noolaga aanaikkuzhuvin seyalpaatil maatram thevai - thamizhnadu murpokku ezhuththaalar kalaignargal sangam நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில் மாற்றம் தேவை! -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
noolaga aanaikkuzhuvin seyalpaatil maatram thevai - thamizhnadu murpokku ezhuththaalar kalaignargal sangam நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில் மாற்றம் தேவை! -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில் மாற்றம் தேவை! -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில் மாற்றம் தேவை! -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

பொது நூலகங்களுக்கு 2018-19ஆம் ஆண்டு வெளியான நூல்கள் பதிப்பாளர்களிடமிருந்து நூலகத்துறையால் கொள்முதல் செய்யப்பட்டன. 2020-21,22ஆம் ஆண்டுகளில் வெளியான புதிய நூல்களுக்கு நூலக ஆணை வழங்குவதற்கு மாதிரிப்பிரதிகள் கூட இன்னமும் பெறப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதிக்குள் முந்தைய ஆண்டு வெளியான புத்தகங்களின் மாதிரிப்பிரதிகள் பெறப்படுவது வழக்கம். ஆனால் 2023 ஏப்ரல் நிறைவுற்றுவிட்ட இத்தருணத்தில் கூட கடந்த மூன்றாண்டுகளில் வெளியான புத்தகங்களின் மாதிரிப் பிரதிகள் பெறப்படவில்லை.

பெறப்பட்ட மாதிரிப்பிரதிகள் அனைத்திற்கும் நூலக ஆணை வழங்கப்படுவதில்லை. அதற்கென உருவாக்கப்பட்ட குழுதான் புத்தகங்களை தேர்வு செய்யும். ஆனால் பதிப்பாளர்களால் / எழுத்தாளர்களால் வழங்கப்படும் மாதிரிப் புத்தகங்களில் ஒவ்வொரு தலைப்பிலான புத்தகங்களை கீழ்கண்ட ஏழு நூலகங்களுக்கு அனுப்பிவிட்டு அதற்கான ரசீதுடன் தான் மாதிரிப் புத்தகத்தை சமர்ப்பிக்க முடியும். நூலக ஆணை கிடைப்பது கிடைக்காமல் போவது என்கிற விஷயத்தைக் கடந்து அந்தந்த ஆண்டுகளில் வெளியான புதிய எழுத்தாளர்களின் / பதிப்பாளர்களின் நூல்கள் இந்த ஏழு முக்கியமான நூலகங்களில் வாசிக்கக் கிடைக்கும்.

கன்னிமாரா பொது நூலகம் – சென்னை

ராஜாராம் மோகன் ராய் நூலகம் – கொல்கத்தா

பாராளுமன்ற நூலகம் – டில்லி

தமிழ்நாடு சட்டமன்ற நூலகம் – சென்னை

மும்பை நூலகம்

மதுரை தமிழ்ச்சங்க நூலகம்

பொது நூலகம் – டில்லி

கல்வியாளர்கள், பேராசியர்கள், ஆய்வாளர்கள் மட்டுமின்றி உலகளவில் வாழக்கூடிய தமிழ அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் வருகை தரக்கூடிய நூலகங்கள் இவை. ஆனால் இந்நூலகங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான தமிழ் நூல்கள் இல்லை என்பது அறிவுத்துறைக்கு பெரும் இழுக்கு.

கடந்த ஆட்சியில் 2020ஆம் ஆண்டு நூல் கொள்முதலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்து. ஆனால் இப்போது காகித்தின் விலை இன்னும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது எனவே 2020-2021 மற்றும் 2022 ஆண்டிற்கான நூலக ஆணைக்கு புதிய விலை நிர்ணயம் செய்வதற்கு குழு அமைக்கப்பட வேண்டும்.

சிறார் / இளைஞர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த அவர்களுக்கான நூல்களை வாங்குவதற்கென தனிக் குழு அமைக்கப்பட வேண்டும்.

2006-2011 ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளார்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணியாளார்கள் நலவாரியம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பதிப்புத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும்.

கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூல்கம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூல்கங்கள், நடமாடும் நூலகங்கள், ஊர்ப்புற நூல்கங்கள், பகுதி நேர நூலகங்கள் என தமிழ்நாட்டில் மொத்தம் 4634 (நான்காயிரத்து அறுநூற்றி முப்பத்தி நான்கு) நூலகங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் பொது நூலக இயக்ககம் 600 அல்லது 1000 பிரதிகள் மட்டுமே கொள்வனவு செய்கிறது. 600 பிரதிகள் என்பதுதான் பரவலான கொள்வனவு. எனவே கூடுதல் எண்ணிக்கையில் புத்தகங்கள் வாங்க வேண்டும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *