நூல் : கண்ணப்பன் கேட்ட கேள்வி?
ஆசிரியர் : புதுச்சேரி அன்பழகன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் (Books for Children)
ஆண்டு : ஆகஸ்டு 2022
விலை : ரூ.144
விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களின் சிறப்பான முன்னுரையுடன் நூல் மிகவும் அருமையாக வந்துள்ளது.
மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களைத் தேடும் ஆசிரியரே சிறந்த ஆசிரியர். அந்த சிறந்த ஆசிரியரையும், புதிய புதிய கேள்விகளை எழுப்பும் மாணவர்களையும் சுற்றியே இந்நூல் பேசுகிறது. 14 கதைகளில் 14 விதமான அறிவியல் பூர்வமான தேடல்களை நமக்கு கொடுத்திருக்கிறார் நிறைய எளிய அறிவியல் விளக்கங்களுடன். மாணவர்களுக்கு சுயமான தேடலை அளிப்பதே கல்வியின் முக்கியமான நோக்கமாக இருக்கவேண்டும் என்பதே இந்நூலின் மையக்கருத்தாக நாம் காணலாம்.
14 தலைப்புகளும் மிகவும் அருமையாக குழந்தைகளை சுற்றி வருகிறது.
குறிப்பாக குழந்தைகளுக்கான சுதந்திரம் நிறைய வழங்கியிருக்கிறார். குழந்தைகள் நூலகப் புத்தகம் எடுப்பதற்கு யாரும் தடையில்லை, மாணவர்களே கூடித் திட்டமிடுவதற்கு தடையில்லை, வகுப்பறையில் குழந்தைகள் மனம்திறந்து பேசுவதற்கு முழு சுதந்திரம், குறிப்பாக நாம் வாரம் இருமுறை பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றி வருகிறோம். இவர் புதுமையாக அறிவியல் அறிஞர்களின் தினத்தில் அவர்களின் கண்டுபிடிப்பு, அவர்களின் உருவங்கள் பொதித்த அறிவியல் கொடியை மாணவர்களே ஏற்றுவது போன்று காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் புதுமை. இப்படி நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
வகுப்பறைக்குள் செல்லும் ஆசிரியர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்றால் மிகையல்ல.
குழந்தைகளின் மனங்களில் இடம் பிடிக்கும் ஆசிரியராக நமக்கும் வழிகாட்டும் நூலாசிரியர் தோழர் புதுச்சேரி அன்பழகன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்! தொடர்ந்து அவர் மென்மேலும் கல்வி குறித்து நூல்களை வழங்கிட மனமார வாழ்த்துகிறேன்!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.