஜா செடிக்கூட
அந்த கடைக்காரர் சொன்ன
மஞ்சள் நிறத்தில்தான்
பூ பூக்கிறது…..

இன்னும் இன்னும் நெருக்கமாக போனால் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது…..

பக்கத்து வீட்டு பூனை கூட
கருவாட்டுக் குழம்பிற்கு
எங்கள் வீட்டை சுற்றி வருகிறது…
பக்கத்து வீட்டு மாமி சைவம்….
பாவம் பூனையென்ன செய்யும்….

எல்லாம் எல்லாமாகவே
இயல்பாய் இருக்கிறது…

ஆனால் மனிதன்?……

இந்த கேள்வியை என்னிடம் கேட்டால் எனக்கும் விடை தெரியாது….

– நிஷா வெங்கட்…🖤

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)