நிவேதிதா லூயிஸ் எழுதிய "விசில்" தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல் புத்தகம் | Nivedita Louis's Visil (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

நிவேதிதா லூயிஸ் எழுதிய “விசில்” தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல் – நூல் அறிமுகம்

தோழர் நிவேதிதாவின் பேச்சும் எழுத்தும் பொதுவாகவே
விறுவிறுப்பாக இருக்கும்.
விசிலிலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை…

நான் இந்த நாவலில் கூறப்பட்டிருக்கிற கதையம்சங்களைப் பற்றி பேசப் போவதில்லை..
ஆனால் எந்த ஒரு படைப்பும் நம்மீது சில தாக்கங்களை உருவாக்கும் அல்லவா..
அப்படி இந்த விசில் நாவலைப் படிக்கும் போதும், படித்து முடித்த பிறகும் என் சிந்தனையில் ஓடிய, ஓடிக் கொண்டிருக்கிற ஒரு சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

இதில் என்னைக் கவர்ந்த முதல் அம்சம்
அத்தியாயங்களின் பெயர்கள் எல்லாம் எண்களால் அமைக்கப்பட்டிருப்பது. இது வித்தியாசமாகவும்
ஆர்வத்தைத் தூண்டும்படியாகவும் இருக்கிறது.
முகவுரையில் மேனாள் நீதிபதி கே. சந்துரு அவர்களும் நிவேதிதா இப்புத்தகத்துக்கு ‘என் விளையாட்டு’ அல்லது ‘எண் விளையாட்டு’ என்று பெயர் வைத்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பல எண்களுக்கு குறியீடுகள் இருப்பதையும் மகிழ்ச்சிக்குரிய எண்கள் சோகத்தை விளைவிக்கும் அல்லது குறிக்கும் எண்கள் என்றெல்லாம் எண்களைப் பற்றி பல சுவையான அரிய தகவல்கள் இப்புத்தகத்தில் காணக் கிடைக்கின்றன.

ரயில் என்பது பார்க்கப் பார்க்க, அதுவும் ஓடும் போது மனதிற்கு ஒரு குதூகலத்தைக் கொடுக்கும்.
ஆனால், ஒரு ரயில்வே ஊழியரின் அன்றாட அலுவலக வாழ்க்கை குதூகலமாக அமைவதில்லை என்பதை விசில் இயல்பாக விவரித்துப் போகிறது.

இப்புத்தகத்தை யாரெல்லாம் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று கேட்டால் ஆண் பெண் பேதமின்றி தொழிலாளி வர்க்கத்தினர்
அனைவரும் படிக்க வேண்டும்.
சவால்களை எப்படி எதிர் கொள்வது என்பதை கற்றுக் கொள்ளலாம்.

நிர்வாகத்திலிருப்பவர்கள் படிக்க வேண்டும்.
தன் கீழ் வேலை பார்ப்பவர்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்று கற்றுக் கொள்ள…

மோகன் சார் மற்றும் பாண்டியன் சார் இருவரும் சிறு வயது பெண் என்ற பரிவோடும் அன்போடும் பல இக்கட்டான சமயங்களில்
ஆதரவாக நின்ற தருணங்கள் இமையோரம் ஒரேயொரு கண்ணீர் துளியையாவது வரவழைத்தன.

தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் படிக்க வேண்டும்.
சங்கத்திற்காக தங்களை ஒப்புக் கொடுப்பவர்களுக்கும் தங்களுக்காக சங்கத்தை அடகு வைப்பவர்களுக்கும் உள்ள கொள்கை ரீதியான வேறுபாடுகளை உறுப்பினர்களுக்குப் புரிய வைக்க, மேலும் மேலும் உழைத்திட உறுதி காட்ட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள…

அத்தியாயம் 9..தலைப்பு 35%
அதாவது ஒரு தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற 35% உறுப்பினர் சேர்க்கை காட்ட வேண்டும் என்பதன் குறியீடு..
இவர்
டி ஆர் ஈ யூ சங்கத்தில் தானாகவே போய் சேர்ந்தது, அதில் தீவிரமாக பணியாற்றியது,
அங்கீகாரம் இல்லாத சங்கத்தால் எதையும் அத்தனை எளிதாக சாதித்து விட முடியாது என்று தொழிற்சங்கப் பயணத்தை முடித்துக் கொண்டு ஒதுங்கிக் கொண்டது என்று நிவேதிதா தன் தொழிற்சங்க அனுபவங்களை விவரித்திருப்பார் .
இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்த போது ‘அடடா என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா’ என்று தோன்றியது.

விசிலை படித்து முடித்ததிலிருந்து,
மத்திய தணிக்கைத் துறையில் 37 ஆண்டுகளாக பணி புரிந்து கொண்டிருக்கும் எனக்கு என்னுடைய அலுவலக மற்றும்
தொழிற்சங்க அனுபவங்கள் யாவும் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
என் அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உருவாகிறது.

நிவேதிதாவுக்கு Railway Recruitment Board ஐ அறிமுகப்படுத்திய மாதிரி ஏன் யாரும் Staff Selection Commission SSC தேர்வுகளை எழுத பரிந்துரைக்கவில்லை என்று தோன்றுகிறது.
அவர் மட்டும் SSC தேர்வு எழுதியிருந்தாரானால், அவருடைய கணித அறிவுக்கு அவர் கண்டிப்பாக top ranking வாங்கியிருந்திருப்பார்.
Top rankers , AG அலுவலத்தில் பணி அமர்த்தப் படுவது போல் அவரும் எங்கள் அலுவலத்தில் ஏன் ஒருவேளை ரயில்வே தணிக்கை அலுவலத்தில் கூட பணி அமர்த்தப் பட்டிருக்கலாம்..
அவர் பல கட்ட தேர்வுகள் எழுதி விரைவில் அதிகாரி ஆகி தணிக்கைப் பணியில் ஈடுபட்டு பல பல ஊழல்களை வெளிக் கொணர்ந்திருக்கலாம்.
ஒரு நம்பிக்கையுள்ள அங்கீகாரமுள்ள எங்கள் தொழிற்சங்கத்தில் தலைமைப் பொறுப்பெற்று வழி நடத்தியிருக்கலாம்.
இது என் எண்ணவோட்டம் .

விசிலின் ஆரம்ப அத்தியாயங்களைப் படிக்கும் போது
‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற வரி மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது

அவர் அலுவலகத்தில் நடத்திய போராட்டங்களைப் படிக்கும் போது
‘எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்’
ஓடிக் கொண்டிருந்தது.

பாலியல் தொந்தரவு,
character assassination என்ற தாக்குதல்கள்,
அந்த சமயங்களில் துணை நின்ற தோழர்கள், புரிதல் கொண்ட தோழர்களின் இணையர்கள் என்று நல்ல மனிதர்கள்
நிறையவே சுற்றி இருந்த போதும்,
அவள் ஒரு பெண், அறிவானவளாக கேள்வி கேட்பவளாக இருந்தாள்
அதனாலேயே பணி நிமித்தம் அலைக்கழிக்கப் பட்டாள்.
வெகுவாக அலைக்கழிக்கப்
பட்டதாலேயே
சோர்வு மிகுதியால்
தன்னை ஒருவன் தவறான கோணத்தில் புகைப்படம் எடுக்கும் போது அதை எதிர்க்க முடியாமல் தூக்கத்தில் இருக்கிறாள்.
இந்நிலை வெறுக்கிறாள்.
இன்னும் இரண்டு வருடங்கள் பணி புரிந்தால் ஓய்வூதியப்பலன் கிடைக்கும் என்ற நிலையில் வேலையை ராஜினாமா செய்கிறாள்.
இத்தோடு இந்நாவல் முடிகிறது .

தோழர் நிவேதிதா தன் வாழ்க்கை அனுபவத்தை எழுதிய போதும், நான் என் என்று குறிப்பிடாமல் இவள் என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

இப்புத்தகம் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப் பட்டபோது பேசிய தோழர் தமிழ்செல்வன் ஆதங்கம் தாங்காமல் அந்த 18 வருடங்கள் வீணாய்ப் போன வருடங்களென்றார்.

ஆனால் அந்த 18 வருடங்கள் நமக்கு ஒரு படைப்பாளியை, பதிப்பகத்தாரை, பெண்ணெழுத்தாளர்களை பெருமளவில் வளர்த்தெடுக்கும் ஒரு தலைவராக உருவாக்கித் தந்திருக்கிறது.

இந்த புத்தகத்தை எந்த விழாவிற்கும் பரிசாகத் தரலாம்.
இப்புத்தகம் பெருமளவில் மக்களிடையே சென்று சேர வேண்டும்.

தோழர் நிவேதிதா
ஹெர் ஸ்டோரீஸ்
புக்டே அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “விசில்” தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல்
ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்
வெளியீடு:
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ₹.332
அறிமுகம் எழுதியவர்:  
ரமா லட்சுமி நரசிம்மன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

 

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *