அமர்த்தியா சென் (Amartya Sen) நவம்பர் 3, 1933இல் இந்தியாவில் பிறந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் ஆவார். அவரின் நலப் பொருளாதாரம் மற்றும் சமூக தேர்வுக் கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காகவும், சமூகத்தின் நிலவும் ஏழ்மையின் பிரச்சினைகளில் பற்றிய அவருடைய எழுத்துகளுக்காகவும் 1998ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பஞ்சத்திற்கான காரணங்கள் குறித்த அவரது பணிக்காக சென் மிகவும் பிரபலமானவராகக் கருதப்படுகிறது. அவருடைய கருத்து, உண்மையான அல்லது உணரப்பட்ட உணவு பற்றாக்குறையின் விளைவுகளைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான நடைமுறை தீர்வுகளை உருவாக்க வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது. சென், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பொருளாதார பள்ளி ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
தனிநபர் உரிமைகள், பெரும்பான்மை ஆட்சி மற்றும் குறிப்பிட்ட நிலைமைகள் பற்றிய தகவல்களின் கிடைக்கும் தன்மை, பிரச்சினைகள் குறித்து சென்னின் உரையாடல்கள் மிகவும் செல்வாக்கினைப் பெற்றதாக உள்ளது. அவருடைய கட்டுரையான Collective Choice and Social Welfare (1970) என்பது, ஆராய்ச்சியாளர்களை அடிப்படை நலன் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தூண்டியது. ஏழைகளுக்கான பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்குப் பயனுள்ள தகவல்களை வழங்கும் வறுமையை அளவிடும் முறைகளை சென் வகுத்தார். Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation (1981) என்ற தனது புத்தகத்தில், பஞ்சத்தின் பல சந்தர்ப்பங்களில், உணவு விநியோகம் கணிசமாகக் குறைக்கப்படவில்லை என்பதை சென் வெளிப்படுத்தினார். அதற்குப் பதிலாக, குறைந்து வரும் ஊதியங்கள் அல்லது கூலி, வேலையின்மை, உணவு விலைகள் உயர்வு மற்றும் சரியற்ற உணவு விநியோக முறைகள் போன்ற பல சமூக மற்றும் பொருளாதார காரணிகள் சமூகத்தில் சில குழுக்களிடையே பட்டினிக்கு வழிவகுத்தன என்று குறிப்பிடுகிறார்.
ஒரு சமூகத்தில் வறுமையின் நிலையான அளவீடானது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் விகிதத்தில் ஒரு முக்கிய தரவை விட்டுச்செல்கிறது என்றும் சென் சுட்டிக்காட்டினார். வறுமையை மட்டுமல்ல, அதன் தீவிரத்தையும் அளவிட அவர் தனிப்பட்ட குறியீட்டை (indiex) உருவாக்கினார். பொருளாதார வளர்ச்சியை அடைய, கல்வி மற்றும் பொதுச் சுகாதாரத்தில் சீர்திருத்தங்கள் பொருளாதார சீர்திருத்தத்திற்கு முன்னதாகவே செய்யப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார். சென்னின் ஆராய்ச்சி மற்றும் கருத்துக்கள் கல்வி, பொதுசுகாதாரத் துறைகளின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. சென், modern social-choice (நவீன சமூக-தேர்வு கோட்பாட்டின்) நிறுவனர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார்.
ஆதாரம்: www.britannica.com; www.news.harvard.edu; www.nobelprize.org; www.econlib.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

