நூல் அறிமுகம் : "அறிவியல் ஆச்சரியங்கள்" - இரா.இயேசுதாஸ்noolarimugam : ariviyal aachariyangal by era.esudass
நூல் அறிமுகம் : "அறிவியல் ஆச்சரியங்கள்" - இரா.இயேசுதாஸ்noolarimugam : ariviyal aachariyangal by era.esudass

நூல் அறிமுகம் : “அறிவியல் ஆச்சரியங்கள்” – இரா.இயேசுதாஸ்

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மார்ச் வரை தீக்கதிர் நாளிதழில் வண்ணக் கதிர் பகுதியில் இவர் எழுதி வந்த அறிவியல் கதிர் பதிவுகளின் தொகுப்பே இந்த புத்தகமாகும்.

Inshorts, இந்து ஆங்கில நாளிதழ்’ Science and Technology’ மற்றும் சில இதழ்களில் வெளிவந்த ஆங்கில கட்டுரைகளின் தமிழ் மொழியாக்கமே இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஆகும். மதுரை தோழர் இ. எம். ஜோசப், தீக்கதிர் முன்னாள் பொறுப்பாளர் தோழர் குமரேசன் மற்றும் தீக்கதிர்பொறுப்பு ஆசிரியர்
தோழர் எஸ். பி ராஜேந்திரன், எல்.ஐ.சி.தோழர் க.சுவாமிநாதன், மூட்டா ராஜு போன்றோர்களின் வழிகாட்டுதலிலும் பாராட்டுதலின் அடிப்படையிலும் இந்த கட்டுரைகளை எழுதியதாக ஆசிரியர்
திருஇரா.இ ரமணன் தன்னுடைய தொகுப்பாளர் உரையிலே குறிப்பிடுகிறார்.

தற்போதும் தீக்கதிர் வண்ணக் கதிர் பகுதியிலே இவருடைய அறிவியல் தகவல்கள் வாரம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன இரண்டாவது தொகுப்பாக இவை வெளிவரும் என்று நம்புகிறேன்.

மாணவர்கள் …அறிவியல் ஆர்வலர்கள்.. போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கு இந்த நூலிலே இடம்பெற்றுள்ள ஆச்சரியமான ..வித்தியாசமான.. உலகம் முழுவதும் உள்ள அற்புதமான அறிவியல் தகவல்கள் நிச்சயமாக உதவும்.

மற்றவர்களும் அன்றாட அறிவியல் ஆச்சரியங்களை சுவாரசியமாக இந்த நூலின் வழி தெரிந்து கொள்ளலாம்.

விலங்கியல் ..தாவரவியல்.. மருத்துவம்.. வேதியியல் ..இயற்பியல் ..சுற்றுச்சூழல்… புவியியல்.. மனித உடலியல்.. ரொபாட்டிக்ஸ்
விண்வெளியியல்.. கண்டுபிடிப்புகள்.. என 11 தலைப்புகளில் அறிவியல் ஆச்சரியங்களை தொகுத்து இருக்கிறார் ஆசிரியர்இரமணன் அவர்கள்.

சிறிய வகுப்பு தொடங்கி கல்லூரி மாணவர் வரை அனைவருக்கும் போட்டிகளுக்கு பரிசாக இந்த நூலை அளிக்கலாம். பிறந்தநாள் பரிசாக இந்நூலை வழங்கலாம். இந்த நூலை வாசிக்க ஆரம்பிக்கும் ஒரு நபர் இதன் தகவல்களாலேயே கவர்ந்து இழுக்கப்பட்டு கடைசி பக்கம் வரை இழுத்துச் செல்லப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை .இன்னும் படங்களுடன் வெளிவந்திருந்தால் இன்னும் இதற்கான கவர்ச்சி/மதிப்பு அதிகரித்திருக்கும். ஏனெனில் ஒரு புத்தகத்திற்கான விலை என்பது அதன் பக்கங்களுக்கு அல்ல.. அதில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கானது என்றவகையில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள நூற்றுக்கணக்கான புதிய தகவல்களுக்கு ரூபாய் கணக்கில் விலையை மதிப்பிட முடியாது.

எல் ஐ சி பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் மொழிபெயர்ப்பிலும் ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறார்.” ஒரு ஊர்க்குருவியின் கூவலில் உலகக் கவிதைகள்” என்ற மொழிபெயர்ப்பு கவிதை நூலும், “கதை கேளு கதை கேளு” என்கிற கதைகள் குறித்த கட்டுரை நூலும்.. மார்க்ஸ் சில தெறிப்புகள்” என்கிற சிறு ஆவண நூலும் இவர் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் “தளம்”..” காணி நிலம்” ஆகிய இதழ்களில் வந்துள்ளன. மொழிபெயர்ப்பு கவிதைகள் “சொல்வனம்” இணையதளத்திலும் “திசையெட்டும்” இதழ்களிலும் வந்துள்ளன. ஏற்கனவே சொல்லியது போல தீக்கதிர்வண்ணக்கதிர் பகுதியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ( அறிவியல் தகவல் பகுதியில்) இவர்களுடைய கட்டுரைகள் சுவாரசியமாக இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்நூலின் உள்ளடக்கத்தை வாசகர்கள் நேரிலேயே படித்து ரசித்து மகிழ வழிவிட்டு என்னுடைய அறிமுகத்தை நிறைவு செய்கிறேன்.

ஆசிரியர்: இரா.இரமணன்
தமிழ் தென்றல் பதிப்பக வெளியீடு
136 பக்கங்கள்- விலை ரூபாய் 120
( புத்தகத் தேவைக்கு அணுக வேண்டிய அலைபேசி எண் 944 320 48 32-இரா.இரமணன்)
நூலுக்கு முன்னுரை: பேராசிரியர்மூட்டா கே. ராஜு (ஆசிரியர்- புதிய ஆசிரியன் மாத இதழ்)

இரா.இயேசுதாஸ்
மன்னார்குடி அறிவொளி வாசிப்பு இயக்கம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *