ஆர் எஸ் எஸ் குறித்து 11 நறுக் கேள்விகள் பதில்கள்
இந்தியா வெல்ல – இந்தியா நிலைக்க – இந்தியா வளர தேர்தல் களத்தில் மோடியைத் தோற்கடிப்பது மிக முக்கியம் . அதனினும் மிக முக்கியம் தத்துவக் களத்தில் ஆர் எஸ் எஸ் முகத்திரையைக் கிழித்து விழிப்புணர்வு ஊட்டுவதாகும்.
இந்த தத்துவப் போருக்கு உதவியாக தமிழில் ஏராளமான நூல்கள் அண்மை ஆண்டுகளில் வெளிவந்துள்ளன . மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளன .ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கூர்மையாக பாடம் சொல்கின்றன .அவற்றை நம் போராளிகள் கைஆயுதம் ஆக்கிவிட்டோமா என்பதுதான் மிகப்பெருங்கேள்வி.
1] இந்த தத்துவப் போருக்கு ஏதோ ஒரு வகையில் உதவும் நூல்களின் பட்டியல் தயாரித்து தீக்கதிர் ,விடுதலை ,முரசொலி ,தாய்மண்,சங்கொலி போன்ற கட்சிப் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் .விளம்பரம் செய்ய வேண்டும் .ஆங்காங்கு இந்நூல்களின் புத்தகக் காட்சியும் அறிமுகமும் தொடர்ந்து நடத்த வேண்டும்.
2] இவ்வேடுகளில் தினசரி ஒரு புத்தகம் வீதம் எடுத்து அதனை எளிமையாக அறிமுகம் செய்ய வேண்டும்.
3] அந்த புத்தகங்களில் பிரச்சாரத்துக்கு உதவும் கூறுகளை பெட்டிச் செய்திகளாக தொடர்ந்து வெளியிட வேண்டும்.
இப்படிப்பட்ட முன் முயற்சி உடனடித் தேவை என்பது என் தாழ்மையான கருத்து .
சரி ! இன்று இங்கு “ஆர் எஸ் எஸ் –ஐ அறிந்து கொள்வோம்” எனும் 88 பக்க நூல் குறித்து பார்ப்போம்.தில்லி பல்கலைக் கழகத்தின் மேநாள் சமூக அறிவியல் துறைத் தலைவர் சும்சுல் இஸ்லாம் ஆங்கிலத்தில் எழுதியது .ஏற்கெனவே இந்தி ,உருது மொழிகளில் வந்துள்ளன.ச.வீரமணி தமிழில் தந்துள்ளார் .பாரதி புத்தகாலய வெளியீடு .
இந்நூல் 11 அத்தியாயங்களைக் கொண்டது . 11 கேள்விகளை எழுப்பி விடை சொல்கிறது .
1]ஆர் எஸ் எஸ் இயக்கம் பாசிசத்தையும் ஹிட்லரையும் வழிபடுகிறது என்பது உண்மையா ?
2]ஆர் எஸ் எஸ் எப்போதாவது தேசியக் கொடிக்கு விசுவாசமாக இருந்திருக்கிறதா ?
3]ஆர் எஸ் எஸ் கோருகிறபடி மனுஸ்மிருதி இந்திய அரசமைப்புச் சட்டமாக மாற்றப்பட்டால் ,சூத்திரர்கள் ,தலித்துகள் மற்றும் பெண்கள் நிலைமை என்ன ஆகும் ?
4]ஆர் எஸ் எஸ் இயக்கம் எப்போதாது மதச்சார்பின்மை ,ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்திருந்ததா ?
5]காந்திஜி கொலை செய்யப்பட்ட பின்னர் ஆர் எஸ் எஸ் தடை செய்யப் பட்டது ஏன் ?
6]ஆர் எஸ் எஸ் இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறதா ?
7]பகத்சிங் ,சந்திரசேகர் ஆசாத் , அஸ்பகுல்லா கான் போன்ற விடுதலைப் போராட்டத் தியாகிகளை ஆர் எஸ் எஸ் மதிக்கிறதா ?
8]ஆர் எஸ் எஸ் இயக்கம் தான் ஓர் அரசியலற்ற இயக்கம் என்று சொல்லிக் கொண்டே தேசிய அரசியலில் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?
9]பசுவும் ஆர் எஸ் எஸ் ஸும் : கட்டவிழ்த்துவிடும் பொய்களுக்கு அளவே இல்லையா ?
10]ஆர் எஸ் எஸ் எப்படி பாகிஸ்தான் ஐ எஸ் ஐ போன்ற உளவு நிறுவனங்களுக்கு எப்படி உதவுகிறது ?
11]நாடு பிரிவினை அடைவதற்கு முன்பே முஸ்லீம் லீகைப் போன்றே ஆர் எஸ் எஸ் அமைப்பும் இரண்டு தேசக் கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்ததா ?
இக்கேள்விகளுக்கான பதில்களை ஆர் எஸ் எஸ் வெளியிட்ட ஆவணங்களிலிருந்தே சொல்லியிருப்பதே இந்நூலின் சிறப்பு .எளிமை இந்நூலின் கூடுதல் பலம்.
அவசியம் வாசிப்பீர் !
ஆர் எஸ் எஸ் – ஐ அறிந்து கொள்வோம் ,ஆசிரியர் :சம்சுல் இஸ்லாம், தமிழில் : ச.வீரமணி,பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :044 24332924 /24330024 / 8778073949 / பக்கங்கள் : 88 , விலை : ரூ.80/

