nool arimugam: onguttu doona - vijayraj.a நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -விஜய் ராஜ். அ
nool arimugam: onguttu doona - vijayraj.a நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -விஜய் ராஜ். அ

நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -விஜய் ராஜ். அ

ஓங்கூட்டு டூணா
ஆசிரியர்.தேனி சுந்தர்
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் 88

தோழர் தேனி சுந்தர் அவர்களுக்கு பேரன்புடன் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

இதுபோல் ஒரு நூல் வெளிவர காரணமாய் இருந்து…. தனது விருப்பத்தையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தியும் வந்த ஐயா ச. மாடசாமி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வகுப்பறை டயரி எழுதுங்கள்…. வகுப்பு மலர்ந்திருந்த நேரம், துவண்டு இருந்த நேரம், பிள்ளைகள் கவனித்த பாடம், கவனம் விலக்கிய பாடம், எழுப்பிய கேள்விகள், சொன்ன பதில்கள், வகுப்பறையில் மேம்பட்ட உறவுகள், பதுங்கி கிடந்த பாகுபாடுகள்…. எல்லாவற்றையும் குறித்து வையுங்கள்.
வகுப்பறையில் சிறு சிறு அசைவுகளையும் உன்னிப்பாக பார்க்கும் பார்வை வேண்டும் ஐந்து பேரால் இடைவிட்டு இடைவிட்டாவது ஓராண்டுக்கு டயரி எழுத முடிந்து… அந்த டைரி குறிப்புகளை ஒரு கருத்தரங்கில் முன் வைத்தால் அது பள்ளி கல்விக்கு ஆசிரியர்கள் வழங்கிய கொடையாக இருக்கும் முயன்று பாருங்கள்….. என்று தோழர் தேனி.சுந்தர் அவர்களுக்கு செய்தி அனுப்பி ஊக்கப்படுத்தியவர் ஐயா ச. மாடசாமி அவர்கள்.
இந்தச் செய்தியை மைய புள்ளியாக வைத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூல் வெளிவந்துள்ளது.

ஐயா சொன்னது போல் சில ஆசிரியர்கள் சேர்ந்து வகுப்பறை டைரி எழுதி அதை ஒரு கருத்தரங்கில் வைத்து விவாதிக்கும் பொழுது ஆசிரியர்களுக்கு ஒரு உளவியல் பயிற்சி அளித்ததாக அந்த நிகழ்வு அமையும் என்பது உண்மை.

இந்த நூலை வாசித்து முடித்த பிறகு முன்னுரையில் கவிஞர் தோழர்.முருகேஷ் அவர்கள் கூறியது எவ்வளவு உண்மை என்பது விளங்கும்.
குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று ஒற்றைக் கேள்வியோடு கடந்து போகும் நமக்கு…. குழந்தைக்கு என்ன தெரியும்…? என்ன தெரியாது…? என்பது கூட இன்னமும் நமக்குத் தெரியாது என்பதுதான் உண்மை. ஆனாலும் நாம் வளர்ந்தவர்கள் பெரியவர்கள் என்பதால் உண்மைகளை ஒத்துக் கொள்வதில் நமக்கு பெரிய தயக்கம் இருக்கிறது. —– தோழர. முருகேஷ்

மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் தனது தொழிற்சார்ந்த செயல்களில் ஈடுபடும் பொழுது பிராக்டிஸ் என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். அதே போலவே ஆசிரியர்களும் தனது துறை சார்ந்த செயல்களில் ஈடுபடும் பொழுது ப்ராக்டிஸ் என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும். என்ற தோழரின் விருப்பத்தை…. நூலை படிக்கும் பொழுது நமக்கே தெரிய வரும் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான் என்றுசிரிக்கவும்… சிந்திக்கவும்… வைக்கும் மழலை சொற்களில் சில….

பேனாவுல எழுதினா டீச்சர்
பென்சில்ல எழுதினா ஸ்டுடென்ட்
அம்புட்டு தான் ஸ்கூல்…

உள்ளுட்டேன் சார்…
ஓ… விழுந்துட்டியா…

ரோட்ல போகும்போது
வேகத்தடை எல்லாம் போட்டுருப்பாங்க
அது எதுக்குன்னு தெரியுமா????
அதுக்கு ஒன்றாம் வகுப்பு
சாண்டில்யன் சொன்ன பதில்
“போலீசு வசூல் பண்றதுக்கு சார்”….!

குழந்தை கதை சொல்லி அபிபன்யுவின் கதைகள் ஏராளம் ஏராளம் இந்த நூலில்

சார்
3 போட்டு பழகிட்டேன்…
சார்
5 போட்டு பழகிட்டேன்
சார்
நானும் தப்பு இல்லாம
8 போட்டு பழகிட்டேன்
குட்டீஸ்களின் சாதனைகள் தான் எத்தனை எத்தனை….!

வகுப்பறையில் சிறிது நேரம் கண்ணுறங்கிய சாருக்கு வந்த சோதனை
யாஷனா…. சொல்கிறாள்
பள்ளிக்கூடத்தில் தூங்குனா படிப்பு வராது எழுந்திருங்கள் சார்….
எங்களுக்கு படிப்பு வராது சார்…
எழுந்திரிங்க சார்….!

நம்ம இந்திய பிரதமரை பத்தி எப்படி தெரிஞ்சு வச்சிருக்காங்க பாருங்க…
மோடி தெரியுமான்னு கேட்டதும் குழந்தை அம்ரித்தா சொன்னது
எப்ப பார்த்தாலும் ஏரோப்ளேன்ல
போவார்ல சார்
அவர்தான் மோடி
டிவில போட்டுக்குட்டே இருப்பாங்க சார்
ஏரோப்ளேன்ல ஏறிக்கிட்டே
டாட்டா காட்டுவாரு….!

குழந்தைகள்
 பா.பவன்யா
தலைமையில் ஒரு விவாதம்
பாட்டு என்பது சும்மா ஆட்றதுக்கா???
இல்ல வார்த்தைகள் புரிஞ்சுக்கவா???
அப்படின்கிற தலைப்பில்
இரு அணிகளாக பிரிந்து குழந்தைகள் பாட்டுங்கிறது ஆடறதுக்கு தான் என்ற அணியில் கூட்டம் சேர சேர
கடைசியாக பா.பவன்யா மட்டும்
இறுதிவரை ஒரே கொள்கையில் இருந்தார்
வார்த்தைகளை புரிஞ்சிக்க தான் என்று…!
கூட்டம் சேர்றவங்க பக்கம் கூட்டு சேராம… தான் கொண்ட கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு சான்று பா. பவண்யா.

ஓங்கூட்டு டூணா… உன் கூட பேச மாட்டேன் போ….. என செல்ல சண்டையிட்டு சில நிமிடங்களில் ஒன்று கூடும் குழந்தைகளின் பண்பு குணம் ஏன் பெரியவர்களிடம் இல்லை.????

சிந்தனையை தூண்டும் சொல் தான் ஓங்கூட்டு டூணா…

பள்ளிக்கல்வியில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்காக தன்னால் முடிந்த பங்களிப்பாக இந்த நூலை படைத்த ஆசிரியர் தோழர் தேனி சுந்தர் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

நன்றிகள் தோழர்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *