Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை – முனைவர் எ. பாவலன்

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை

டாக்டர் சவிதா அம்பேத்கர்

 அளப்பரிய தியாகம், கடமை உணர்வு, பொறுப்புணர்வு, சமூகப் பற்று, நாட்டு விடுதலை இன்ன பிறவற்றால் சிலரின் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரிக்க தோன்றுகிறது. அதில் குறிக்கத்தக்கவர் டாக்டர் சாரதா கபீர் என்னும் இயற்பெயருடைய  டாக்டர் சவிதா. டாக்டர் அம்பேத்கரின் இரண்டாவது மனைவி. 39ஆவது வயதில் 57 வயதுடைய டாக்டர் அம்பேத்கரை விரும்பி ஏற்றுக்கொண்டார். தனது திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை எப்படி இருக்கும்? அல்லது எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சராசரி பெண்ணின் மனநிலையில்தான் சவிதா அம்மையாரும் இருந்தார். அவர் ஒரு மருத்துவர். பிறப்பின் அடிப்படையில்  ஒரு பிராமணர். இவரது எட்டு உடன்பிறப்புகளில் ஆறு பேர் உட்சாதிக்குள்ளேயே திருமணம் செய்தனர்.  கல்வி மற்றும் முற்போக்குச் சிந்தனையில் அவருடைய குடும்பம் மேம்பட்டிருந்ததால், சவிதாவின் குடும்பம் சாதி மறுப்பு திருமணத்தை எதிர்க்கவில்லை.

காந்தியின் படுகொலை,  இந்தியா –  பாகிஸ்தான் பிரிவினை என இந்தியாவே பெருங்கொந்தளிப்பில் இருந்த சூழலில், அம்பேத்கரும் சவிதா அம்மையாரும் 1948 ஏப்ரல் 15 ஆம் நாள் தில்லியில் எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமண வரவேற்பில் மவுண்ட் பேட்டன் பிரபு சிறப்பு பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

அம்பேத்கரும் சவிதா அம்மையாரும் 9 ஆண்டுகள் மட்டுமே இணைந்து வாழ்ந்தனர்.  1956 அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் தீட்க்ஷா பூமியில் 10 லட்சம் மக்களைத் திரட்டி பௌத்தத்தைத் தழுவிய இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு 1956 டிசம்பர் ஆறாம் நாள் இறந்துவிட்டார். சிலர், அம்பேத்கரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று இன்றுவரை கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் டாக்டர் சவிதாவின் அதிகாரம் இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, இருவருக்குமான உறவுநிலை எப்படி இருந்தது? என்பதை முன்வைத்து இக்கட்டுரை நகர்கிறது.

மெத்த படித்த இருவரும் வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதலுக்குப் பின்னரே திருமணத்தில் இணைந்தனர். திருமணத்திற்கு முன்னரே அம்பேத்கருக்கு கடுமையான ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இருந்தது. எனவே, அம்பேத்கரின் உடல்நலனில் பெரிதும் அக்கறையுடையவராக உடனிருந்து பராமரிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சவிதா அம்மையார்.

இதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் புத்தமும் அவரது தம்மமும் என்ற நூலில் 1956 டிசம்பர் 5ஆம் நாள் இறுதியாக தன்னுடைய கையெழுத்துப் பிரதியில் திருத்தம் போட்ட பிறகு, அதில் பின்வருமாறு பதிவு செய்திருந்தார். நான் இவ் வேலையை தொடங்கிய போது நோயுற்று இருந்தேன். தற்போதும் நோயாளியாகத்தான் இருக்கிறேன். இந்த ஐந்து ஆண்டுகளில் என் உடல் நலத்தில் பாதிப்பும் நன்னிலையும் ஏற்படுகிறது. சில நேரங்களில் என் உடல் நலத்தில் மிக மோசமான நிலை ஏற்படுகிறது. நான் அணையும் தீபமாய் இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். அணையும் தீபம் அணையாமல் இருக்க என் மனைவியின் வைத்திய திறமையும், டாக்டர் மௌலாங்கர் அவர்களின் கவனிப்புமே ஆகும் (ப.LVIII டாக்டர் அம்பேத்கர், புத்தரும் அவர் தம்மமும்; 2019). தன் இறுதி மூச்சு அடங்கும் முன்இரவு பதிவு இது.

இப்படி எல்லா நிலைகளிலும் சவிதா தன்னுடைய கணவருக்கு உற்றத் துணையாக இருந்துள்ளார். சில நேரத்தில் மருத்துவருக்குண்டான கண்டிப்பும் அவரிடம் இருந்துள்ளது. அதன் காரணமாக டாக்டர் அம்பேத்கருக்கு கட்டாய ஓய்வு தேவைப்படும் நேரங்களில் கட்சித் தொண்டர்களிடமும், அமைப்பைச் சார்ந்தவர்களிடமும் மக்களிடமும் கண்டிப்புடன் நடந்து கொண்டார். இது எல்லாம் தான்  டாக்டர் சவிதா மீது மற்றவர்களுக்கு கோபம் வருவதற்கும், வெறுப்பு அதிகரிக்கவும் காரணம் என்று கூற முடியும். ஆனால் டாக்டர் அம்பேத்கர் சவிதா மீது, அன்பும் மரியாதையும் கொண்டவராக இருந்தார்.

1947 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டாக்டர் அம்பேத்கர் ஒரு நாள் டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்றார். அப்பொழுது அவர் தொழிலாளர் அமைச்சர். தனது வழக்கப்படி பார்லேயில் உள்ள டாக்டர் ‘ராவின்’ வீட்டிற்கு சென்றார். அப்பொழுது சவிதா அங்கு இருந்தார். டாக்டர் ராவ் அவர்கள், இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பொழுது அம்பேத்கரிடம் இவர் என் மகளின் தோழி. மிகவும் புத்திசாலி. அவர் ஒரு MBBS மருத்துவர். டாக்டர் மால்வன்கருடன் உதவி மருத்துவராக வேலை செய்கிறார் என்றார். அந்த சந்திப்பில் டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டார். அந்தச் சந்திப்பின்போது அவர் ஒரு தொழிலாளர் அமைச்சர் என்பதையும் தாண்டி ஒரு அசாதாரணமான மற்றும் சிறந்த நபர் என்பதையும் சவிதா உணரத் தொடங்கினார்‌.

இரண்டாவது சந்திப்பு மௌலங்கரின் மருத்துவமனையில் நடந்தது. இந்த சந்திப்பு தான் இருவருக்குமான திருமண பந்தத்திற்கு தொடக்கம் என்று கூற முடியும்.

அம்பேத்கர், சவிதாவிடம் என்னுடைய தொண்டர்களும், சக ஊழியர்களும், ஒரு துணையை அழைத்து வரவேண்டுமென்று என்னிடம் தொடர்ந்து சொல்கிறார்கள். ஆனால் எனக்கு விருப்பமான மற்றும் எனக்கு இணக்கமான ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது கடினம். என் மக்களுக்காக நான் நீண்ட காலம் வாழவேண்டும். எனவே என்னை கவனித்துக் கொள்ள யாராவது தேவை. பொருத்தமான துணையின் தேடலை உங்களிடமிருந்து தொடங்க விரும்புகிறேன் என்று கூறினார். வெளிப்படையான இந்த கேள்விக்கு சவிதா உடனே பதில் சொல்ல முடியாமல் தயங்கினார். அதன் பிறகு தான் அவர் தன்னுடைய மருத்துவ நண்பரான மால்வன்கரிம் கேட்டபொழுது டாக்டர் அம்பேத்கர் உன்னை திருமண முடிவுக்காக வலியுறுத்தவில்லை. நீ யோசித்து பிறகு முடிவு எடு என்றார். அதேபோன்று மூத்த சகோதரியிடமும் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது நீ இந்தியாவின் திருமதி சட்ட அமைச்சராக இருப்பாய். இதை மறுக்காதே முன்னேசெல் என்று கூறினார்.

ஒருபுறம் உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் அவரை மறுமணம் செய்ய வற்புறுத்தினர். அவர்தம் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் உண்மையில் முதல் மனைவி ரமாபாய் இறந்த போது அவர் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை தனக்காக இல்லாவிட்டாலும் இந்த நாதியற்ற மக்களுக்காகத் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நோக்கமும் அவரை திரும்பவும் பொது வாழ்க்கைக்கு அழைத்து வந்தது. இந்தச் சூழலில் தான் மனைவி ரமாபாய் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கவனிக்கவும், பாதுகாக்கவும் உரிமையுடன்  உடல் நலனில் அக்கறைக் கொள்வதற்கு யாருமற்ற சூழலில் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் அவருக்கு இரண்டாவது திருமணம் தேவையாக இருந்தது. இன்னும் நீண்ட நாட்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பிய பலர் அவருடைய இரண்டாவது திருமணத்தில் கவனம் செலுத்தி வந்தனர். அதே சமயம் மற்றொரு கூட்டம் அவருடைய திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட தொடங்கியது. அதை டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு பதிவு செய்கிறார்

நான் பயந்ததைப் போலவே என் திருமணத்தை மேலும் தள்ளிப் போடுவது என்பது அதிக அளவில் விளம்பரம் ஆவதற்கும் தீய நோக்கினர் கண்டபடி பேசுவதற்கும் இடம் தருவதாகும். அதனால் 1948 ஏப்ரல் 15 ஆம் நாள் கட்டாயம் திருமணத்தை முடித்து விடுவது என்று முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார் (ப.599).

டாக்டர் அம்பேத்கர் – டாக்டர் சாரதாவை பொன்னுக்காகவும் பொருளுக்காகவும் உடல் தேவைக்காகவும் மணந்து கொள்ளவில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்து, அவர்களுக்கு பணியாற்றவே விரும்பினார். அதற்கு தன்னுடைய உடல் நலமற்று இருப்பதை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வதற்கு உற்றத்துணை தேவைப்பட்டது. அந்த துணை யாரும் ஈடு செய்ய முடியாத உற்றத் துணையாக, நம்பிக்கைக்கு உரிய உறவாக இருப்பதற்கு தன் மனைவியால் மட்டும் தான் முடியும் என்பதைத் தீர்க்கமாக நம்பினார். அதற்கு சவிதாவும் நம்பிக்கைக்குறியவராக இருந்துள்ளார். அவர் தன் சுயசரிதையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். டாக்டர் அம்பேத்கரின் ஆளுமை ஏற்கக் கூடியதாக இருந்தது அவரது படர்ந்த நெற்றி, பிரகாசமான கண்கள், கூர்மையான தோற்றம், நவீன மற்றும் நேர்த்தியான ஆடைகள் மற்றும் அவரது புத்திசாலித்தனத்தின் பிரகாசம் ஆகியவற்றால் அவரது அசாதாரண இருப்பை உடனடியாக உணர முடிந்தது என்று தான் ரசித்தவற்றை பதிவு செய்துள்ளார்.

அது மட்டுமல்ல பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பல சமூக மாற்றம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர். 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அம்பேத்கர் மூன்றாவது உலக பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரங்கூனுக்குச் சென்றார். அவருடைய மனைவியும் அவருடைய தனிச் செயலாளர் எஸ். வி.சாவத்கரும் அவருடன் சென்றனர் (ப.721) இப்படி எல்லாவகையிலும் டாக்டர் அம்பேத்கர் முன்னெடுக்கும் நிகழ்வுகளுக்கு துணையாக இருந்துள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்தம் தழுவும் பொழுது எந்த கருத்து வேறுபாடும் இன்றியும், முக சுளிப்பும் இன்றியும் சவிதாவும் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். இவை எல்லாம் திருமணத்திற்கு முன்பே பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரை நன்கு உணர்ந்த பின்பு தான் அவரை ஏற்றுக் கொண்டார். குறிப்பாக இந்து மதத்தின் மீது அவருக்கு இருந்த புரிதலை நன்கு உள்வாங்கியிருந்தார். அம்பேத்கரின் உடல், மனம் எல்லாவற்றையும் புரிந்து கொண்டுதான் திருமணத்திற்கு சம்மதித்தார். இப்படிப்பட்ட சூழலில் அந்த வறட்டுத்தனமான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது வெறும் குற்றச்சாட்டுக்கள் என்று புறம் தள்ளிட முடியாது.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின் பெரிய சதி திட்டமே இருந்துள்ளது.

  1. டாக்டர் அம்பேத்கர் அரசியல் பொருளாதாரக் கொள்கை, சாதி முரண்பாடு போன்றவற்றை எதிர்த்து அரை நூற்றாண்டு காலம் களங்கண்டு அவற்றுக்கு ஒரு தீர்வை சொல்லி சென்றுள்ள அவர் பிம்பத்தை உடைக்க வேண்டும்.
  2. சமய மறுமலர்ச்சி தோற்றங்கண்டு பௌத்தத்தை ஏற்பதை குற்றச்சாட்டுகளை சுமத்தி அடுத்து வரும் நாட்களில்  நீர்த்துப்போக செய்ய வேண்டும்.
  3. டாக்டர் சவிதா போன்ற புரட்சிகர எண்ணம் கொண்ட பெண்களை புறந்தள்ளுவது.
  4. பொதுவெளியில் பயணிக்கும் பெண்களின் சிந்தனைகளைத் தந்திரமாக தடுப்பது.

இப்படித்தான் ஆண்டாண்டு காலமாகச் சமயவாதிகள் கலாச்சார போர்வையில் மக்களைப் பிளவுபடுத்துவதிலேயே கவனம் கொண்டு இருந்தனர். எங்கு இவர்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டால் நமக்கு ஆபத்தாகிவிடும் என்பதனால் ஒரு நூற்றாண்டு காலமாக மக்களை நவீன சிந்தனைக்கு ஏற்ப மூளை சலவை செய்யப்பட்டு வருவதை இன்று வரை நாம் காண முடியும்.

எனவே எல்லாவற்றையும் பூதக்கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கிறார்கள். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு சுதந்திர இந்தியாவிற்கு அரசியல் சாசனம் தேவைப்பட்டது. அரசியல் சட்டத்தை எழுதுவதற்கு யார்யாரோ எங்கெங்கோ சென்று முட்டி மோதிய பின்பு அந்த வாய்ப்பு டாக்டர் அம்பேத்கரின் வாசலை வந்தடைந்ததுதான் என்று சொல்ல முடியும். தன் உடல் நலிவுற்ற சூழலிலும் இரண்டு ஆண்டுகள் 7 மாதங்கள் 18 நாட்கள் கடுந்தவம் புரிந்து சட்ட நூலை வடித்துத் தந்தார். ஆனால் தங்கள் வசதிக்கு எல்லாவற்றையும் மறந்து விட்டு இந்திய அரசியல் சட்ட நூலை குறித்து விமர்சிக்கத் தொடங்கினர். அப்பொழுதும் டாக்டர் அம்பேத்கர்  இந்த சட்ட நூலை எரிக்க வேண்டும் என்று  யாராவது நினைத்தால் அதை எரிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.

இப்படித்தான் வாழ்நாளின் இறுதிக் காலத்தை மக்கள் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும், நாட்டு முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டவர்.‌ அவர் சட்ட புத்தகத்தை எழுதுவதற்கு செலவிட்ட நாட்களை உடல் நலனின் அக்கறை காட்டியிருந்தால் இன்னும் இருபது முப்பது ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவரை ஊரே கூடி கொல்லாமல் கொன்று பாடைக்கு அனுப்பியதை வாய்த்திருக்க மறுக்கின்றனர். பொதுவெளியிலும், மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரத்தை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது ஒரு நவீன அடிமை புத்தி அல்லது சாதி இந்துவின் மனோபாவம். டாக்டர் சவிதா அம்பேத்கர் இன்று உயிருடன் இல்லை. ஆனாலும் அவர்கள் மீது ஏன் இத்தனை பெரிய வன்மம்?  காரணம் அடுத்து வரும் தலைமுறைக்கு இதன்வழியே தவறான கற்பிதத்தை கற்பிக்க வேண்டுமென்ற உள்நோக்கம் அதனுள் மறைந்துள்ளது.

டாக்டர் சவிதா அம்பேத்கர் மீது தரம் தாழ்ந்து குற்றச்சாட்டகள்  சுமத்தப்பட்டன. அதை எல்லாம் தன் மன வலிமையால் எதிர்கொண்டு உடைத்தெறிந்தார். அவர் இறந்த பின்பு சொத்து பிரச்சனை, உரிமை பிரச்சினை போன்ற சிக்கல்களும் தோன்றின. ஜவஹர்லால் நேரு இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் விசாரணைக்கு பின்னர் அவர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

காலம் தான் சிறந்த மருந்து

பாபா சகேப் டாக்டர் அம்பேத்கர் எந்த இடத்தில் தன்னுடைய பயணத்தை நிறுத்தினாரோ? அந்த இடத்திலிருந்து தன்னுடைய பொது வாழ்க்கையை டாக்டர் சவிதா அம்பேத்கர் தொடங்கினார். பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும், குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அரசியல் வாழ்க்கைக்கு வரவேண்டும் என்று விரும்பினார். அதன் காரணமாக மாநிலங்களவை உறுப்பினராக நிற்க வைத்து பாராளுமன்றத்திற்குக் கொண்டுவர விரும்பினர். ஆனால் அவர்களுக்கு வேண்டாம் என்று மறுப்பு சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார். அதன் பின்னர் தலித் இயக்கத்தையும், பௌத்தத்தையும் முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவானது. தலித் சிறுத்தைகள் என்ற அமைப்பைத் தோற்றுவித்து பாபா சாகேப் அம்பேத்கரின் கனவையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தீவிரமாக களம் ஆடினார்.

டாக்டர் அம்பேத்கர் தோற்றுவித்த இந்திய குடியரசு கட்சியும், டாக்டர் சவிதா அம்பேத்கர் உருவாக்கிய தலித் சிறுத்தைகள் அமைப்பும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தன. அம்பேத்கர் எழுதிய இந்து மதத்தின் புதிர்கள் புத்தகத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்து தீவிரமாகப் பாடாற்றினார். அதன்பிறகு அவர் மீது சுமத்தப்பட்ட பழிகளுக்கு ஒரு தீர்வு காணப்பட்டது.

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா 1990 ஏப்ரல் 14ஆம் நாள் அம்பேத்கரின் பிறந்த நாளின் போது வழங்கப்பட்டது. அப்பொழுது அன்றைய குடியரசுத் தலைவர் ரா. வெங்கட்ராமன் சவிதா அம்பேத்கரிடம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவர்களை வெறுப்பதற்குக் காரணம் எதுவாகிலும் இருந்து விட்டுப் போகட்டும் ஆனாலும் இன்றும் பாபாசாகேப்பும் அவரது மனைவி சவிதா அம்பேத்கரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

முனைவர் எ. பாவலன்

 

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here