நோம் சாம்ஸ்கி பற்றி முதல் அறிமுகம் முதுகலை படிப்பில் “Automata paper”ல் தான்.அப்போதெல்லாம் அவரை ஒரு மொழியிலாளாராக மட்டுமே. படிப்பு முடித்தவுடன் அதுவும் காணாமல் போயிற்று. பின் அவரது அறிமுகமெல்லாம் சமுக செயற்ப்பாட்டாளராக நிறைய விவாதங்களை பார்க்கும் போது இவரை பற்றி படிக்க வேண்டும் என்று தோன்றியது.
நோம் சாம்ஸ்கி பன்முக அறிமுகம்” என்ற இப்புத்தகம் கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைகழகத்தின் மொழியில் துறை பேரா. கி. அரங்கன் அவர்களால் எழுதப்பட்ட அற்புதமான புத்தகம்.
முதலில் தமிழில் இப்படியான படைப்பை தந்த போரா. கி. அரங்கன் அவர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்..விலங்குகளிடமிருந்த மனிதன் பரிணாமடைந்தில் மொழி பிறந்தது. விலங்குகள் வாய்வழியாக ஓலியெழுப்பி செய்தி பரிமாற்றம் செய்தது. ஆனால் அதிலிருந்த வேறுபட்டு மனிதன் தனி யுக்தியை கையாண்டு அதன் மூலம் மொழியை பிரிசிவித்தான். பின் மொழி சமூகம்,பண்பாட்டின் அடையாளமாக பார்க்கப்பட்டது. பரந்த விரிந்த நாகரிக உலகின் அடையாளமாக மொழி பார்க்கப்படுகிறது. மொழியை புரிந்துக்கொள்ள உலகளாவிய முறையில் முயற்சிகள் நடைப்பெற்று வருகிறது. இலக்கண ஆசிரியர் தனது அனுபவத்தில் பெற்ற மொழி அறிவை கொண்டு இலக்கணம் எழுதும் முறை கடந்து இன்று கணிப்பொறியில் தரவுக்களஞ்சியங்களை உருவாக்கி அம்மொழியின் பரிமாணத்த கொண்டு அதற்கு இலக்கணம் எழுதி வருகின்றனர்.
இதற்கு ஈடுக்கொடுக்கும் விதத்தில் மொழியின் இலக்கணத்தில் சில மாற்றங்களும், விரிவுப்படுத்தலும் மேற்க்கொள்ளப்படுகிறது. உலகில் நிகழும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம் மொழியைப் பற்றிய புரிதலை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அவற்றைக் கணிப்பொறிக்களுக்கு கற்றுக்கொடுத்து மனித கணிணியுடன் உறவாடும், உரையாட சாத்தியப்படும் முடியும். அப்படியான மொழியில் ஆய்விற்கு வித்திட்ட அமெரிக்க நாட்டு மொழியிலாளாராகிய நோம் சாம்ஸ்கியின் ஆய்வு மொழியில் துறையில் முன்னோடி. இவரது இலக்கண வடிவமைப்புகளை உலகுக்குத்தந்து அவற்றின் மூலம் உலக மொழியின் பொதுமைப் பண்புகளை வெளிக்கொணரும் முயற்சியே. இதனை கடந்து தலைச்சிறந்த அரசியில் வல்லுநர் ,சமுதாய விமர்சகரும் ஆவார். மொழியில் புரட்சியை ஏற்படுத்திய அவரின் பங்களிப்பு மகத்தானது. அத்தோடு நின்று விடாமல் சமுகத்தை வளர்த்தெடுக்கும் கடமை தனக்கு இருக்கிறது என்று மேடைத்தோரும் இவரின் முழக்கம் அவர்மேல் ஓருவித மரியாதை உருவாக்கியது.
நோம் சாம்ஸ்கி தம்முடைய சிறு வயதில் நடந்த நிகழ்ச்சி ஓன்று தம்மீது ஓரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார். முரட்டு தன்மை கொண்ட பையன் ஒருவன் மெலிந்த பலமற்ற இன்னொருவனைபத் தாக்கி அடித்ததாகவும் அப்போது அவனோடு சண்டை போட்டு முடியாமல் தாம் இருக்க வேண்டிய சுழல் தான் தன் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியது என்கிறார். அதுவே தான் வாழ்நாள் முழுதும் மனதைஉறுத்திக்கொண்டிருப்பதாகவு ம் கூறுகிறார். அந்நிகழ்வு அவரை நியாயத்தின் பக்கம் நின்று போராட செய்தது. அதில் குறிப்பாக அவர் வியட்நாம் போர் பற்றி பேசியிருப்பது அவரின் கருத்துகளை எப்படி பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு. வியட்நாம் போர் பற்றி அமெரிக்கர்கள் இரு வேறு கோணங்களில் அனுகுகின்றனார். உலக நாடுகளில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற அமெரிக்கா முன்னணியில் நிற்கின்ற வேண்டும் என்றும் அதன் பகுதியாக வியட்நாமில் ஜனநாயகத்தை நிறுத்த தொடர்ந்து போரை நடத்த வேண்டும் என்றும் கூறுபவர்கள் ஓரு பகுதியினர்.
மற்றொரு பகுதியினர் அந்தப் போரால் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க இளைஞர்கள் பலரைப் பலிக்கொடுத்து விட்டதாகவும் கூறி போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் இன்னொரு பிரிவினர். குறிப்பாக இரண்டாம் பிரிவினர் போரை நீக்கி வியட்நாமில் சமாதானத்தைக் கொண்டு வருபவர்கள் போல் தோற்றம் அளிக்கிறார்கள். இந்த பிரச்சனையின் அடிப்படையை கவனிக்காமல் மேலோட்டமாக அணுகுவது தவறு என்கிறார். சாம்ஸ்கி தம்முடைய வாதத்தில் அந்த பிரச்சனையை அறவழி நின்று கேள்வியை எழுப்புகிறார். வியட்நாம் என்ற அந்நிய நாட்டில் தன்னுடைய படையைக் கொண்டு போரை நடத்த அமெரிக்காவுக்கு என்ன உரிமை இருக்கிறது . அமெரிக்க அறிவாளிகள் ஏன் இந்த கேள்வியை எழுப்பி வில்லை? அத்தகைய கேள்விகள் அவர்களின் அறிவின் பரப்பிற்குள் வராது. அவர்களுடைய சிந்தனை ஓரு பிரச்சனையின் நியாயத்தை பார்ப்பதை விட அந்தப் பிரச்சனையால் அமெரிக்க அரசுக்கு எத்தகைய சாதகமும் பாதகமும் உள்ளன என்பதன் அடிப்படையில் தீர்வுகாண முயற்சி செய்யும்.
இப்படி தன் நாடேனினும் தவறை தவறாமல் சுட்டிக்காட்டி அமெரிக்க அரசின் கோபத்தை எதிர்க் கொண்டாலும், அவர் தொடர்ந்து அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். இப்படியான பன்முக கொண்டு சோம்ஸ்கியை மேலும் மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இப்புத்தகத்தை வாய்ப்பு இருப்பவர்கள் கட்டாயம் படிங்கள்.

