பல அவதாரங்களை
உருவங்களாக
இல்லையென்றாலும்….
உணர்வுகளால்
எடுத்துப் பார்க்கக் கூடிய
ஆற்றல் மனிதனுடையது!
எதுவாகவும், யாராகவும்
பாவித்துக்கொள்ளும்
அறிவு மனிதனுடையது!
ஒரு விலங்கு
ஏன் மனிதப்புழக்கமுடைய
இடம் நோக்கி வருகிறது?
ஒரு பூனை…
ஏன் தெருவில்
குறுக்காக ஓடுகிறது?
ஏன் ஒரு பல்லி
நம் காதில் விழும் அளவிலான
ஓசையை எழுப்புகிறது?
ஒரு கைம்பெண்
எதற்காக சாலையில்
நடந்து வருகிறாள்?
ஓர் ஆள்
ஏன் கத்தி கடப்பாறை சுமந்து
வழியே வருகிறான்?
இப்படியான
சமாச்சாரங்கள்
என்றும் ஏராளமாக
நடந்து கொண்டுதானிருக்கும்!
இப்படியானச்
சமாச்சாரங்கள்
உலக இயக்கத்தின்
அடையாளங்கள்!
இவை
நடக்கக் கூடாதென
மனிதர்கள் நினைப்பதும்
உண்டே!
அத்தனை உயிர்களிலும்
தம்மைப் பொருத்திப் பார்த்தால்
தத்துவம் விளங்கும்.
பல்லியாக
தன்னை பாவித்தால்தான்
பல்லி எதற்காக
கத்துகிறதென்ற
ஞானம் பிறக்கும்!
அத்தனை சப்தத்திலும் மேலானது
நம் அறிவு சப்தம்
ஆறறிவுக்கே
சவாலாய் இன்று
அறிவு சகாப்தம்.
கவிஞர் பாங்கைத் தமிழன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்பதி