நூல் அறிமுகம்: ஸ்டான் சாமி பழங்குடி மக்களின் அறப்போராளி - ந.ஞானகுரு nool arimugam ; stansamy pazhangudi makkalin arapporaali - n.gaanaguru
நூல் அறிமுகம்: ஸ்டான் சாமி பழங்குடி மக்களின் அறப்போராளி - ந.ஞானகுரு nool arimugam ; stansamy pazhangudi makkalin arapporaali - n.gaanaguru

நூல் அறிமுகம்: ஸ்டான் சாமி பழங்குடி மக்களின் அறப்போராளி – ந.ஞானகுரு

மகத்தான பழங்குடி மக்களின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஸ்டான் சாமியின் வாழ்க்கை வரலாறை டாக்டர் பிரகாஷ் லூயிஸ் மிக அழகாக எழுதியுள்ளார்.

ஸ்டான் சாமியின் வரலாறு என்பதை பழங்குடி மக்களின் வாழ்க்கைத் துயரம் , ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு, அரசியல் கட்சிகளின் அக்கறையிண்மை ஆகியவற்றிற்கெதிராக அறியாமையில் மூழ்கிக் கிடந்த பழங்குடி மக்களை பயிற்றுவித்து அவர்களை எப்படி அணிதிரட்டினார் என்பதை தெளிவுபடுத்தும் நூல் எனலாம்.

ஸ்டானிலாஸ் லூர்து சாமி .எஸ்ஜே என்றும், ஸ்டான் சாமி என்றும் , அவரது எண்ணற்ற தோழர்கள் , நண்பர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகளால் அழைக்கப்பட்ட அவர் 26.04.1937 அன்று திருச்சிராப்பள்ளி அருகே விராகலூரில் பிறந்து திருச்சி புனித ஜோசப் எனும் துறவிகளால் நடத்தப்படும் பள்ளியில் கற்றார். ஸ்டான் சாமி தனது நேரத்தை, 1965இல் லுபுங்குட்டு ,சாய்பாசா, சிங்பூம் செயிண்ட் சேவியர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் கழித்தார். இவர் துறவியாக மாறுவதற்கான ஆரம்பகால பயிற்சியை சிங்பூம் பகுதியில் எடுத்துக்கொண்ட பிறகு இறையியல் படிப்புகளுக்காக பிலிப்பைன்ஸ் செல்கிறார். அங்கு மணிலா நகரில் இறையியல் பயின்ற 1967 ஆம் ஆண்டு அவரது வாழ்வில் மற்றொரு தீர்க்கமான திருப்பத்திற்கான காலகட்டம் , கடவுள் , தெய்வீகம், நம்பிக்கை, வழிபாடு, மதங்களுக்கிடையேயான உரையாடல் உள்ளிட்டவற்றை கிருத்துவத்தில் நடத்தப்படுகிற இறையியல் ஆய்வுகளைக் கையாள்கின்றன. இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் தொடர்ச்சியாக மார்க்சியமும் பயின்றார்.

அதன்பின்னர் பழங்குடி மக்களிடையே தனது பணியைத் தொடருகிறார். அவர் கற்ற சமூகவியல் பாடங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பழங்குடி மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதை அறிகிறார்.

ஆதிவாசி சமூகங்களின் நலிந்த நிலைமை பற்றிய ஸ்டான் சாமியின் புரிதல்

1947க்குப் பிறகு ”ஆதிவாசிகள்” பட்டியலின பழங்குடியினர் என்று அறியப்பட்டனர். தேசிய வளர்ச்சி என்ற பெயரில் அந்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியில் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர் . அதாவது சுமார் 22லட்சம் ஏக்கர் நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னரும் வளர்ச்சி என்ற பெயரில், நிலங்களை கையகப்படுத்தப்படும்போது அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டும் என்று இருந்தாலும் அவர்களில் மூன்றில் ஒருபகுதியினர் எந்த நிவாரணமும் வழங்கப்பாடாமல் நிலங்களிலிருந்தே அப்புறப்படுத்தப் பட்டனர் என்பதே நிதர்சனம். 2014-19 ஆண்டுகளில் ஜார்க்கண்டில் பாஜக அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நம்பிக்கையை விட கூடுதல் அச்சங்கள்தான் இருந்தன.ஆதிவாசி சமூகங்களை நேரடியாக சுரண்டுவோரின் நலனுக்கான அரசாகத்தான் இருந்தது. இவ்வாறாக ஆதிவாசி மக்களின் துயரங்களையும் ஆதிக்குடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வற்று இருப்பதையும் , வனங்கள் வளமாக இருந்தால்தான் நாட்டின் வளம் பெருகும் என்ற புரிதலற்ற நிலையை உணரவைப்பதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. சம்மந்தம் இல்லாமல் கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகிய போது ஒன்றிய அரசுக்கு தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என்ற உணர்ச்சிபொங்க எழுதிய கடிதத்தில் கூட பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பற்றிய கவலைதான் அதிகமாக இருக்கிறது.

இந்த நூல் ஒவ்வொருவரும் அவசியம் படித்தறிய வேண்டிய நூல். நாட்டின் வனங்களைப் பாதுகாக்க வேண்டுமானால் பழங்குடி மக்களின் நலன்கள் பாதுக்காக்கப் படவேண்டும் என்று உணர்த்தும் நூல்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *