நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை - பூங்கொடி பாலமுருகன் nool arimugam : puthaga thevathain kathai - poongkodi balamurugan

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்: யூமா வாசுகி
பக்கங்கள் : 104
விலை : ₹70.00
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்.
புத்தகங்களை நேசிப்பவர்களுக்கு இந்த நூலின் தலைப்பே மிகப் பிடித்தமான ஒன்றாக இருக்கும். உலகப் புகழ்பெற்ற சிறந்த நாவல்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டு வருவதில் யூமா வாசுகி அவர்களின்  பங்கு அளப்பரியது.

ஆலியா முஹம்மத் பேக் இந்தப் பெண்தான் புத்தக தேவதை. 2003 ஆண்டு ஈராக் நாட்டின் நகரமான பாஸ்ராவின் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மனிதர்கள், விலங்குகள், கட்டிடங்கள் எல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகி சிதறிக் கிடந்தது. அந்தப் படுபயங்கரமான தாக்குதலில், தான் நூலகராக வேலை செய்த நூலகத்தில் உள்ள பத்தாயிரக்கணக்கான புத்தகங்களை அரும்பாடுபட்டு காப்பாற்றிய தேவதைதான் ஆலியா.

அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்த புத்தக தேவதையின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

தனது உம்மா மற்றும் வாப்பாவிடம் கதைகள் கேட்டு, இறக்கைகள் முளைத்த கனவுகள் கண்டு வருபவள்தான் ஆலியா. சின்னஞ்சிறு வயதில் அரபுக் கதைகள் கேட்டதன் விளைவாக அழகான இளவரசன், அழகான இளவரசி, ஜின், மலக், இபிலிஸ் எல்லாம் அவருடைய கனவில் வந்தன. அவள் கதையில் வரும் இளவரசன் காற்றைப்போல குதிரையில் பறந்து வருவான். இப்படியான கதைகளை கேட்டு வரும் ஆலியா ஒரு நாள் தீர்க்கதரிசி ஒருவரின் கதையை வாப்பாவிடம் கேட்கிறாள். அல்லாஹ்வின் இறுதித் தூதரான முகமது நபி தான் அந்த தீர்க்கதரிசி.

அந்த தீர்க்கதரிசியின் கதையில் ‘ படிப்பீராக ‘ இன்று மலக்கு ஜிப்ரீல் சொன்ன வார்த்தை ஆலியாவின் மனதில் ஆழமாய் தங்கியது.குர்ஆன் என்றால் வாசிப்பு; வாசிப்புக்கு ஒரு புனிதமான ஒளிவட்டம் இருக்கிறது; நமக்கு அறிவைத் தருகிறது; விவேகம் தருகிறது; சரி எது, தவறு எது? என்று இனம் பிரித்து காட்டுகிறது; என்ற அது அவளுடைய தந்தையின் வார்த்தைகள் வாசிப்பு என்னும் பாதையில் அவளை பயணம் செய்ய வைத்தது; நூலகத்தில் எண்ணற்ற நூல்களை வாசித்தாள்; எனக்கு மிகப்பிடித்த நூலகர் வேலை கிடைக்கப்பெற்றாள்; வாசிப்பை நேசிக்கும் அவளது கணவர் அவளுக்கு இட்ட பெயர் தான் புத்தக தேவதை.

அந்த புத்தக தேவதை அமெரிக்கா  ஈராக்கின் மீது போர் தொடுத்த பொழுது, குழந்தையாய் பாவித்த தன்னுடைய நூலகத்தில் உள்ள நூல்களை எப்படி பாதுகாத்தாள் என்பதுதான் மீதிக்கதை.

நாவலின் இடையே குழந்தைகளுக்கான சிறப்பான சில நீதிக் கதைகளும் இடம் பெற்றுள்ளது. கண்டிப்பாக இளையோர்களும், பெரியோர்களும் வாசிக்க வேண்டிய ஓரு அற்புதமான நூல் இது.

நூல் அறிமுகம் : பூங்கொடி பாலமுருகன்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *