கொலின் கிராண்ட் கிளார்க் (Colin Grant Clark) நவம்பர் 2, 1905இல் பிறந்து செப்டம்பர் 4, 1989இல் மறைந்த பிரித்தானிய-ஆஸ்திரேலிய பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளிவிவர நிபுணர் ஆவார். கோலின் கிளார்க், தேசிய வருமானம் மற்றும் மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் ஆழ்ந்த அறிவாற்றல் பெற்றிருந்தார். கோலின் கிளார்க், அரசுத் துறைகளில் பல்வேறு பதவிகளையும், பல்கலைக் கழகங்களில் அழைப்பு பேச்சாளராகவும், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள Institute for Research in Agricultural Economicsஇல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவருடைய முதல் புத்தகம் The National Income 1924-31 என்பதாகும், இப் புத்தகத்திற்காக அவர் கீன்ஸின் பாராட்டைப் பெற்றுள்ளார். எட்டு மகன்கள், ஒரு மகள், 50 பேரக் குழந்தைகளுடன் பெரிய குடும்பமாக அவர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலின் கிளார்க் பிரித்தானிய நாட்டிற்கான நவீன தேசிய வருமானக் கணக்குகளின் முதல் தொகுப்பைத் தொகுத்தார். கோட்பாடுகளைப் புள்ளிவிவரங்கள் கொண்டு வடிவமைத்து உரையாடல்களாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பங்களிப்பினை அளித்ததற்காக கிளார்க் மிகவும் புகழ்பெற்றவர் ஆகிறார். அவர் உலகளாவிய அளவில் புள்ளி விவரங்கள் சேகரிப்பை மேற்கொண்டு 1939இல் தனது புகழ்பெற்ற Conditions of Economic Growth என்ற புத்தகத்தை வெளியிட்டார், இது ஐரோப்பிய நாடுகளுக்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளியை அளவு ரீதியாகத் தெளிவுபடுத்தும் முதல் ஆய்வென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிளார்க், 1942இல் இருபது ஆண்டுகளுக்கு (1960ஆம் ஆண்டு முடிய) உலகப் பொருளாதாரத்தைப் பற்றிய முன் கணிப்பு மாதிரியினை உருவாக்கினார். வளர்ச்சியில் மூலதன முதலீட்டை ஒரு தீர்மானிக்கும் காரணியாகப் பகுப்பாய்வு செய்த அவர், முதலில் capital hunger மற்றும் capital stiation என்ற சொற்களைப் பயன்படுத்தினார். அவரது நீண்ட கால கணிப்புகள் பல தவறாக இருந்தும், capital hunger அடிப்படையாகக் கொண்ட போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் நீண்ட மற்றும் நீடித்த காலகட்டத்தைப் பற்றிய அவரது கணிப்பு சரியானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.hetwebsite.net ; www.adb.anu.edu.au, www.kids.kiddle.co/Colin_Clark_(economist)
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

