Nooyilirunthu Viduthalai நோயிலிருந்து விடுதலை

நோய்க்கு அஞ்சேல்

”சுவர் இரு ந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும்.” ஆரோக்கியமான உடலிலிருந்து தான் ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும் என்பதை வாழ்ந்துக் காட்டி நிரூபித்தனர் நம் மூதாதயர். அதன் பொருட்டே உடலையும் மனதையும் நோய்மை பீடிக்காதிருக்கும் வாழ்வியல் முறைகளை இயற்கையிடமிருந்தே கைப்பற்றினர். அதற்கான தனியாக எந்த வித மெனக்கிடலையும் நம் முன்னோர் தேடிச்செல்லவில்லை தன்னியல்பில் உடலையும் மனதையும் நுட்பமாக அறிந்திருந்தனர். அவ்வளவே..‌ வாழ்க்கையையும் சரி ஆரோக்கியத்தையும் சரி அதன் போக்கிலேயே ஆளவிட்டனர். அதன் பொருட்டே உடல் நலனில் குணமாகுதல் என்கிற பிரச்சாரம் தேவைப்பட்டதில்லை.. எங்கேயும் பிரகடனப்படுத்தியதுமில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை..‌

ஆனால் இன்றைய நிலை அப்படியே தலைக்கீழாகப் புரட்டிப்போட்டு விட்டது. அகத்தை கவனிக்கத் தவறிவிட்டோம் புறத்தில் நமது தொந்தரவுகளுக்கான காரணங்களைத் தேடுகிறோம்.. விளைவாக உடலில் உண்டாகும் அசாத்தியங்களிலிருந்து விடுபட முடிவதில்லை.அதிலிரு ந்து மீளவும் அறிந்திருக்கவில்லை.உடல் கழிவை வெளியேற்ற உண்டான இ ந்த சாதாரணமான தொ ந்தரவுகளிலிரு ந்து தற்காலிகமாக வெளியேற அவற்றை உள்ளழுத்தி வைக்கும் இராசயன மருந்துகளை உட்கொள்வதும் இயற்கை விதிமீறல்களை தொடர்வதும் உடலின் இயல்பான அறிவுறுத்தலை மறுத்தலிப்பதும் என நமது உடலியலுக்கெதிரான தொடர் நடவடிக்கைகளால் அடுத்தக்கட்டமாக சாதாரணமாக வெளிப்பட்ட தொந்தரவுகள் நோய்களாக மாற்றம் பெற்றும் தீராத வியாதிகளாகத் தங்கி விடுகின்றன. மனிதகுலம் இன்றைய நவீன மருத்துவத்தின் பிடிக்குள் சிக்கி உடல் நலனைத் தொலைத்து வருகின்றது. அரிவியல் வளர்ச்சி என்கிற பெயரில் மனிதஉடல் பற்றிய தவறான அணுகுமுறையின் வழி நடத்தலால் உடல்நலனை இழந்து வருகிறோம்.

மனிதகுலத்தை நோய்ப் பிணியிலிருந்து மீட்கவும் , ஆரோக்கியத்தைச் சீரழிக்கும் இரசாயண மருந்துகளிலிருந்து உடல் ஆரோகியத்தைக் காக்கவும், தர்களை விடுபடச் செய்ய அக்குஹீலர் அ. உமர்பாரூக் அவர்கள் உடலறிவியல் பற்றி மரபு வழி மருத்துவமான அக்குபங்சர் வழிநின்று உடல் நோய் பற்றிய தனது ஆழமான புரிதல்களையும் உலகையே அச்சுறுத்தி வரும் பல வகையான நோய்களிலிருந்து மனிதர்களை இயற்கையான வாழ்வியல் முறைகளின் வழியாக குணமடை ந்து ஆரோகியத்திற்குத் திரும்பும்உத்திகளை தமது எழுத்தின் வழியாகவும் விழிப்புணர்வு உரையாடல்கள் மூலமும் விளங்க வைக்கும் பிரயத்தனங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறார். மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் மருத்துவத்தின் குணமாக்கும் கலையை பற்றியும்,அக்குபங்சர் மருத்துவம் முன்வைக்கும் இயற்கை வாழ்வியல் முறைகளைப் பற்றியும் நூல்கள் எழுதி மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் தீவிர முனைப்பில் ஒரு மரபு வழி மருத்துவராகத் தம்மை ஈடுபடுத்தி வருகிறார். அவற்றின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட ” நோயிலிரு ந்து விடுதலை” என்னும் இ ந் நூல் உலகையே அச்சுறுத்தி வரும் நோய்கள் பற்றியும், தொற்றுகள் என்று சித்தரித்து மக்களை ஏமாற்றி வரும் நவீன மருத்துவத்தின் பார்வையையும், நோய்த் தொ ந்தரவுகளுக்கான காரணிகளாகச் சொல்லப்படும் கிருமிகளைப் பற்றிய உண்மை விவரங்களை ஆய்வுப் பூர்வமாக அலசிக் காட்டியும், நோயுற்ற காலங்களில் இயற்கை வழிமுறைகளைக் கடைபிடித்து குணமடையும் நெறிகளை விளக்கியும், நோய்கள் என்பவை வெறும் கழிவுகளே என்பதை ஒருங்கிணை ந்த உடல் இயற்பியலின் வழியாக எடுத்துக் கூறுகிறது.

மனிதகுலத்தின்பிறப்பும் பரிணாமமும் படைபக்கத்தின் இரகசியம். குழந்தை கண்ணயர்ந்து உறங்கும் போது அதன் அருகில் இருந்து காவல் புரியும் தாயைப் போல இயற்கை அன்னையானவள் நாம் உறங்கும்போது நம்முடைய நுண் கருவிகள் செயலற்று ஓய்ந்து விடாதவாறு நம் உள்ளேயிருக்கும் சக்தியைக் கொண்டு இயக்கங்கள் தங்கு தடையின்றி செயலாற்ற உதவி புரிகிறாள் உடன் இருந்தும் பாதுகாக்கிறாள். இது படைப்பூக்கத்தின் அம்சம். உடல் இயற்கையை உணர் ந்து அதன் போக்கில் தன்னியல்பாக செயலாற்ற ஒத்துழைத்தால் உள்ளுக்குள் இயங்கும் உறுப்புகளும் அவைகளுக்கு உறுதுணையாக செயலாற்றும் வெளிப்புற உறுப்புகளும் தங் டடையின்றி இயங்கிக் கொண்டேயிருக்கும்.

“உங்களுக்கு செல்போனை தெரியும்தானே..”என்கிற வரியைத் தலையகமாகக் கொண்ட தொகுப்பின் முதல் அத்தியாயத்தை வாசித்த போது நோய் பற்றிய மரபு வழிப் பார்வையை பேசும் நூலில் செல்போனை ஒப்பிட்டு உடலறிவியலைப் புரிய வைக்க நவீன கருவிகள் வழியாக வேறுபடுத்தியும், அறிவியல்பூர்வமான கண்ணோட்டத்தில் அணுகி உடலின் அடிப்படைப் புரிதலை மேம்படுத்தியுள்ளது விசேஷம்.அறிவியல் வழியாக மனித உடலியற்கையை அணுகும் மருத்துவராகவே எனக்கு இ ந் நூல் வழியாக அறிமுகமாகிறார் ஆசிரியர். இதுவே நோயிலிரு ந்து விடுதலை என்னும் இ ந் நூலை கையிலெக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
ரகரகமான விளம்பரங்களைக் காட்சிப்படுத்தி மக்களின் அறியாமையில் தங்களின் தந்திரங்களைச் சாத்தியப்படுத்தும் அனைத்து இடுக்குகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருவதை அம்பலப்படுத்துகிறது முதற் பகுதி. பொய்களைச் சும ந்து மக்களின் வருமானத்தை விரயப்படுத்தும் விளம்பரங்களே இன்று தெருவேங்கும் கூவி அழைக்கப்படுகிறன.முட்டாளாக்கி நமது பணத்தை சூறையாடும் வழிகளை அறி ந்து வைத்துள்ளனர் கார்பரெட் வியாபார நிறுவனங்கள். நம் உடலைப் பற்றிய முழுமையான தெளிவிரு ந்தால் சந்தையிலும் ஊடகங்களிலும் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் வியாபார உத்திகளின் லாப நோக்கத்தைப் புரிந்துக் கொள்ள முடியும். நம் உடல் நலத்தையும் பொருளாதாரத்தையும் இப்படியான போலிப் பிரசாரங்களில் இழக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நூலின் தொடக்கம் கார்பரேட் அரசியலின் மக்கள் ஆரோக்கியம் மீதான போலி திரைச் சீலையை திற ந்து விடுகிறது.

உடலைப் பொறுத்தவரையில் சராசரி அளவுகோல், வடிவம், முன்னணுமானம் எப்போதும் கிடையாது. பிரபஞ்சத்தின் ஒவ்வோர் உயிரும் அதனதன் படைக்கப்பட்ட நோக்கத்திற்கான பிரத்யேகமான அளவுகளைக் கொண்டே தோன்றியுள்ளான.‌ நவீன அறிவியலின் கற்பிதம் நமக்குள் வேரூன்றி இருப்பதால் உடலை நாம் எப்போதும் கருவியாகவே அணுகுகிறோம். புறத்தில் மட்டுமே நமது பார்வை லயித்திருப்பதால் படைப்பாக்கத்தின் அகம் சார் ந்த உணர்வின் வழியான இயங்கியலும் ஆற்றலும் பராமரிப்பும் நிதமுண்டாகும் புதுபித்தலும் ஆக்கமும் அழித்தலும் நொடியொன்றின் மாற்றங்களும் பரிணாமங்களுக்கும் நமக்குப் புலப்படுவதில்லை. புரி ந்துக் கொள்ளும் மனநிலையும் நமக்கு இருப்பதில்லை.

அடுக்கு அடுக்கான அத்யாயங்கள் அளவுகோலின் அடிப்படையில் மனித உடல் மீது நவீன மருத்துவத்தின் புரிதலற்ற பரி ந்துரைப்பால் மக்கள் பின்பற்றும் தவறான ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகளைப் பற்றி ஆழமாக அலசுகிறது. எதையும் எதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவை காலத்தை நேரத்தை நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் நமது மொத்த வாழ்வும் ஆரோக்கிய சீர்கேட்டை நோக்கிப் பயணித்து வருகிறது.பசி தாகம் போன்ற அக உணர்வுகளை கவனிக்க மற ந்து கடிகார முட்களின் நகர்தலில் உடல் சார் ந்த தேவைகளை பட்டியலிட்டுக் கடைபிடிக்கிறோம்.பசியைப் புற ந்தள்ளி பத்தாம் பொசிலித் தனமான கால அளவீட்டின் அடிப்படையில் உடலை பழக்கப்படுத்தி வருகிறோம். தேவைக்கு மறுத்தலிப்பதும், தேவையே இன்றி திணிப்பதும் என இவ்விரண்டு செயல்களும் உடல் இயற்கைக்கு எதிரானவை என்பதை புரிய வைக்க முயல்வதில்லை அலோபதி மருத்துவர்கள். உடலின் இ ந்த இயற்கை அடிப்படைகளை தீர்க்கமாக எடுத்துக் கூறுகிறது கட்டுரைத் தொகுப்பின் இ ந்த அத்யாயம்.

மரபு வழி மருத்துவங்கள் கோலோச்சம் பெற்றிரு ந்த காலங்களில் இயற்கை வாழ்வியலை நோயளிகளுக்குப் பரி ந்துரைக்க வேண்டிய அவசியம் இரு ந்ததில்லை. அடிப்படையாகவே உடலுழைப்பும் பசியை உணர்ந்து புசித்தும் உடலின் தேவைகளுக்கு மதிப்பளித்தும் தொந்தரவுகளிலிரு ந்து வெளிவ ந்தனர் நமது மூதாதயர். தீவிரமான நோய்கள் ஆரோக்கியத்திற்கு இடைமறிப்பு செய்யும் போதே மருத்துவதை நாடினர். குணமடை ந்தும் வ ந்தனர். ஆங்கில மருத்துவம் உச்சம் பெற்ற இந்த அரை நூற்றாண்டுகளாக பாரம்பரிய மரபு வழி மருத்துவங்களின் சிகிச்சை முறைகள் சரியத் துவங்கி ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையில் வாழ்வியல் பரி ந்துரைப்புகள் கல்லூரியில் பயிற்சிப்பெற்ற மரபு வழி மருத்துவர்கள் நோயளிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். இயற்கை வாழ்வியல் மருத்துவர்களின் மொழியிலிரு ந்து முற்றிலுமாக விலக்கப் பட்டது என்பதுதான் எத்தனைஅபத்தம். ஆனாலும் சில மரு ந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் போன்ற மரபு வழி மருத்துவங்கள் இன்றளவும் இயற்கை வாழ்வியலை கடைபிடித்தும் தொ ந்தரவு என்று வருபவர்களுக்கு பரி ந்துரைத்தும் வருகிறது என்பதே கொஞ்சமுமான மன ஆறுதல். நூலாசிரியரும் ஒரு தலை சிற ந்த மரபு வழி மருத்துவராக இருப்பதால் தனது ஒவ்வொரு மருத்துவ நூலிலும் இயற்கை வாழ்வியலை அழுத்தமாக அறிவுறுத்தாமல், அந் ந்த மருத்துவ நூலிற்கேயான பிரத்யேகமான தளத்தை விளக்க முற்படுவதில்லை. இந்த வரிசையில் இ ந்தத் தொகுப்பும் நோய் பற்றி அலசும் முன் இயற்கை வாழ்வியலின் அவசியத்தை எடுத்துக்கூறி பின் கட்டுரைத் தொகுப்பின் வடிவத்திற்கு நகர்கிறது.

குறிப்பிட்ட எண்களை நிர்ணயம் செய்துக் கொண்டு அதன் வழியாக உடலின் இயங்கியலை பரிசோதிக்கிறது இன்றைய நவீன மருத்துவம்.. விளைவு வியாபாரச் சந்தையின் மூலதனமாக மனித ஆரோக்கியம் விலைப்பேசப்படுகிறது என அடுத்த அத்யாயங்கள் மனித உடலை இயந்திரங்களாகப் பார்க்கும் கார்பரேட் நிறுவனங்களின் அத்துமீறல்களை அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கின்றன.

உடல் தனக்கு ஏற்படுத்தும் எதிர்பாராத அசௌகரியங்களைத்தானே சரி செய்து கொள்ளும் இயல்பான தன்மைக் கொண்டது என்பதை இயற்கையின் அடிப்படையில் உடலில் ஏற்படும் திடீர் காயங்கள் இயற்கை விதிமீறல்களால் உண்டாகும் தொ ந்தரவுகளை உடலின் பராமரிப்புப் பணியும் சீர்படுத்தும் இயக்கமும் ஒருங்கிணை ந்து செயல்பட்டு உடலை மீண்டும் இயல்பிற்குக்கொண்டு வரும் உடல் இயல்பியலை பல உதாரணங்களை எடுத்துக் காட்டி விளக்குகின்றது கட்டுரைப் பகுதிகள்.

உடலில் உண்டாகும் காயங்களை உடலின் பராமரிப்பு சக்தி துரிதமாக செயல்பட்டு சரி செய்யும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளாக க்ளாடிங் டைம் , பிளீடிங் டைம் போன்ற குணமாக்கும் செயல்நிலைகள் பற்றி அறிவியல்ரீதியாக விளக்குகிறது அத்யாயம்.

உடலின் குணமாக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பது பராமரிப்புப் பணி. தொய்வின்றி முறையாக செயல்பட உடலுக்கு முழு ஓய்வு வழங்குவது அவசியம். பலவீனமாகக் களைத்துப் போயிருக்கும் ஒருவருக்கு உடல் முழுவதிலும் உண்டாகிய அயர்ச்சியைப் போக்க நிச்சயம் ஓய்வு வழங்கப்பட வேண்டும். இன்றைய அவசர அவதிகளின் இயந்திர வாழ்வில் உடலின் பராமரிப்பு பணியின் முக்கிய முதன்மைப் பணியாக உடலில் உண்டான கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துவது. உடலின் சுத்திகரிப்பு வேலை நடைப்பெறும் போது ஏற்படும் தொந்தரவுகளை நோயாகவே கருதுகிறோம். உடலில் தோன்றும் சாதாரண மாறுபாட்டையும் பெரிதாகப்பேசி அவற்றை எதிர்கொள்ளும், தாங்கும் திராணியற்று இரசாயனங்களைக் கொண்டு உள்ளமுக்கி விட்டு பொருளாதாரத்தின் பின் ஓடுகிறோம்.தேவையின் பொருட்டு உடலால் அறிவிக்கப்படும் ஓய்வை புறக்கணிக்க இராசயனங்களின் உதவியை நாடி ஆரோக்கியத்தைக் குலைக்கிறோம்.

உடல் என்னும் ஒப்பற்ற மருத்துவர் தன்னைத் தானே சரி செய்துக் கொள்ளும் அற்புத திராணி பெற்றவர். உடல்மருத்துவரின் பராமரிப்பு இயக்கத்தின் ஒட்டுமொத்தப் பணிகளை நமது மருத்து ஆசிரியர் நான்காகப் பிரித்து எளிமையாக்கியுள்ளார்.
* உருவாக்குதல்
*நீக்குதல்
*குணமாக்குதல்
* அறிவித்தல்
தனக்குத் தேவையான சத்துகள் அனைத்தையும் உள்ளுறுப்புகள் உட்பட தானே உருவாக்கிக் கொள்ளவும் அ ந்த உறுப்புகளுக்குத் தேவையானவற்றையும் தானே உருவக்கிக் கொள்ளும் திறன் பெற்றது மனித உடல். உடலின் பராமரிப்பு இயக்கத்தில் உருவாக்கும் பணி முதன்மையானதாகும்.
நமது வாழ்வியல் முறையின் தவறுகளும் உடலிற்கு ஊறு விளைவிக்கும் இரசாயன மருந்துகளை உட்கொள்ளலும் உடலிற்கு ஒவ்வாத அன்னியப் பொருட்களின் ஊடுருவலும் உடலில் உருவாகும் கழிவுகளை உடல் தனது அதியற்புத பராமரிப்புசக்தியின் உதவியோடு வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது. இது உடலின் இரண்டாவது பணியான நீக்குதல் ஆகும். நம் உடலில் எப்போதும் பலவிதமான கழிவுகள் உருவாகிக்கொண்டே இருக்கும். அதே போல நாம் உண்ணும் உணவுகளை முறையாக செமித்து அதிலிரு ந்து கழிவுகளை நீக்கும் அடுத்த முக்கியமான பணியையும் உடல் நிமிடமொன்றிலும் செய்துக் கொண்டே இருகிறது.இவ்வாறாக ஒருபுறம் உட்கிரகித்தலும் மறுபுறம் வெளியேற்றலும் ஒரே சீராக நடைப்பெற்று வருகிறது. இதைப் பற்றி மேலும் ஆழமாக புரி ந்துக் கொள்ள வேண்டுமானால் செல்லின் இயக்கத்தைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு முழுஅத்தியாத்தை எடுத்து மனித உடலின் செல்கள் மற்றும் அவற்றின் இயக்கத்தை ஒவ்வோரு படி நிலையாக அறிவியல் பூர்வமாகவும் அதே சமயம் மரபு வழி மருத்துவங்களின் ssஅடிப்படை அணுகுமுறையின் பார்வையில் பதிவிடப்பட்ட விளக்கம் உடலியக்கம் பற்றி ஆழமாக அறிய உதவுகிறது..

செல் பற்றிய விரிவாகஎடுத்துரைக்கும் ஆசிரியர் உடல் செல்லிற்குள் தேங்கியுள்ள கழிவுகளை உடலின் பராமரிப்பு சக்தி அதற்குள் ஊடுருவி எதிர்த்துப் போரிட்டு அழிப்பதையும், லைசோஸோம் எனும் தற்கொலைப்படையை முதன்முதலில் உருவாக்கியது மனித உடல் என்பதையும், இயற்கை விதிமீறல்களின் தொடர் செயல்களால் ஏற்படும் விளைவுகளிலிரு ந்துக் மீண்டும் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் எளிமையாகப் புரி ந்துக் கொள்ளும் வகையில் விளக்குகிறது நூல்.

நம் உடல் என்னும் அக மருத்துவர் தனக்கு ஏற்படும் தொந்தரவுகளை இயல்பற்ற சம நிலைக்குலைவுகளை பராமரிப்பு சக்தி என்கின்ற பேராற்றலைக் கொண்டு சரி செய்கிறார். தன்னியல்பிற்குத் திருப்புகிறார். காயம் ஏற்படும் போது உண்டாகும் வலி, தேங்கிய கழிவுகளை வெளியேற்ற உடலால் ஏற்படுத்தப்படும் ஒவ்வாமை, எரிச்சல் எனஅன்றாடஇயல்பிலிருந்து வெளிப்படும் அனைத்து மாறுபாடுகளும் பராமரிப்புசக்தி என்னும் மருத்துவரின் குணமாக்கும் பணிகள் என்பதை பல உதாரணங்கள் கொண்டு விளக்குகிறது நூல்.

இறுதியாக உடல் தனது தேவையை உணர்வு அறிவிப்புகள் மூலம் எடுத்துரைக்கிறது என்கிறது பக்கங்கள். பராமரிப்புப் பணிகளின் நான்காவது பேரியக்கமான உடலின் அறிவிப்புகள் என்பவை உடலின் மொழிகள். நாம் பற்பல மொழிகள் கற்றுத் தேர்ந்து பாண்டித்தியம் பெற்றுள்ளோம். ஆனால் உடலை பராமரிக்கும் ஆற்றல் சக்தியைப் பேணிக்காக்கவும் பெருக்கவும் உருவாக்குதல் நீக்குதல் குணமாக்குதல் என்கிற பராமரிப்புப் பணிகளின் அடி நாதமாக உடலின் அறிவித்தல் பணி முக்கியப் பங்கு வகிக்கிறது. வாழ்வின் அடிப்படைகளான உடலின் மொழிகளை உணர் ந்து செயல்பட்டால் மீதமுள்ள மூன்று பணிகளும் தத்தம் பணிகளைத் தடையின்றி செய்யும் என்பதையே ஆசிரியர் ஒரு பத்து பக்கங்கள் கொண்டு விளக்கியுள்ளார்.

உடலின் அறிவிப்புகளான பசி தாகம் தூக்கம் ஓய்வு போன்ற உடல் உணர்த்தும் நான்கு அறிகுறிகளை உணராது போவதே நோய்க்குறிகளுக்கான காரணிகள் என்கிற உடல் உணர்த்தும் மொழிகள், ஒவ்வொரு அறிவிப்பின் அவசியம், அதற்குப் பின்பான உடலறிவியல்,இ ந்த நான்கு முக்கிய உடல் உணர்வுகளை நெறிபடுத்தும் வழிகள், இவற்றின் அவசியம் என நூலின் அனேக பக்கங்கள் உடல் நலனை பேணிக் காக்கும் பேரியக்கங்களைப் பற்றி அழுத்தமாகப் பேசுகின்றன.
உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மிக முக்கிய அறிவிக்குப்புகளான பசியையும் தூக்கத்தையும் பற்றி இரண்டிற்கும் மேலான அத்தியாயங்களைப் கைபற்றியுள்ளார் ஆசிரியர். பசி என்கிற உணர்வில் எதை, எப்போது, எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதின் அவசியத்தை உடலியற்கை வழி நின்று ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளார். அதே போல உறக்கம் பற்றிய மக்களின் தவறான புரிதலை முறையற்ற பழக்க வழக்கங்களை எடுத்துக் கூறி விழிபுணர்வை ஏற்படுத்தியுள்ளார். போலவே தாகத்தைப் பற்றிய ஆங்கில மருத்துவ அறிவியலின் தவறான பரிந்துரைப்புகள், ஓய்வை முறியடிக்கும் தவறான மருத்துவ அணுகுமுறைகள், மரு ந்துகளை வழங்கி உடலின் இயக்கத்திற்கு இடையூறு செய்வதும், ஓய்வின் அவசியத்தை எடுத்துக் கூறாமல் உடலுக்கு எதிராக செயல்பட அறிவுறுத்துவதும் போன்ற ஆங்கிலமருத்துவத்தின் அறியாமையை அப்பட்டமாக வெளிபடுத்துகிறது நூல். ஒவ்வொரு உடல் அறிவிப்புகளையும் தெளிவான பார்வையில் அணுகச் செய்கிறது பக்கங்கள்.

கூடுதலாக இரசாயன மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பின்விளைவுகளைப் பற்றிய ஆய்வுகளின் ஒன்றாக “டாக்டர் கேரி நல்” தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றை பதிவிட்டுள்ளது அத்தியாயம். மருத்துவமனையில் நடக்கும் இறப்பு பற்றிய ஆராய்ச்சிகளின் அறிக்கையொன்றில் ” சத்து இரசாயனங்களின் தவறான பயன்பாட்டால் மரணம் அடைந்தவர்கள்” என்கிற தலைப்பு மக்களின் ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமானபதிவு. சத்துகள் என்கிற பெயரில் தவறான மருந்துகளைப் பரிந்துரைப்பதால் ஏற்பட்ட மரணங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த அறிக்கை.
தொடரும் சத்துகள் பற்றிய ஆய்வில் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி டாக்டர் லூயி கேர்வான் அவர்களின் ஆய்வுகளைப் பதிவிடுகிறது நூல். டாக்டர் லூயி கேரவன் அவர்களின் ஆய்வறிக்கையில் மாடும் கோழியும் தங்கள் உணவான மெக்னீசியத்திலிருந்தும் மைக்காவிலிருந்தும் தேவையான கால்சியத்தை உருவாக்கிக் கொள்கின்றன.அது போல நமக்குப் பிடித்த உணவை பசிக்கும் போது சாப்பிட்டால் உடலின் தேவைகளை உடலே உருவாக்கிக் கொள்ளும் என்கிற உடலியலை புரிந்துக் கொள்ளாமல் சத்துகுறைபாட்டை பூர்த்திச் செய்ய சப்ளிமெண்டரியாக இரசாயன மருந்துகளைப் பரிந்துரைக்கும் ஆங்கில மருத்துவத்தின் அறியாமையை ஆவணங்களுடன் அம்பலப்படுத்துகிறது அத்யாயங்கள்.

நோயிலிருந்து விடுபடுவதற்கான இயற்கை சார் வழிமுறைகள் அனைத்தையும் நூலாசிரியர் தமது எளிமையான மொழியில் பாமரமக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் புரிய வைத்துள்ளது உடலின் இயக்கங்கள் என்பவை இரசசியங்களோ மருத்துவர் அல்லாத பிறரும் அறி ந்துக் கொள்ளக் கூடாத மறைவு செயல்பாடுகளோ அல்ல, பிரபஞ்சத்தில் பிறக்கும் அனைத்து உயிர்களும் உடலைப் பற்றிய புரிதல் இருப்பது அவசியம். பிற ஜீவராசிகள் அனைத்தும் இயற்கைக்குப் புறம்பாக ஒருபோதும் செயல்படுவதில்லை. இயற்கையின் விதிக்கப்பட்ட கட்டிற்குள் ஒழுங்கமைவோடு இயங்கின்றன.மனிதன் மட்டுமே இயற்கை விதிமீறல் ஒவ்வொன்றிலும் மு ந்துகிறான். கொஞ்சமும் கலக்கமின்றி மீறுகிறான். வாழ்வியல் முறையிலிரு ந்தும் தயக்கமின்றித் தவறுகிறான்.

மருத்துவம் வியாபார மயமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் நேர்மையை மருத்துவத்தில் தேடுவது சாத்தியமற்ற ஒன்றாகிப் போனது. ஆக நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு மற ந்துப் போன நமது மூதாதயர்கள் கற்றுத் த ந்த இயற்கை வாழ்விலை மீட்டுருவாக்கம் செய்வது இன்றைய பேரிடர் காலங்களின் அவசிமாகிறது. காலத்தின் இந்தத் தேவையை எழுத்தின் வழியாக மிகச் சரியாகக் கையாண்டுள்ளார் உமர் பாரூக். நோயிலிரு ந்து விடுபட மிக எளிமையான வாழ்வியல் முறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஆரோகியத்திற்கான பாதையை திற ந்துக் காட்டியுள்ளார். மரபு வழி முன்னோர்கள் கடைபிடித்து வ ந்த வாழ்வியல் முறைகளைப் பின்பற்றத் துவங்கும் போது சின்ன சின்ன தொந்தரவுகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். உடல் தன்னியல்பிற்குத் திரும்புவதையும் உணர முடியும். அனைத்திலும் இரசாயனங்கள் பெருகி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் காற்று மாசு, நீர் மாசு, கிருமிகள், தொற்றுகள், நீண்ட கால நோய்கள் என நிரல்படும் ஆரோக்கியத்திற்கு எதிரான சூழலில் அச்சப்படாமல் வாழும் வழியை இந் நூல் நமக்கு நிறுவுகிறது என்றே கூறலாம். இயற்கை வாழ்வியலை கடைப்பிடித்து நம் முன்னோர் நலமாக நூறு ஆண்டுகள் வாழ் ந்த ஆரோக்கிய நல்வாழ்வை நோக்கிப் பயணப்படலாம்.

                 நூலின் தகவல்கள் 

நூல் : “நோயிலிருந்து விடுதலை”

நூலாசிரியர் : எழுத்தாளர் அ. உமர் பாரூக்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
பக்கம் : 88
விலை : ரூ.120
                   எழுதியவர்
 
     து.பா.பரமேஸ்வரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

One thought on “அ. உமர் பாரூக்கின் “நோயிலிரு ந்து விடுதலை””
  1. ஆங்கிலமருத்துவத்தைக் கொண்டு மக்களின் ஆரோக்கியத்தில் அரசியல் நிகழ்த்தி வரும் மத்திய ஆளுங்கட்சியின் சதித்திட்டத்தை முறியடித்து உடல் குறித்த இயற்கையின் இலக்கணத்தை மக்களுக்குக் கடத்த வேண்டும் புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலும், விழிப்புணர்வு என்பது பெரும்பாலும் எழுத்தும் உரையும் தான் என்கிற இலக்கிய அறத்தின் வழி நின்று தனது எழுத்து வழியாகவும் கருத்தாடல்கள் உரைகள் வழியாகவும் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கி வருகிறார் அக்குஹீலர் உமர் பாரூக் அவர்கள். அவரது நோக்கம் வெகுஜன மக்களைச் சென்றடைய வேண்டும் என்கிற எனது விருப்பத்தின் முயற்சியாக அவரது மருத்துவ நூல்கள் குறித்த விமர்சனக்கட்டுரை எழுதி வருகிறேன். மாற்று மருத்துவ நூல்களை பிரசுரிக்கவே யோசிக்கும் பதிப்பகங்கள் மத்தியில் மாற்று மருத்துவம் உரைக்கும் உடல் பற்றிய உண்மைகளை ஒருவர் வெளிப்படுத்துகிறார் என்றால் சில பத்திரிகைகள் இதழ்கள் வெளியிட தயக்கம் காட்டுகின்ற இன்றைய சூழலில் புக்டே தொடர்ந்து மருத்துவ நூல்கள் குறித்த எனது கட்டுரைகளை பதிவேற்றம் செய்து அதிக வாசகபார்வையாளர்கள் கொண்ட தனது தளத்தில் அறியப்படுத்தி அறப்பணி செய்து வருகிறது. விரைந்து நோய் குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்கிற விருப்பத்தை முன் வைத்து புக்டே இணைய இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. மேன்மேலும் வாசக வட்டம் பெருகி சிறக்க எனது வாழ்த்துக்களை பதிவு செய்து எனது மகிழ்ச்சியையும் அன்பையும் இங்கு பகிர்கிறன்‌. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *