நவம்பர் 01 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜாக்ஸ் ஜோஸ் மார்டோச் அட்டாலி (Economist Jacques Jose Mardoche Attali Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

நவம்பர் 01 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜாக்ஸ் ஜோஸ் மார்டோச் அட்டாலி – முனைவர் பு. அன்பழகன்

ஜாக்ஸ் ஜோஸ் மார்டோச் அட்டாலி (Jacques Jose Mardoche Attali) நவம்பர் 1, 1943இல் பிறந்த பிரெஞ்சு பொருளாதார அறிஞரான இவர் சமூக கோட்பாட்டாளர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர் போன்ற பன்முக ஆற்றல் கொண்டவராவார். ஜாக் ஆட்டாலி, International NGO Action Against Hunger (Action Contre La Faim), EBRD, Positive Planet என்ற நான்கு சர்வதேச நிறுவனங்களை நிறுவியுள்ளார். Positive Planet (பாசிட்டிவ் பிளானட்), அதன் பிற நிறுவனங்களுடன் சேர்ந்து, 22 ஆண்டுகளாக பிரான்ஸ், ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நேர்மறையான பொருளாதாரத்தை (positive economics) ஊக்குவித்து நேர்மறையான வணிகங்களை உருவாக்குவதை ஆதரித்து வருகிறது.

இந்த அமைப்பானது 11 மில்லியனுக்கும் அதிகமான சிறு தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது. ஜாக் அட்டாலி 85க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், அவை 10 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளது, மேலும் இப் புத்தகங்கள் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாக் ஆட்டாலி, புகழ்பெற்ற பிரெஞ்சு பத்திரிகையான Les Echosஇன் கட்டுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக் அட்டாலியின் முக்கிய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் துறைகளாக, நகரத் திட்டமிடல், சுற்றுச்சூழல், காலநிலை, தொழில்நுட்பங்கள், பொருளாதாரம், சித்தாந்தங்கள், புவிசார் அரசியல் மற்றும் மதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியதாகும்.

1989ஆம் ஆண்டில், பங்களாதேஷில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைத் திட்டத்தையும் ஜாக் அட்டாலி தொடங்கினார். அணுசக்தி பெருக்கத்தின் அபாயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஜாக் அட்டாலி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அனைத்து ஐரோப்பிய நாடுகளின் உயர் கல்வியில் பெறப்படும் பட்டங்களையும் சமப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட LMD எனப்படும் உயர்கல்வி சீர்திருத்தத்தின் முக்கியப் பங்கேற்பாளராக அவர் திகழ்கிறார். ஐரோப்பாவின் எதிர்காலம் மற்றும் உலகமயமாக்கலின் சவால்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் அவர் ஆழ்ந்த அறிவாற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார்.

ஆதாரம்: www.lesrencontreseconomiques; www.berggruen.org; www.speakersassociates.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *