இதுவரை சிறைக்கைதிகள் எழுதிய நூல்கள் சிறை அனுபவங்களாய் வெளிவந்ததை
படித்திருக்கிறோம். 1980 முதல் 2020 வரை சிறைக் காவலராக பணிபுரிந்த ஒரு இடது சாரி காவலரின் உண்மையான அனுபவங்களின் தொகுப்பு இந்த நாவல்-சிறுகதை வடிவ கட்டுரைகளின் விறுவிறு நடைத்தொகுப்பு. ஜனவரி 22ல் வெளிவந்த நூல் இவ்வளவு கால தாமதமாக கைக்கு கிடைத்தது வருத்தமெனினும்.இப்போதாவது கவனத்துக்கு வந்தது மகிழ்ச்சி!
சிறைக் கைதிகளை கொடுமைப்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரியே…சிறைக்கைதியாவது…
சிறைக் கைதியாக இருந்தவர்..சில மாதங்களில் சிறைத்துறை அமைச்சராகி அவர் இருந்த சிறைக்கே வந்து பார்வையிடுவது….
நொடிப்பொழுது உணர்ச்சி வசப்பட்டதால்…ஆயுள் தண்டனை….மரணதண்டனை பெறும் மன அவஸ்தை பலரையும் மனநோயாளி ஆக்குவது…
சந்தேகம்….ஜாதிவெறி,…ரவுடியிசம்….வெற்று ஆணவம்….என் பல காரணங்கள் சிறைக்கு காரணமாக இருக்கலாம்..ஆனால் அரசியல் காரணங்களுக்காக…மக்கள் விடுதலைக்காக சிறைப்படுவோரும் இருக்கவே செய்கிறார்கள்.
ஒவ்வொரு கைதிக்கும் வித்தியாசமான பட்டப்பெயர்கள் இருப்பது போல் ..அதிகாரிகளுக்கும்…பட்டப்பெயர்களுக்குப்பின் சுவாரசியமான கதையாக நிஜம்!
“சீவலப்பேரி பாண்டி”என குற்றவாளியை ஹீரோவாக்கி கதையெழுதிய எழுத்தாளர் சௌபா அவர்களே பிற்காலத்தில் சிறைத்தண்டனை பெற்று நோய்வந்து இறத்தல்…இவர் 1983ல் திருவாரூரில் நடைபெற்ற DYFI மாநாட்டில் கலந்து கொண்டதையும் பின் பாதை மாறியதையும் மதுரை நம்பியுடன் பகிர்ந்ததை நூல் கூறுகிறது
காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பண்ணண் அவர்களுக்கு காவல் கோட்டம் நாவலை அன்பளிப்பாக தரும் சிறைக்காவலர்-ஆசிரியர் மதுரை நம்பி எம்.ஜி.ஆரின் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் கியூப புரட்சி நாயகர்கள் சேகுவாரா -காஸ்ட்ரோவின் ஆகியோரின் கதை என படம்-புரட்சி காலத்தை ஒப்பிட்டுக்கூறுவது பொருத்தமாகவே உள்ளது.
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள்,மதத்தீவிரவாதிகளென ஏராளமாக சிறையில் உள்ளோர் பற்றி கூறும் நம்பி,அவர்கள் சிறையில் இருக்கும்போது மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் நேர்மையாகவே பதிவிட்டுள்ளார். நண்பர்கள் யார், எதிரிகள் யார் என தெளிவான புரிதலை ஒரு இடதுசாரியாகவே சரியான புரிதலை இஸ்லாமிய அன்பர்களுக்கு ஏற்படுத்த “வகுப்பே” எடுக்கிறார்.
சிறைக்குள்…. கைதிகளின் பின்னணிக்கு ஏற்ப எப்படி சகல வசதிகளையும் அவர்கள் பெறுகிறார்கள் என நூல் விவரிப்பதுடன்…எப்படி சிறைக் காவலர்கள் ஒவ்வொரு நாளும் சிறைக்கைதிகளின் கைதிகளாக அவதிப்படுகின்றனர் என ஒரு காவலராக தன்
அனுபவங்களை பகிர்வதும் உண்மையாகவே படுகிறது.
பீடி…சிகரெட்…கஞ்சா…உணவு….செல்….என ஏராளம்… பார்வையிட வருவோரிடம் கைதிகளும்…காவலர்களும்..பெறுவதில் எல்லாம் அடக்கம்,. பதிவிட முடியாதவையும் அடக்கம்(ஸ்ட்ரா வழி……க்குள்உள்ள பாக்கெட் வழி மதுரசம்/ ஜோடி எனில் முத்த ரசமும்)
அதே போல் பரோலில் சென்று வருவதும்.. தப்பிப்பது….என்கௌண்டர்…
சிறைக்கு காற்றாடி…..தூய கழிவறை… குடிநீர்….அசைவ உணவு…என ஒவ்வொரு வசதி அடிப்படை உரிமை ஆக வர கம்யூனிஸ்டுகள் பங்கு… கலைஞரின் பங்கு …உள்ளபடி பதிவாகி உள்ளது.
தனி செல்கள்… பாதுகாப்பு செல்கள்.,. பாதுகாப்பு ஏற்பாடுகள்…. இவற்றையும் தாண்டி கைதிகள் நிகழ்த்தும் தனிமனித சாகசங்கள் அந்த நேரத்தில் வெற்றி பெறுகிறது.
பிக்பாக்கெட் குற்றவாளிக்கு மனிதாபிமானம் ஏற்பட்ட பின் கோயில் உண்டியல்களை மட்டும் உடைப்பது…
சிறையில் நடைபெறும் கலை விழாக்களில் மாறுவேடப்போட்டிகளில் தொடர்ந்து பரிசு பெறும் எகசான்…எப்படி அந்தக் கலை மூலம் பரோலில் தப்பிக்கிறான்…பின் எப்படி வேறு பெயரில் கைதியாக வருகிறான் என்பதும்…பழைய எகசானை போலீஸ் தேடுவதும் உண்மையிலே நகைச்சுவை சவால்!
தனக்கு நியாயம் வழங்காத தெய்வங்கள் மீது ——த்தால் அடித்து கோபத்தை தீர்த்துக் கொள்ளும் கைதியொருவன்.,உண்மையிலே விடுதலை கிடைக்கும் போது…”அடி உதவுவது போல் .,.”என்ற பழமொழி கூறுவதும் எதார்த்தமான நகைச்சுவை!.
இப்படி ஏராளமான நிகழ்வுகள் விறுவிறுப்பாக…. நகைச்சுவையாக.,..ஒரு தேர்ந்த எழுத்தாளராக….பரிணமிக்கிறார்…..மதுரை நம்பி..
போலீஸ் தொழிலாளிக்கு எட்டு மணிநேர வேலை உரிமை கேட்டு இயக்கம் நடத்தியதற்காக இருமுறை தற்காலிகப் பணி நீக்க தண்டனை பெற்றாலும் இவரது பணி நேர்மை காரணமாக தனிப்பட்ட அதிகாரிகள் ஆதரவு இருந்ததையும் நூல் பதிவு
செய்கிறது.
ஆர்டர்லி முறை….. சிறைத்துறை காவலர்க்கும்,பிற காவல்துறை காவலர்க்கும் இடையேயான ego போட்டி…விவரிக்கப்படுகிறது.
கள்ளநோட்டு expert குருமூர்த்தி அதே திறமையை பயன்படுத்தி தன்னுடன் கைதிகளாக இருந்த 160பேரை விடுதலை செய்தது…இப்படியும் முடியுமா என நம்மை அசர வைக்கிறது….ஆனால் நடந்திருக்கிறது?!…
மணல்மேடு சங்கருக்கு கீழவெண்மணி….பி.சீனிவாராவ்….மரக்கால் நாவல் என கொடுத்து மனம்திருந்தி புலம்ப வைப்பதும் நிஜத்தில் நடக்கிறது.
ஆட்டோ சங்கர் சிறைக்குள்ளும் வந்து நடத்தும் சாகசங்கள் ….திருநங்கைகள் கைதிகளாக வரல்…. ஓரினச்சேர்க்கை பிரச்னைகள்..பட்டப்படிப்புகள்…மற்றும் நூல்கள் எழுதுதல்.,
என்று…..நிறைந்துள்ளது நூல் முழுவதும்….
காலம் கடந்த அறிமுகம் எனினும்…ஒரு இடதுசாரி சிறைக் காவலர் மதுரை நம்பி நூல் ஓர் அரசியல் நூலாகவே வெற்றி பெற்றுள்ளது…. ஆனால் இடது… அரசியல்…என்று..திணிக்காமல் எதார்த்தமான முறையில் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் வெற்றி!
“சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” ஒரு சிறைக் காவலரின் அனுபவ பதிவுகள்
ஆசிரியர்:மதுரை நம்பி 312 பக்கங்கள்..ரூ330/-. 31 அத்தியாயங்கள்
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ். ஜனவரி 2022 முதல் பதிப்பு
நூல் முன்னுரை: தோழர்கள் எஸ்.ஏ.பெருமாள் & ச.தமிழ்ச்செல்வன்.
….. நூல் அறிமுகம் & விமர்சனம்:இரா.இயேசுதாஸ்..மன்னார்குடி


சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” நூல் பற்றிய உரை பயனுள்ளதாக உள்ளது. புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் எனும் ஆவலை தூண்டுகிறது. நன்று.
நான் எவ்வாறு இந்த நூலை பெறுவது.