Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: தாய் – இரா இயேசுதாஸ்

தாய் ….(நாவல்)
ஆசிரியர் :மாக்சிம் கார்க்கி
தமிழில் :தொ. மு. சி .ரகுநாதன்
சீர் வாசகர் வட்ட வெளியீடு
முதல் பதிப்பு: டிசம்பர் 2022
முன்னுரை: கரன் கார்க்கி
576 பக்கங்கள்

விலை :ரூ. 150( ரூ 600 விலை மதிப்புள்ள..
கெட்டி அட்டையில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் மக்கள் பதிப்பாக வெளிவந்துள்ளது.)
தபால் கட்டணம் தனியாக செலுத்தி பெற: பனுவல் பதிப்பகம் :97 890 096 66.

எனது 13 வது வயதில் எட்டாம் வகுப்பு படித்தபோது சேரி ஊராட்சி மன்ற அலுவலக சிறு நூலகத்தில் வாசித்தது .மீண்டும் 50 வருடங்கள் கழித்து மறுவாசிப்பு.ஆனாலும் புது வாசிப்பாகவே இருந்தது.

“தாய்” பைபிளுக்கு அடுத்து அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் .கலைஞர் அவர்கள் கவிதை வடிவிலும் எழுதியுள்ளார். பல்வேறு ஆசிரியர்கள் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். ஐந்து பகலில் வாசித்தேன்.

எங்கோ ரஷ்யாவில் எழுதப்பட்டிருந்தாலும், இதில் நிரம்பி வழிந்த விவாதங்களில் காதல், நட்பு, தோழமை ,தாய்மை ,சகோதரத்துவம் ,நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியல்… ஆகியவை நம்மை வரிக்கு, வரி அசத்துகின்றன.! இன்றைய காலகட்டத்திற்கும்.. இந்தியாவிற்கும் பொருத்தமாய் உள்ளது..

தோழமையோடு களப்பணியாற்றுகின்ற மனிதர்களுக்கு இடையே நிலவும் பேரன்பும், பாசமும் ,நேசமும் நம்மை தாயோடு கட்டிப்
பிணைத்து விடுகின்றன.

தாய் பெலகேயா நீலவ்னா.. மகன் பாவெல் என்பது வாசகர்களின் தகவலுக்காக… தகப்பன் மிகயீல் விலாசவ்..குடிகாரன்.. தனது ஆலையில் எதிர்கொள்ளும் தாக்குதல்களை வீட்டில் மனைவி மீது இறக்கி வைக்கிறான்.. குடியால் ..புகையால் இறக்கிறான் .தகப்பன் போலவே மகன் பாவெலும் குடி.. புகையை ஆரம்பிக்கிறான் .ஆனால் தாயின் “உன் தகப்பன் போலவே நீயும் என்னை நிம்மதி இழக்க செய்யப் போகிறாயா” என்ற கேள்வியால் மனம் மாறி.. தன் வாழ்க்கை பயணத்தை மாற்றிக் கொள்கிறான்.. நிறைய புத்தகங்கள் வாசிப்பது.. தாயின் வீட்டிற்கு நிறைய நபர்கள் வந்து போவது… இவனும் பல இடங்களுக்கு சென்று வருகிறான்.. இவற்றைப் பற்றி எல்லாம் தாய்க்கு ஆரம்பத்தில் பயமாகவே இருக்கிறது. பின் போகப் போக புரிந்து கொள்கிறாள் ..மகன் கெட்ட வழியில் செல்லவில்லை என அறிகிறாள்.. காலப்போக்கில் இவளும் அவனின் பாதையில் எப்படி வீரத்தாயாக மாறி பயணிக்கிறாள் என்பதை எதார்த்தமாக.. படிப்படியான சம்பவங்களுடன் விவரிக்கிறது தாய்! களத்தில் பணியாற்றி அனுபவம் பெற்ற மக்கள் எழுத்தாளராக மாக்சிம் கார்க்கியை இந்த நாவல் அடையாளம் காட்டுகிறது.

தாய்… பாவலுக்கு மட்டும் தாய் அல்ல …வாசிக்கும் வாசகனின் தாயாகவும் மாறிப்போவதுதான் நாவலின் வெற்றி!

நடாஷா,அந்திராய்ஹாஹோல்,
பியோரா யாசின்,எபீம்,நிகோலாய்,சாஷா, என வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஒவ்வொன்றும்அலாதியானது ..விசித்திரமானவை. நெஞ்சைத் தொடுபவை.. நாவலை படித்து முடித்த பின்பும் நம்முடன் உலாவரும் குணச்சித்திரங்கள்!

ஓட்கா மது அருந்துதல்.. பனி.. பனி படர்ந்த சாலைகள்.. வண்டிகள் மூலமும் ரயில் மூலமும் பயணங்கள் ..குளிரை தாங்க கோட், பூட்ஸ் உடைகள் கனல் அடுப்புகள் ,புகை எழுப்பும் ஆலைகள், ஆலைகள் எழுப்பும் சங்கொலி, தீப்பெட்டி அடுக்குகளாய் ஆலையைச்சுற்றி வீடுகள்.. ஆலைகளின் அடிமைகளாய் நேர கணக்கின்றி தூங்கியும் தூங்காமலும் எழுந்து ஓடி உழைக்கும் மனிதர்கள்.. உழைப்பின் வலியை போக்க மது என
தங்களின் வறுமை பற்றி சிந்திக்க நேரமில்லாமல் உழலும் உழைப்பாளிகள்.. உதைபடும் இல்லத்து பெண்மணிகள்… இப்படி துயரமான அடிமை வாழ்வில் இருந்து உழைப்பாளிகளை மீட்க பிரசுரம், பத்திரிகைகள் அனுப்புதல் ,உளவாளிகளுக்கு மத்தியிலேயே ரகசிய வினியோகம்.. பிரச்சாரம்..
இந்தப் போராளிகளை ..பிரச்சாரகர்களை ஜார் மன்னனின் காவலர்கள் எப்படி துரத்தி துரத்தி பிடிக்கிறார்கள்.. வீடுகளில் சோதனை போடுகிறார்கள், இவர்கள் மீது எப்படி தாக்குதல் தொடுக்கிறார்கள்.. சிறையில் அடைக்கிறார்கள்.. சைபீரியாவுக்கு நாடு கடத்துகிறார்கள்… இதையெல்லாம் எப்படி களப்போராளிகள் தாக்குப்பிடித்து முன்னேறுகிறார்கள்.. உழைப்பாளிகளை கஷ்டப்பட்டு ஒன்று சேர்க்கிறார்கள்.. அவர்களுக்கு எப்படி வர்க்க உணர்வு ஊட்டுகிறார்கள்.. என்று நாவல் முழுதும் விறுவிறுப்பான வர்ணனைகளால் நிறைந்துள்ளது தாய் நாவல்

புரட்சிகர இலக்கியங்களை வாசிப்பதன் மூலம் வசீகரிக்கப்பட்ட இளைஞர்கள் , எப்படி சக்தி மிக்கவர்களாக மாறுகிறார்கள் என்பதை தாய் நாவல் விளக்குகிறது..

உலகின் தலைசிறந்த பண்பாகிய தோழமை.. அதையும் மிஞ்சும் தாய்மை.. ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்து நாவல் முழுதும் பயணிக்கிறது .தன் மகளின் காதலி, தன் மகளை கரம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஒருபுறம்; அப்படி நேர்ந்தால் இயக்கம் தடைபடுமே என்ற உண்மை மறுபுறம்.. இவற்றுக்கு இடையே பாசமுள்ள புரட்சிகர தாய் எப்படி அல்லாடுகிறாள்என்பது நாவல் முழுக்க புலப்படுகிறது.

ஆரம்பத்தில் மகனுடன் வெளி உலகம் பற்றி எதுவுமே பேசாத ..கடவுள் பக்தி மிக்க தாய்
எப்படி களத்தில்.. அவனது வீரம் மிகுந்த பேச்சை பிரசுரம் ஆக்கி.. மக்களிடம் புரட்சிகர உணர்வை விளைவிக்க போலீசாரின் தாக்குதலையும் எதிர்கொண்டு தாக்கு பிடிக்கும் வீரத்தாயாக மாறுகிறார் என்பதை கற்பனைத்தனம் எதுவும் இல்லாமல் வாசகர் நம்பும்படி வடிவமைத்துள்ளார் கார்க்கி. களத்தில் பணியாற்றும் அன்பு த் தோழராகவும் இருக்கிறாள்.. தோழர்கள் அனைவருக்கும் பாசமிகு தாயாகவும் இருக்கிறாள்..
ஒவ்வொருவரையும் அரவணைத்து அவர்களோடு ஒன்றி கலந்து விடும் இந்த தோழமை தாய்… நம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க மாட்டாளா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது இந்த நாவல்.

இந்த நாவலில் வரும் பல கதாபாத்திரங்கள் தன் தாயுடனோ.. தந்தையுடனோ.. சகோதரனுடனோ.. சகோதரி யுடனோ..பிள்ளைகளுடனோ முரண்பாடு கொண்டே இயக்கத்திற்கு வருகிறார்கள் ..ஒரு சிலர் குடும்ப உறுப்பினர்களுடன்இணைந்து இயக்கத்தில் பயணிக்கிறார்கள்.

சைபீரியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு முன் பாவெல் மற்றும் அவனது சகாக்கள் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் புரட்சிகரமான வாதங்கள் பகத்சிங்கும் அவனது சகாக்களும் நீதிமன்றத்தில் வாதிட்டதை நமக்கு நினைவூட்டுகின்றன.
கடவுள் ஏன் நமக்கு ஏற்படும் சித்திரவதைகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறார்.. செயல்படாத தன்மையுடன் இருக்கிறார் என்று ஆதங்கப்படும் பாமர மக்கள் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடினால்தான் தங்கள் துயரங்களிலிருந்து விடுபட முடியும் என்று அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள் .உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளிகள் அனைவரும் நாடு.. இனம்.. மொழி வித்தியாசங்களை மறந்து ஒன்றுபட்டு போராடினால்தான் விடுதலை பெற முடியும் என்பதை பல்வேறு விதமாக ..பல்வேறு சம்பவங்கள் மூலம்.. நாவல் முழுதும் மீண்டும் மீண்டும்..
அழுத்தம் திருத்தமாக முன் வைக்கிறார் ஆசிரியர் மாக்சிம்கார்க்கி.

மக்களை கூட்டம் கூட்டமாக சந்தித்து மேடைப் பிரச்சாரம் செய்வதை விட தனித்தனியாக சந்தித்து பேசி அவர்களின் ஐயங்களை புரிய வைத்து அவருடைய தனிப்பட்ட கருத்துக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்..

தடை செய்யப்பட்ட புத்தகங்களை. தலைமறைவாக வாசித்து விட்டு ..அதன் மீது தங்களுக்குள் விவாதமும் நடத்திவிட்டு ,புரிதல் ஏற்பட்டு ..அதை மக்களை திரட்டுவதற்காக பயன்படுத்தும் இயக்கமே வாசிப்பு இயக்கம்..

விரிவான ..ஆழமான ..காட்சி வர்ணனைகள்.. ஓரளவே எழுத படிக்க தெரிந்த தாய் ,நூல்களை நேரடியாக வாசிக்க எழுத ..படிக்க கற்றுக்கொள்ள முனைகிறாள்.மொழிபெயர்க்கப்பட்ட நூலாக தெரியாத வகையில் நல்ல தமிழில் வடித்திருக்கிறார் தொமுசி அவர்கள்..மக்கள் படும் துயரங்களை மட்டுமே வர்ணிக்காமல்… துயரத்துக்கான காரணங்களை கண்டுபிடிப்பதுதான் அடிப்படைத் தேவை என்கிறது நாவல்.

அரசை எதிர்த்து போராடுபவர்களை.. அரசே விசாரித்து ..தீர்ப்பு எழுதினால் நீதி கிடைக்குமா? பொன்னியின் செல்வன்.. வால்கா முதல் கங்கை வரை ..குற்றமும் தண்டனையும் ..வேள்பாரி என நாம் மீண்டும் மீண்டும் வாசிப்பது போன்ற ஆவலை தாய் நாவலும் ஏற்படுத்துகிறது..எப்போது போலீஸ் வந்து வீட்டை சோதனை போடுமோ ..யாரை பிடித்து செல்வார்களோ.. யாரை சிறையில் அடைப்பார்களோ என்ற சூழலிலேயே கதாபாத்திரங்கள் நாவல் முழுதும் பயணிக்கின்றன.

முதலில் நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பின் படித்ததை தொழிலாளர்களிடம் சொல்ல வேண்டும் .தொழிலாளி வர்க்கம் ஏன் இவ்வளவு கஷ்டங்களை சந்திக்கிறது என்பதை நாம் கற்றுத் தர வேண்டும்..இது கஷ்டமானதுதான்.. ஆனால்
தவிர்க்க முடியாத நிலை.

நம் துயரங்களை சொல்வதற்கு கடவுளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். கடவுளை எதிர்த்து போராடுகிறோம் என்று நமது உண்மையான எதிரிகளை நாம் விட்டுவிடக்கூடாது..மனிதனின் தலையில் வேண்டாத விஷயங்களை எல்லாம் திணித்து வைத்திருக்கிறார்கள். நாம் புத்தகங்களை அவர்களிடம் கொடுத்து விட்டால் அவர்களே தாங்களாக விடை காண்பார்கள்.

ஒவ்வொருவரின் நன்மைக்காகவும் நாம் ஒன்று சேர வேண்டும்.முன்பெல்லாம் திருடர்களைத்தான் சிறையில் பிடித்து போடுவார்கள் .இப்போது நியாயத்தை பேசினாலே சிறைப்படுத்துகிறார்கள்.மன்னிப்பு கேட்டு நம் மானத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது.புத்தகங்களை சீமான்கள்தான் அச்சடித்து வெளியிடுகிறார்கள் .ஆனால் அவையே அவர்களுக்கு எதிராக திரும்பி விடுகின்றன.

நகரங்களை விட்டு கிராமங்களுக்கு செல்வோம்..இயக்கத்துக்கு ஆட்களை மிகத் தெளிவாக தெரிவு செய்ய வேண்டும்.’இது என்னுடையது ‘என்று எவன் முதன்முதலாக சொன்னானோ அவன்தான் குறை கூறப்பட வேண்டியவன்.பூர்ஷ்வா என்பவன், ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்து சுரண்டி அவன் இரத்தத்தை உறிஞ்சுபவன்.

தன் உடமையை பாதுகாத்துக் கொள்ளவே நேரடி கொலையில் ஈடுபடுகிறான் முதலாளி..பைபிளை பிரச்சாரம் செய்தும்கூட தொழிலாளர்களை ஒன்று திரட்டி விட முடியும். அரசிடம் இருந்து தப்பிக்கலாம்.உண்பதற்கு உணவளிக்க முடியாவிட்டாலும் சிந்திக்க வைப்போம்.லட்சோப லட்சம் மக்களின் புனர்வாழ்விற்காக சில ஆயிரம் பேர் தங்கள் உயிரை தியாகம் செய்யலாம்.விவசாயி நிலத்தை விட்டு விட்டு எங்கும் வரமாட்டான் .ஆனால் தொழிலாளி எங்கும் நகர்ந்து வேறு இடத்திற்கு செல்வான்.

கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால் கிறிஸ்துவே இருந்திருக்க மாட்டார். அப்படித்தான் ஒரு கொள்கைக்காக நாமும் சாகத் தயாராக இருக்க வேண்டும்.ராணுவ வீரனும் நம்மை போல் மனிதன்தான்.. அவனையும் மாற்றலாம்.வேலை நிறுத்த போராட்டம் என்பதும் ஒரு இயக்கத்திற்கு மிக முக்கியமான ஆயுதம்..நாம் ஓய்வெடுக்க விரும்பினாலும் நம் சிந்தனை நம்மை ஓய்வெடுக்க விடாது.

தனது மதிப்பினை ..சக்தியினை ..ஒருவன் உணர்ந்து விட்டால் அவன் தானே வளர்ந்து விடுவான்..பிள்ளையை சிறை பிடித்தார்கள்.. தாய் வந்துவிட்டாள்..அந்த ஸ்தானத்திற்கு..இந்த நாவலில்..நாய்கள் கூட ஒரு காலத்தில் ஓநாய்களாகத்தான் இருந்தன.

கடவுளின் பிம்பமாக ..அவனின் அம்சமாக.. படைக்கப்பட்ட மனிதனுக்கே ..மனிதர்கள் கொடுமை செய்கிறார்கள்.. எந்திரத்தை மனிதன் பழுதாக்கினால் அவனுக்கு தண்டனை உண்டு.. ஆனால் ஆலையில் ,பணியின் போது மனிதன் பழுதுபட்டால் அவனே குற்றச்சாட்டுக்கு ஆளாகிறான்..

உலகம் முழுவதையும் தொடர்பு கொள்ளும் சக்தி உழைப்பாளிக்கு மட்டுமே உண்டு..இந்த உலகத்தில் எத்தனை விதமான உயிர்கள் உள்ளன ..வளங்கள் உள்ளன என்பதை நாம் முழுமையாக அறிந்துள்ளோமா?

கடவுளுக்கு எந்த பிரயோஜனமும் தராத பொன்னாலும் செல்வத்தாலும் குவிந்துள்ளன கோவில்கள்… ஆனால் கோயில் வாசலில் பிச்சைக்காரர்கள்!கிறிஸ்து எளிய உடை அணிந்து ஏழைகளின் நண்பராகவே இருந்தார். ஆனால் கோயிலின் உள்ளே அவர் பொன்னாலும் பட்டாலும் அலங்கரிக்கப்பட்டு எளிய மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

மக்களின் செல்வம் ஏழைகள் எல்லோருக்கும் சமமாக பிரித்து தரப்பட வேண்டும் என்றார் இயேசு..தோழனின் சவச்சடங்கில் கூட கலந்து கொள்ள விடாமல் விரட்டியடிக்கிறது ஜார் மன்னனின் போலீஸ்.. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட, தோழனின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றே வேண்டுகிறான்..

பணக்காரனுக்கு சொர்க்கம் கூட பற்றாக்குறை தான்..முஷ்டியினால் உண்மையினை சாகடித்து விட முடியாது..நம்மிடம் இருந்துதான் அவர்கள்… அதாவது ஆட்சியாளர்கள் …பலத்தை பெறுகிறார்கள்..நேர்மை குணமுடையவர்களை எந்த கூட்டத்திலும் அடையாளம் கண்டுபிடித்து விடலாம்..

கடவுளின் சத்தியத்தை மக்களிடம் பரப்புவது கம்யூனிசம்…ஒருமுறை தலையை கொடுத்து விட்டால் கம்யூனிச கொள்கையில் இருந்து மீள முடியாது..படித்தவர்களை விட படிக்காதவர்களே அதிகம் புரிந்து கொள்கிறார்கள்.எப்போது பயப்பட வேண்டும்.. எப்போது தைரியமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து செயல்பட வேண்டும்.

ஒரு மனிதனின் மதிப்பு அவன் செய்யும் வேலையில் இருக்கிறது.இந்த உலகம் முழுவதையுமே நாம் இன்று எதிர்த்துப் போராடி எல்லாவற்றையும் அடக்கி விடலாம். ஆனால் நாளைக்கு மீண்டும் உலகமெங்கும் ஒரு புறத்தில் முதலாளிகளும் இன்னொரு புறத்தில் ஏழைகளும் உற்பத்தியாகி விடுவார்கள். எனவே இது ஒரு தொடர் நிகழ்வுதான்..

தனது சேவகர்கள் யோக்கியவான்களாக இருப்பதை.. அரசுகள் விரும்புவதில்லை..இளம் இதயங்கள் உண்மையை சட்டென பிடித்துக் கொள்கின்றன..என்ன செய்தார்கள் என யோசிப்பதை விட ,ஏன் செய்தார்கள் என ஆராய வேண்டும்..பிறருக்காக உழைக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கை சிரமமாகத்தான் இருக்கிறது.. ஆனால் பூரணமாய் இருக்கிறது.எல்லாருக்கும் எல்லாவற்றையும் தரும் புதிய கடவுளை நாம் உண்டாக்குவோம்!இப்படிப்பட்ட ஏராளமான ..கருத்தாழமிக்க வாதங்களால்..நிரம்பி வழிகிறது “தாய்” நாவல்.சாதாரண மக்களும் வாங்கி படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கோடு மிகத் தரமாக குறைந்த விலையில் இந்நூலை வெளிட்டுள்ள “சீர் வாசகர் வட்டத்திற்கு” நமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இந்த நூலை வாங்கி படிப்பதன் மூலம் தெரிவித்துக் கொள்வோம்…

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here